வெள்ளி, 1 ஜனவரி, 2021

#1059- பல வருடங்களாக சில விசுவாசிகள் ஓரிடத்தில் கூடிவந்தார்கள். சில பிரிவினைவாதிகள் வந்து இன்னொரு சபை கட்டி ஆத்துமாக்களை திருடி சென்றார்கள். இது அந்த ஊழியரின் குறையா அல்லது ஆத்துமாக்களின் குறையா?

#1059- *பல வருடங்களாக சில விசுவாசிகள் ஓரிடத்தில் கூடிவந்தார்கள். சில பிரிவினைவாதிகள் வந்து இன்னொரு சபை கட்டி ஆத்துமாக்களை திருடி சென்றார்கள். இது அந்த ஊழியரின் குறையா அல்லது ஆத்துமாக்களின் குறையா*?

*பதில்* : போதனை சரியில்லை என்றால் எத்தனை வருடம் உறுப்பினராக இருந்தாலும் அங்கு அவர்களது கிறிஸ்தவ வாழ்க்கையில் வளர்ச்சியே இருக்காது.

அங்கு சொல்லப்படும் போதனை, வேதத்தின் படி தவறு என்று அறிந்த பின்பும்,
எங்க பாஸ்டர், எங்க ஊர் சபை, எங்க ஆளுக வரும் சபை, எங்க குடும்பம் தான் இந்த சபையில் எப்போதும் எதற்கும் முன்னால நிக்கும் என்று பல காரணங்களை முன்னிட்டு குடும்ப விழாவைப் போல நடப்பதற்கு கிறிஸ்தவத்தில் இடமில்லை.

தவறான ஆசிரியரிடம் படித்து பயின்று எத்தனை முறைகள் தேர்வு எழுதினாலும், தோல்வியடைவது நிச்சயம். தன் குருவைப் போலவே கற்றவனும் இருப்பான். லூக்கா 6:40

தேர்ச்சிப்பெற வேண்டுமெனில், சரியான ஆசிரியரிடம் முறையாக கற்க வேண்டியது அவசியம். தீத்து 2:7-8

நீங்கள் குறிப்பிடும் இடம் மற்றும் கொண்டு போகப்பட்ட இடத்தை நான் அறியேன். ஆனால், சத்தியம் இருக்கும் இடத்தில் ஆத்துமாக்கள் செழிப்பாக வளர்வார்கள். 1நாளா.4:40, சங். 66:12, நீதி. 28:25, ஏசா. 32:16

வேறு ஏதேனும் சுய லாபத்திற்காக இடம் மாறுகிறார்கள் என்றால், முறையாக சொல்லி தரப்பட்டிருந்தும், மனந்திரும்பும் எண்ணம் இல்லாதவர்களாகவும் இருக்கலாம். 2தீமோ. 4:3-4, மத். 19:22

பெயர்பலகை மாத்திரம் இல்லையென்றால், வந்த இடம் கேளிக்கை விடுதியோ என்று சந்தேகப்படும் அளவிற்கு இக்கால கிறிஸ்தவ மத சபைகள் தங்கள் நடவடிக்கைகளிலும், மேடை அலங்காரத்திலும் பெருகிவிட்டது.

அவர்களுக்கும் சத்தியத்திற்கும் வெகு தூரம்.

தேவ பயமும், வசனத்திற்கு கீழ்படிதலும், வசனத்தின் படி தொழுதுக்கொள்வதும் ஒவ்வொரு கிறிஸ்தவனின் முழு கடமை.

கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவை தலையாக கொண்டவர்கள். எபே. 1:23, 4:15

அவருடைய சரீரத்தில் அங்கமாக உள்ளவர்கள் அவருடைய ஆலோசனைக்கு மாத்திரம் கீழ்படிவார்கள்.

நாம் கிறிஸ்துவை அறிந்திருந்தால் போதாது… கிறிஸ்துவின் வார்த்தை நம்மில் இருக்கவேண்டியது அவசியம். யோ. 15:7

எடி ஜோயல் சில்ஸ்பி
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
+91 8144 77 6229

*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எங்களது வலைபதிவுதளம்:
https://kaniyakulamcoc.wordpress.com/

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக