புதன், 6 ஜனவரி, 2021

#1063- சபையின் ஆட்சி முறை எப்படியிருக்கவேண்டும்? இன்று ஒரே வேதாகமத்தை வைத்துக்கொண்டு பல பிரிவுகளாக பிரிந்து காணப்படும் திருச்சபைகள் பெருகுவிட்டன.... எனவே உண்மையில் வேதத்தின்படி சபை ஆட்சிமுறை எவ்வாறு அமையவேண்டும்.....?

#1063- *சபையின் ஆட்சி முறை எப்படியிருக்கவேண்டும்?*  இன்று ஒரே வேதாகமத்தை வைத்துக்கொண்டு பல பிரிவுகளாக பிரிந்து காணப்படும் திருச்சபைகள் பெறுகிவிட்டன சபைகளின் ஆட்சிமுறைகளை பார்க்கும் போது வேறுபட்டதாகவே காணப்படுகிறது.... எனவே உண்மையில் வேதத்தின்படி சபை ஆட்சிமுறை எவ்வாறு அமையவேண்டும்.....?

சின்ன பாஸ்டர், பெரிய பாஸ்டர், ரெவரன்ட், மூப்பர், சகோதரர் இது சரி எது, விளக்கவும்.

*பதில்* : ஆதி காலத்திலிருந்து இன்று வரை, கிறிஸ்துவின் வருகை வரையிலும் சபை என்பது ஒன்று தான்.

தேவனுடைய திட்டத்தின் படி சபை என்றால் என்ன, சபை என்னவாக இருக்க வேண்டும் என்பதை புதிய ஏற்பாடு நமக்குக் கற்பிக்கிறது.

முதலாவதாக, சபை கிறிஸ்துவால் கட்டப்பட்டு வாங்கப்பட்டது (மத். 16:18; அப். 20:28).

தேவனால் அங்கீகரிக்கப்பட்டது என்று கூறிக்கொண்டு, தங்களுக்கு தாங்களே ஒரு நிறுவனத்தை (சபை அல்லது ஊழியம் என்ற பெயரில்) தொடங்க எவருக்கும் உரிமை இல்லை (1 கொரி. 1: 10-13).

தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து மட்டுமே தகுதியானவர், அவர் தம்முடைய சபையை நிறுவினார் (எபே. 4: 4; 1: 22-23).

“கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுல் உங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டாரா? அல்லது பவுலின் பெயரால் நீங்கள் ஞானஸ்நானம்  பெற்றீர்களா?” என்று கொரிந்திய சபைக்குள் கொள்கை பிளவு ஏற்பட்டபோது, பவுல் இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்டார். (1 கொரி. 1:13).

கிறிஸ்துவின் நற்செய்தியானது, சத்தியங்களின் அடிப்படையில் சபை என்பது கிறிஸ்துவுக்கே சொந்தமானது. அதற்காக அவர் மரித்தார். அவர் அந்த சபையை கட்டினார்.

நாம் அவருக்கு சொந்தமானவர்கள். சபை கிறிஸ்துவுக்கு சொந்தமானது.
அவரே சபைக்கு தலைவர் (கொலோ. 1:18).

அப். 2-ல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி பெந்தெகொஸ்தே நாளில் எருசலேமில் கிறிஸ்துவுக்குச் சொந்தமான சபை தொடங்கியது.

ரோம், சூரிச், லண்டன், இலங்கை, இந்தியா போன்ற இடங்களில் அல்லது வேறு எந்த இடத்திலும் தோன்றிய அல்லது உருபெற்றவை வேதத்தின்படி அங்கீகரிக்கப்படமாட்டாது.  அது அவரவர் சொந்தமாக நிறுவிக்கொண்டவை. அவர்களே அதற்கு Founder என்று போட்டுக்கொள்வதை காணமுடியும்.

பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்திற்கு ஏற்ப எருசலேமில் அப்போஸ்தலர்களின் பிரசங்கத்தின் மூலம் கர்த்தருடைய சபையானது கிறிஸ்துவால் நிறுவப்பட்டது (ஏசா. 2: 2-4).

பவுல் மற்றும் அப்போஸ்தலர்கள் மற்றும் அநேக ஆதி கிறிஸ்தவர்கள் மூலம் நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டபோது,  உலகம் முழுவதும் அவரவர்கள் தங்கள் தங்கள் இஷ்டத்திற்கு பெயரை வைத்து சபைகளை துவங்காமல், அந்தந்த ஊர் பெயரிலேயே சபை நடந்தது. கொரிந்து சபை, எபேசு சபை, தெசலோனிக்கேய சபை என்றே வேதாகமத்தில் காணமுடியும்.

எருசலேமில் முதன்முறையாக பிரசங்கிக்கப்பட்டதைப் போலவே - கிறிஸ்துவின் நற்செய்தி கற்பிக்கப்பட்ட இடங்களிளெல்லாம், கிறிஸ்துவுக்கு சொந்தமான கிறிஸ்தவர்கள், கூட்டாக கிறிஸ்துவின் சபையார் என்றே அழைக்கப்பட்டார்கள். ரோ. 16:16

சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிகிறவர்கள் கர்த்தருடைய திருச்சபையின் ஒரு அங்கமாக இருக்கிறார்கள்.

கிறிஸ்துவின் திருச்சபை (ரோமர் 16:16) மற்றும் தேவனுடைய திருச்சபை (1 கொரி. 1: 2) போன்ற பெயர்கள் தேவாலயத்தை கிறிஸ்துவுக்கும் தேவனுக்கும் சொந்தமானது என்று விவரிக்கும் வேத பெயர்கள்.

யார் எவர்கள் எப்படிப்பட்டவர்கள் சபையை நிர்வகிக்க வேண்டும் என்று கிறிஸ்துவானவர் மிகவும் தெள்ளத்தெளிவாக அப்போஸ்தலர்கள் மூலம் பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு எழுதி வைத்துள்ளார்.

மூப்பர், கண்காணி, பாஸ்டர், மேய்ப்பர் போன்றவை அனைத்தும் ஒரே அர்த்தம் கொண்டவை.

கிரேக்க பாஷையில் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டில் மூன்று கிரேக்க பதங்கள் இந்த வார்த்தையை அடிப்படையாக கொண்டுள்ளது.

பிரஸ்பூடிரோஸ் என்கிற வார்த்தைக்கு – மூப்பர் என்றும்

பொய்மென் என்கிற வார்த்தைக்கு – பாஸ்டர் அல்லது மேய்ப்பர் என்றும்

எபிஸ்கோபஸ் என்கிற வார்த்தைக்கு – கண்காணி என்றும் அர்த்தம் உள்ளது.

மேலே சொல்லப்பட்ட இந்த எல்லா வார்த்தையும் ஒரே அர்த்தத்தை அல்லது பதத்தை குறிக்கும். இந்த வசனங்களை படிக்கவும். அப். 20:17, 20:28, 1பேது. 5:1-3

மேலும், இந்த பதங்கள் வேதத்தில் எங்கும் பன்மையிலேயே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு சபையில் ஒரு தலைமை அல்ல, பன்மையாக இருத்தல் அவசியம் என்பதை குறிக்கிறது.

சபையில் ஒற்றை தலைமைக்கு வேதத்தில் இடமில்லை !!

மேலும், மூப்பர், அல்லது கண்காணி அல்லது பாஸ்டர் என்று அழைக்கப்படுபவர் –
1- வயதானவராக இருக்க வேண்டும்
2- ஆணாக இருக்க வேண்டும்
3- திருமணமானவராக இருக்க வேண்டும்
4- சொந்த பிள்ளைகள் பெற்றிருக்க வேண்டும் – அவர்கள் தேவனுக்குள் இருக்க வேண்டும். பிள்ளை இல்லாதவர்கள் – மூப்பராகவோ பாஸ்டராகவோ கண்காணியாகவோ இருக்க வேதம் அனுமதிக்கவில்லை.
5- புதிய கிறிஸ்தவராகவும் இருக்கக்கூடாது

வாசிக்கவும் - தீத்து 1:5-9

மேலும் பாஸ்டர் என்று சொல்லப்படுபவர் – கீழ்கண்டவற்றில் தேறியிருக்க வேண்டும்:

- சபையை மேய்க்கும் அனுபவம் (அப். 20:28)
- போதிக்க அறிந்திருக்க வேண்டும் (1தீமோ. 3:2)
- முன் உதாரணமாக இருக்கவேண்டும் (எபி. 13:7)
- ஆத்துமாக்களை கவனிக்க வேண்டும் (எபி. 13:17)
- தவறான போதனையை கண்டிக்க தெரிந்திருக்க வேண்டும் (தீத்து 1:9)

இந்த பொருப்பில் – பெண்களுக்கு இடமில்லை.

அனைவரும் சகோதரர் என்றே அழைக்கப்படவேண்டும். மத். 23:8

பாஸ்டர் / பிஷப் / கண்காணி / ரபீ / ரபூனி என்பதெல்லாம் வேலையின் பெயர்.
செய்யும் வேலையை பட்டமாக வைத்துக்கொள்ள கூடாது !!!

ஊழியக்காரன் என்று நாகரீகமாக அழைக்க விரும்புபவர்கள் தங்களை வேலைக்காரன் என்று அழைக்க அனுமதிப்பார்களா?

மருத்துவரை கவுரவமாக டாக்டர் என்று அழைத்து பழகிவிட்ட சமுதாயம்
குப்பை சுத்தம் செய்பவர் என்று தங்கள் தொழிலை வைத்து அழைப்பதில்லையே !!

சகோதரர் என்றே நாம் அழைக்கப்படவேண்டும்

சபையின் ஊழியரும், விசுவாசிகளும் பாஸ்டர்களுக்கு (மேய்ப்பர்கள்/ மூப்பர்கள் /  கண்காணிகள்) கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். சபையின் நிர்வாகம் அவர்கள் கையில் உள்ளது. எபி. 13:7, 17, 24, 1 தீமோ. 5:17, 1தெச. 5:12.

ஆகவே, மூப்பர்கள் அனைவரும் சபை ஊழியர்களாக இருக்க முடியும். ஆனால், எல்லா ஊழியர்களும் மூப்பர்களாக இருக்கமுடியாது.

சபை நிர்வாகம் என்பது வசனத்தின்படி  ஊழியர்கள் கையில் அல்ல, மூப்பர்கள் கையில் உள்ளது !!

ரெவரென்டு என்பது தேவனுடைய நாமம்.
அந்த பட்டத்தை எந்த மனிதரும் போட்டுக்கொள்ள முடியாது.

சங். 111:9 அவர் தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது (பயங்கரமானவர் என்றால் ஆங்கிலத்தில் ரெவரெண்டு !!!  

அதை மனிதர்கள் எப்படி போட்டுக்கொள்ள முடியும்? 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக