சனி, 27 மார்ச், 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 27 Mar 2021

 

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*

by : Eddy Joel Silsbee

 

சபைக்கு தலையாகிய கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

கிறிஸ்துவை தலையாக கொண்டு இருக்கிற ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் அவரது சபை என்றழைக்கப்படும் அவருடைய சரீரத்தில் அங்கமாய் இருக்கிறார்கள்.

 

கிறிஸ்துவை மாத்திரமே தலையாய் கொண்டிருக்கும் அந்த சரீரத்தில் அல்லாத மற்றவர் சொல்வதை இந்த அங்கங்கள் உணர்ந்தாலும்,  கேட்டாலும் “சொந்த தலை (கிறிஸ்து)” அதை ஆமோதிக்கும் வரை, அதாவது அவரது வார்த்தையில் (வேதாகமத்தில்) இருந்தாலன்றி செயலில் இறங்காது.

 

அது போல, வேதத்தில் இல்லாத எந்த போதனைகளும், கட்டளைகளும், முறைமைகளையும் கிறிஸ்தவ நாடக நடிகர்களும், குடுகுடுப்பைக்காரர்களும் பேசும் எந்த பேச்சும் தலையாகிய கிறிஸ்து சொன்ன உபதேசத்தில் இல்லாத பட்சத்தில், சரீரமாகிய சபை செவிசாய்த்தால், அது தவறான தலையைக் கொண்டுள்ளது என்பதில் எந்த ஐயமுமில்லை !

 

நாமோ ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறோம் என்று வேதம் சொல்லுவதை (1பே 2:5) நாம் எப்போதும் நினைவில் கொள்வோம்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,

+91 8144 77 6229

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr  

 

*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :

https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக