வெள்ளி, 8 ஜனவரி, 2021

#1066- இரட்சிக்கப்பட்ட நாங்கள் ஒரு சபையில் மட்டும் தான் இருந்து ஊழியம் செய்ய வேண்டுமா? சபைக்கு வெளியில் தனிப்பட்ட ரீதியாகவோ, குழுவாகவோ இணைந்து செய்யக்கூடாதா? அந்த ஊழியத்தை கர்த்தர் அங்கீகரிக்க மாட்டாரா? அப்படி செய்யும் பட்சத்தில் கர்த்தருடைய வருகையில் கைவிடப்படுவோம் என்றும், சபையோடு மட்டும் இருந்தால் மட்டுமே எடுத்து கொள்ளப்படுவோம் என்றும் சில போதகர்கள் போதிக்கிறார்கள்.. இது சரியா? சபைக்கு அப்பாற்பட்டு ஆண்டவருடைய அழைப்பு இருக்கும் பட்சத்தில் தனியாக சில காரியங்கள் செய்வது தவறா? விளக்கவும்.

#1066- *இரட்சிக்கப்பட்ட நாங்கள் ஒரு சபையில் மட்டும் தான் இருந்து ஊழியம் செய்ய வேண்டுமா?* சபைக்கு வெளியில் தனிப்பட்ட ரீதியாகவோ, குழுவாகவோ இணைந்து செய்யக்கூடாதா? அந்த ஊழியத்தை கர்த்தர் அங்கீகரிக்க மாட்டாரா? அப்படி செய்யும் பட்சத்தில் கர்த்தருடைய வருகையில் கைவிடப்படுவோம் என்றும், சபையோடு மட்டும் இருந்தால் மட்டுமே எடுத்து கொள்ளப்படுவோம் என்றும் சில போதகர்கள் போதிக்கிறார்கள்.. இது சரியா? சபைக்கு அப்பாற்பட்டு ஆண்டவருடைய அழைப்பு இருக்கும் பட்சத்தில் தனியாக சில காரியங்கள் செய்வது தவறா? விளக்கவும்.

பதில் : சபை உறுப்பினர்கள், அவர்களது சபை மூப்பர்களுக்கு கட்டுப்பட்டு இருக்கவேண்டியது அவசியம். எபி. 13:17

மூப்பர்களாக நியமிக்கப்பட்டவர்கள், வயதிலும், விசுவாசத்திலும், அனுபவத்திலும், மூத்தவர்கள். மூப்பர்களின் தகுதியைக் குறித்து அறிய கேள்வி #933 & #942ஐ காணவும்.

ஆசாரிய ஊழியத்திற்கென்று எவரையும் தனியாக தேவன் அழைப்பதில்லை.
ஊழியம் என்பது ஒருவருக்கு மட்டும் நியமிக்கப்பட்டதும் அல்ல.
விசுவாசிகள் அனைவருமே கர்த்தருக்கு ஊழியம் செய்ய அழைக்கப்பட்டவர்கள். 1பேது.2:9

எந்த இடத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார்களோ அந்த இடத்தில் உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொண்டு காலம் முழுவதும் இருக்கவேண்டும் என்பதல்ல, இரட்சிக்கப்பட்டவர்களை தேவன், கிறிஸ்துவின் சரீரத்திலே அங்கமாக சேர்க்கிறார். அப். 2:47, எபே. 5:30, அப். 5:14, 11:24

நம்மை இரட்சிப்பிற்குள் நடத்தினவர்களை நாம் கனப்படுத்தி அவர்களுக்கு சத்தியத்தின்படி கீழ்படிந்து இருக்கவேண்டியது அவசியம். 1கொரி. 16:16, எபி. 13:17, 7

“சபைக்கு வெளியில் தனிப்பட்ட ரீதியாகவோ, குழுவாகவோ இணைந்து செய்யக்கூடாதா என்ற கேள்விக்கு” - கிறிஸ்தவர்கள் சபையில் குழுவாக, ஐக்கியமாக இருப்பவர்கள். தனிப்பட்ட ரீதியில் ஒரு கூட்டத்தை கூட்டவேண்டிய அவசியம் ஏற்படும் சூழல் மற்றும் எப்படிப்பட்ட செயல்பாடு என்பதும் தெரியப்படுத்தவில்லை என்பதால், அறியாமல் பதில் எழுதுவது தவறு.

1-
சத்தியத்தின்படி முறையான காரணமில்லாமல்,
வாரத்தின் முதல் நாளில் ஓரிடத்தில் கூடி தேவனைத் தொழுது கொள்ளும் ஐக்கியத்தை விட்டு,
தனியாக ஒரு செயல்பாட்டை துவங்குவது என்றால் ஐக்கியத்திற்குள் பிளவை உண்டுபண்ணும். அது தவறு.
சத்தியம் முறையாக போதிக்கப்படாததை எடுத்துக்கூறிய பின்பும், கடைபிடிக்கப்படாமல் இருந்தால், தனியாக செல்வது அவசியம். 1தீமோ.6:5

2-
மற்ற நாட்களில் தங்கள் வீடுகளில் அருகாமையில் உள்ளவர்களை சேர்த்து வேதத்தை ஆராய்ந்து அறிய, ஜெபிப்பதில் எந்த தவறும் இல்லை (அப். 12:12).
அப்படிப்பட்ட கூடுகையை, சபை மூப்பர்களுக்கும் பொருப்பில் உள்ள ஊழியர்களுக்கும் அறிவிக்காமல் செயல்படுத்துவது, ஐக்கியத்தின் அன்பில் விரிசலை உருவாக்கும் (தீத்து 3:1). விசுவாச வளர்ச்சிக்கென்று கூடும் அப்படிப்பட்ட கூடுகையை ஐக்கியத்தில் உள்ள ஊழியர்களும் மூப்பர்களும் எதிர்ப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அதற்குரிய தகுந்த ஆலோசனை வழங்கவேண்டியது மூப்பர்களின் கடமை. 1பேது.3:15, 2தீமோ. 2:24

3-
தொலைதூரம் பிரயாணிக்க வேண்டியுள்ளதால் அருகாமையில் நாங்கள் தனியே கூடுகிறோம் என்று தனியாக இயங்க துவங்கும் போது, தகுதியுள்ள, சத்தியத்தை அறிந்த ஊழியர்கள், வழிநடத்துபவர்கள் உருவாகியுள்ளார்களா என்பது கேள்வி.

4-
தற்போது உள்ள ஐக்கியத்தில் சரியான இணக்கமில்லாமல், அல்லது சத்தியத்திற்கு மாறாக செயல்படுவதாக நினைத்தால் இரண்டு அல்லது மூன்று பேருடன் சேர்ந்து வேதத்தின் அடிப்படையில் நேரடியாக எடுத்துச்சொல்லும் கடமை உறுப்பினர்களுக்கு உள்ளது. மத். 18:16, 1தீமோ.5:19

5-
ஆண்டவருடைய அழைப்பு அனைவருக்கும் விடுக்கப்பட்ட பொதுவான விசேஷ அழைப்பு.

எந்த சூழ்நிலை என்பதை அறியாததால், நான்கு விதமான சூழ்நிலையயை கருத்தில் கொண்டு பதிலளித்துள்ளேன்.

அந்தியோகியாவில் உள்ள சபை, எருசலேமில் உள்ள மூப்பர்களின் கைகளில் உதவி அனுப்பியது (அப்போஸ்தலர் 11: 27-30), பவுலையும் பர்னபாவையும் ஊழியத்திற்கு அனுப்பியது (அப்போஸ்தலர் 13: 1-3), பவுலும் பர்னபாவும் செய்த செயல்பாட்டின் அறிக்கையைக் கேட்டதும் (அப்போஸ்தலர் 14: 26-28), பவுலையும் பர்னபாவையும் எருசலேமுக்கு அனுப்பி, ஒரு சர்ச்சையைத் தீர்ப்பது பற்றி அப்போஸ்தலரிடமும் அங்குள்ள மூப்பர்களிடம் விசாரித்தார்கள் என்பதும் நமக்கு பாடங்கள். (அப்போஸ்தலர் 15: 2).

விதவைகள் விசாரிக்கப்படும்படி எருசலேமில் உள்ள சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பேர் சபைக்கான பணிகளைச் செய்ய நியமிக்கப்பட்டார்கள் என்பதையும் அறிவோம். அப்.6:1-3

ரோமாபுரியில் இருந்தபோது பெபேயோள், கெங்கிரேயாவில் உள்ள சபைக்காக ஒரு ஊழியத்தை செய்து கொண்டிருந்தார் (ரோமர் 16: 1-2).

ரோமாபுரியில் உள்ள சபைக்காக கடினமாக உழைப்பதாக மரியாள் குறிப்பிடப்படுகிறார் (ரோமர் 16: 6).

கொரிந்திய பட்டணத்தில் உள்ள சபையின் சார்பாக பவுலுக்கு உதவி செய்ததாக ஸ்தேவான், பொர்த்துனாத்து மற்றும் அகாயு குறிப்பிடப்பட்டுள்ளனர் (1 கொரிந்தியர் 16: 17-18).

சபைகளில் இருந்து நிவாரண நிதியை எருசலேமுக்கு கொண்டு செல்ல ஒரு சகோதரர் நியமிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது (2 கொரிந்தியர் 8: 18-22). சபையின் சார்பாக பணிகளைச் செய்ய தனிநபர்கள் நியமிக்கப்பட்டனர் என்பதை நாம் அறிவோம்.

தனிப்பட்டு செயல்படும் எந்தவிதமான நோக்கமும் எடுத்துக்காட்டாக சொல்லும்படி (கிறிஸ்தவத்தில்) வேதத்தில் காணமுடியாது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக