ஞாயிறு, 3 ஜனவரி, 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி, 3 Jan 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee

அன்பின் ஆண்டவராகிய நம் இயேசு இராஜாவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

லேசான பொறாமையை நாள் கடந்து கூடவே தாங்கி செல்லும் போது, எரிச்சலாக மாறி, சொந்த சமாதானத்தை குலைத்துபோடும்.

தேவன் நமக்கு கொடுத்தது போதும் என்றிருந்திருந்தால் – காயீன் கொலைக்காரனாகியிருக்கமாட்டான்.

சமாதான ஆண்டவர் வாசலில் நியாயத்தீர்ப்பு கொடுக்க காத்துக்கொண்டு இருக்கிறார். யாக்5:9

வைராக்கியமும், கோபமும், பொறாமையும், எரிச்சலும் – உலக வாழ்கையையும், ஆன்மீக வாழ்க்கையையும் வீணாக்கிவிடும். யாக். 3:16

மற்றவரிடம் உள்ள நமக்கு பிடிக்காததை நம் இருதயத்தில் தாங்கும் போது சொந்த இருதயம் தான் பாழாகும்.

அது நாளடைவில், பொறாமையாகவும், விரோதமாகவும் மாறி சொந்தக்குடும்ப சமாதானத்தையே கெடுத்துப்போட்டுவிடும்.

நமக்கென்று தேவன் கொடுத்த தன்மையும், அன்பும், கிருபையும், நமக்கு மேன்மை என்று எண்ணி நன்மையை, சத்தியத்தையே பற்றிக்கொள்வோம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
+91 8144 77 6229

*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

எங்களது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக