*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
புதிய பெயரால் நம்மை அழைத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
ஜெப கூடுகையை விட்டு வீட்டிற்கு வந்ததும் அதே பழைய நினைப்பும், வைராக்கியம், கசப்பு, வீராப்பு, வீம்பு, கோபம், வெறுப்பு எல்லாவற்றையும் பிசாசு ஞாபகப்படுத்துவான்.
புதிய வருஷத்தில் எடுத்த தீர்மானங்களை நிறைவேற்றாமல் இருக்க எல்லா வகையிலும் இடைஞ்சல்கள் வரும்.
தேவன் நம்மை தெரிந்தெடுத்திருக்கிறார் என்கிறதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
பிறர் நம்மை காணும் போது, நம்மில் ஏற்படும் மாற்றத்தை *அவர்கள்* உணரட்டும்.
சாந்தமும், பொறுமையும், அமைதலும் - இக்கட்டின் போது மாத்திரமே அவசியப்படுகிறது.
லேசான புன்முறுவல் சகலத்தையும் மாற்றிவிடும். கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே நம் பெலன். நெகே. 8:10
சகல அன்பையும் *கூட்டி* வழங்குங்கள். 2பேது. 1:7
கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய். ஏசா. 62:3
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
+91 8144 77 6229
*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
எங்களது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக