தினசரி சிந்தனைக்கான வேத துளி
By : Eddy Joel Silsbee
உன்னதமான தேவனுடைய நாமத்திற்கே மகிமையும் கனமும் உண்டாவதாக.
*முன்பு ஒரு காலத்தில்,*
அன்பு,
பொறுமை,
சகிப்பு தன்மை,
ஒழுக்கம்,
நேர்மை உள்ளவர்கள் - என்று *கிறிஸ்தவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல பெயர் இருந்தது*.
மேலும் பரிசுத்தம் என்கிற பெயரில்,
கைகளைத்தட்டி,
மோளம் கொட்டி,
ஆரவாரம் செய்து,
அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு ”தீரா தொல்லை” கொடுத்ததால் சுமார் கடந்த 20 வருட காலமாக,
கிறிஸ்தவர்கள் என்றால் *வாடகைக்கு கூட வீடு கொடுக்க மறுக்கப்படுகிறது* என்பது தான் உண்மை.
அந்தக்கொடுமை எனக்கும் நடந்தது 2004ல். நாங்கள் அவ்வகையறாக்கள் அல்ல என்று என் நெருங்கிய இஸ்லாமிய நண்பர் அவர்களுக்கு சான்றிதழ் கொடுக்கவேண்டியிருந்தது !!
சத்தியத்தை வியாபாரமாக்கி,
சுய லாபத்திற்காக வாய் ஜால வித்தைகளை மேலோக்கி,
சொந்த கருத்துக்களை,
ஆவியானவர் பெயரில் போதனை என்று சபையாரிடம் திணித்து, வேதத்தில் அங்கீகரிக்கப்படாததை,
விசுவாசம் என்று பொய்யாய் போதிப்பதன் விளைவு இந்த சமுதாய சீர்கேடு. உண்மையான தேவபிள்ளைகளுக்கும் தேவநாமத்திற்கும் இவர்களால் ஏற்படுத்தப்படும் தூஷணம். எரே 14:14, 1தீமோ 6:20
எதில் நாம் வைராக்கியம் காண்பிக்கிறோம் என்பது அவசியம். கலா. 4:18
வைராக்கியமும் கோபமும் எங்கு இருக்கிறதோ அங்கு சகல துர்செய்கைகளும் கலகமும் இருக்கும் என்று வேதம் சொல்கிறது (யாக் 3:16)...
கசப்பான (சத்தியமற்ற) வைராக்கியம் ஆபத்து… யாக். 3:14, கலா. 5:20
புதிய ஏற்பாட்டு சத்தியத்தை விட்டு *சம்பளம் கொடுக்கும் நிறுவனங்களின் ”முதலாளிகளின் சொந்தக் கொள்கையில்” அதன் போதகர்கள் வைராக்கியம் வைத்தத்தால்,*
இக்காலங்களில் உள்ள,
2,000த்திற்கும் மேற்பட்ட பிரிவுகளைக்கண்டு,* வேற்று மதத்தினர் சத்தியத்தை ஏற்க மனமில்லால்,* கிறிஸ்தவத்தையே கிண்டலும் கேளியும் செய்யும்படி தூண்டிவிட்டதற்கு இவர்களே மூலக்காரணம்.
சரியான சீயோனை (சபையில்) கண்டுபிடிப்பதற்கு தடையாக
*பெரும்பாறையும், தடைக்கற்களும் இருக்கும்* (ரோம 9:33)
பெறும்பான்மைக்கு பின்னாக அல்ல,
*ஜீவனுக்கு போகிற வாசல் இடுக்கமும், அதன் வழி நெருக்கமுமாக இருக்கிறது* என்பதை மறந்துபோகவேண்டாம். *அதை கண்டுபிடிக்கிறவர்கள் சிலரே* !! மத்.7:14
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
+91 8144 77 6229
*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
எங்களது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக