புதன், 6 ஜனவரி, 2021

#1061- யாத். 32:24-25ல் ஆரோன் இஸ்ரவேலரை நிர்வாணமாக்கியிருந்தான் என்ற வசனத்தை விளக்கவும்.

#1061- *யாத். 32:24-25ல் ஆரோன் இஸ்ரவேலரை நிர்வாணமாக்கியிருந்தான் என்ற வசனத்தை விளக்கவும்*.

*பதில்* : பவ்ரா என்ற எபிரேய வார்த்தைக்கு நிர்வாணம் என்று தமிழில் உள்ளது. ஆனால், அந்த வார்த்தைக்கு கீழ் வரும் அர்த்தங்களும் உள்ளது.

தளர்த்தப்பட்ட; அம்பலப்படுத்துவது; அப்புறப்படுத்துதல்; உருவகமாக முழுமையானது; பழிவாங்குதல்; தவிர்ப்பது; வெறுமை; நிர்வாணமாக்குவது;  நிர்வாணம்; அழிப்பது; மறுப்பது; வெளிப்படுத்துவது போன்றவைகள்.

அந்த வசனத்தின் சூழலை கவனிக்கும் போது, அந்த இடத்தில் இருந்த இஸ்ரவேலர்கள் தங்களுக்கு ஆபத்து வந்தால் வீழ்ந்து போகும் அளவிற்கு மிகவும் உதவியற்ற மற்றும் மோசமான நிலையில் தங்கள் அனைத்து ஆயுதங்களையும் களைந்து விட்டதாக அறியமுடிகிறது.

வசனத்தை மீண்டும் கவனியுங்கள்:  

யாத். 32:25 ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான். அவர்கள் நிர்வாணமாயிருக்கிறதை மோசே கண்டு,

அவர்கள் எதிரிகளின் மத்தியில் தேவனால் கைவிடப்பட்டனர்.

இதே உதாரணம் 2 நாளாகமம் 28:19ல் தெளிவாக ஆங்கிலத்தில் காணமுடியும். எபிரேயத்தில் வரும் பவ்ரா என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் நேக்கட் என்றும் தமிழில் தாழ்த்தினார் என்றும் உள்ளது. அந்த வசனங்களை கீழே பதிவிடுகிறேன்.

2நாளாகமம் 28:19 யூதாவின் ராஜாவாகிய ஆகாசினிமித்தம் கர்த்தர் யூதாவைத் தாழ்த்தினார்; அவன் யூதாவைச் சீர்குலைத்து, கர்த்தருக்கு விரோதமாய் மிகவும் துரோகம்பண்ணினான்.

2 Chronicles 28:19
(ஆங்கிலத்தில் வெவ்வேறு மொழிபெயர்ப்புகள் கீழே உள்ளது)

(KJV) For the LORD brought Judah low because of Ahaz king of Israel; for he made Judah naked, and transgressed sore against the LORD.

(Webster)  For the LORD brought Judah low because of Ahaz king of Israel: for he made Judah naked, and greatly transgressed against the LORD.

(BBE)  For the Lord made Judah low, because of Ahaz, king of Israel; for he had given up all self-control in Judah, sinning greatly against the Lord.

(Darby)  For Jehovah humbled Judah because of Ahaz king of Israel, for he had made Judah lawless, and transgressed much against Jehovah.

(DRB) For the Lord had humbled Juda because of Achaz the king of Juda, for he had stripped it of help, and had contemned the Lord.

ஆகவே, அவர்களின் நிர்வாணம், முதல் அர்த்தத்தில் அவர்களில் பலர் தங்கள் ஆபரணங்களைக் கெடுத்துவிட்டார்கள் என்பதைக் குறிக்கலாம்.

ஆனால் அது அவர்களின் பாவத்தின் விளைவாக, அவர்களின் பாதுகாப்பற்ற மற்றும் கைவிடப்பட்ட நிலையை வெளிப்படுத்தக்கூடும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக