வியாழன், 17 டிசம்பர், 2020

#1050- அந்நிய ஜாதியோடு கலக்க வேண்டாம் என்று தேவன் சொல்லியிருக்க ஏன் யோசேப்பு வேறு ஜாதியில் பெண் கொண்டார்?

#1050-  *அந்நிய ஜாதியோடு கலக்க வேண்டாம் என்று தேவன் சொல்லியிருக்க ஏன் யோசேப்பு வேறு ஜாதியில் பெண் கொண்டார்?*

*பதில்* : நீங்கள் குறிப்பிடும் கட்டளையானது, வேதாகமத்தில், முதன்முதலில் யாத்திராகமம் 34:15-16ல் காணமுடியும். அதனைத் தொடர்ந்து லேவி. 19:19, உபா. 7:2-3 என்று பல வசனங்களை காணமுடிகிறது.

ஆதியாகமம் 50ம் அதிகாரம் 25-26 வசனங்களிலேயே யோசேப்பு மரித்துப்போன செய்தியை அறிகிறோம்.

சுமார் 350-430 வருட இடைவெளிக்குப் பின்னர், தேவன், மோசேயைக் கொண்டு,  இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தி எகிப்தை விட்டு வெளியே கடந்து வருகிறார்கள்.

அதன் பின்னரே, சீனாய் மலையில் வைத்து நியாயபிரமாணம் கொடுக்கப்படுகிறது. யாத். 19:18, 20ம் அதிகாரம்.

அதை தொடர்ந்து, அவர்களுக்கு குறிப்பாக அந்நிய ஜாதியோடு கலக்க கூடாதென்று கட்டளை பிறக்கிறது.

இஸ்ரவேல் ஜனங்கள் கடந்த சுமார் 430 வருடங்களாக வாழ்ந்த இடம், விக்கிரகம் நிறைந்த தேசம். விக்கிரகங்களை வணங்குவதும், அதற்கு ஆகாரங்கள் படைப்பதும், அதன் முன்பு நடனம் ஆடுவதும், இப்படி விக்கிரக ஆராதனைக்காரர்களின் அநேக பழக்கங்களை நேரடியாக கண்டு பழக்கப்பட்டார்கள்.

*குறிப்பிட்டு தேவன் அவர்களுக்கு சொன்ன விதத்தைக் கவனியுங்கள்* :
(யாத். 34:12-17) நீ போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கைபண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; பண்ணினால் அது உன் நடுவில் கண்ணியாயிருக்கும். அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டிப்போடுங்கள். கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவனே; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம். அந்தத் தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கைபண்ணுவாயானால், அவர்கள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, தங்களுடைய தேவர்களுக்குப் பலியிடுவார்கள்; ஒருவன் உன்னை அழைக்கையில், நீ போய், அவன் பலியிட்டதிலே புசிப்பாய்; அவர்கள் குமாரத்திகளில் உன் குமாரருக்குப் பெண்களைக் கொள்ளுவாய்; அவர்கள் குமாரத்திகள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுவதும் அல்லாமல், உன் குமாரரையும் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றும்படி செய்வார்கள். வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்கவேண்டாம்.

அந்நிய பெண்ணை மணக்க கூடாதென்ற கட்டளையானது யோசேப்பின் காலத்தில் கொடுக்கப்படவில்லை. ஆகவே, அவர் அந்தக் கட்டளையை மீறினார் என்று நாம் சொல்லமுடியாது.

புறஜாதிப்பெண்ணை யோசேப்பு மணந்திருந்தாலும் (ஆதி. 41:45) தேவபக்தியில் குறைவில்லாது, தன் கடைசிவரைக்கும் வாழ்ந்து மரித்தார் என்பது திண்ணம். ஆதி. 50:25

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக