வெள்ளி, 18 டிசம்பர், 2020

#1051- கற்பனையை கைக்கொள்ள முடியாதபடிக்கு வழிநடத்துகிற இரட்சிக்கப்படாத கணவருக்கு கீழ்படியலாமா? எது கற்புள்ள நடக்கை, கற்புள்ள நடக்கையால் கணவரை எப்படி ஆதாயப்படுத்துவது?

#1051-  *கற்பனையை கைக்கொள்ள முடியாதபடிக்கு வழிநடத்துகிற இரட்சிக்கப்படாத கணவருக்கு கீழ்படியலாமா*? எது கற்புள்ள நடக்கை, கற்புள்ள நடக்கையால் கணவரை எப்படி ஆதாயப்படுத்துவது?

*பதில்* : “புருஷன் சொல்லுக்கான மனைவியின் மீறுதல்” உலகிற்கே பாதகத்தை ஏற்படுத்தினதை மறுக்கமுடியுமோ?

நன்மைதீமை அறியதக்க கனியை புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று ஆதாமிடம் தேவன் சொன்னபொழுது, ஏவாள் உருவாக்கப்பட்டிருக்கவில்லை !! ஆதி. 2:17-18

அக்கனியை சாப்பிடக்கூடாதென்று தன் மனைவிக்கு கணவனாகிய ஆதாமே சொல்லியிருக்கவேண்டும் !!

கீழ்படியாமையின் விளைவு ஏவாளை மாத்திரம் அல்ல, தன் கணவனையும், அவர்கள் இருவரது வாழ்வாதாரத்தையும், ஏதேன் தோட்டத்தை இழந்தது மாத்திரமல்ல அனைத்து விளைவுகளும் தன் சந்ததிக்கு ஏற்பட்டதையும் நாம் அனைவரும் அனுபவிக்கிறோமே !!

மேலும்,
கிறிஸ்துவுக்குள் இருக்கும் ஒரு மனைவியானவள், தன் கணவருக்கு *வசனத்தை சொல்லி அவரை திருத்த முயற்சிக்கக் கூடாது* ! 1பேதுரு 3:2
 
அவர்களுக்கு, அது இன்னும் எரிச்சலை உண்டாக்கும்.

உங்களது போதனையல்ல, *கற்புள்ள நடவடிக்கையையே அவர்களுக்கு போதகமாக வெளிப்படுத்தவேண்டியது அவசியம்*. 1பேதுரு 3:1
 
*போதனையின்றி* என்றும்,
*நடவடிக்கை* என்றும்,
பேதுரு குறிப்பிடுவதைக் கவனிக்கவும். 1பேதுரு 3:1-2

ஒரு கணவனுக்கு,
அவன் மனைவியின் ”சாந்தமும், அமைதலுமே” அவனது பார்வைக்கு பிரதான அலங்காரமாக எதிர்பார்க்கிறான். இதையே தேவனும் விரும்புகிறார். !! 1பேதுரு 3:3-4

இந்தபிரகாரமாகவே ஆதியிலும், பெண்கள் இருந்து தேவனுடைய பார்வையில் மேன்மையைக் கண்டார்கள் என்று குறிப்பிடுகிறார். 1பேதுரு 3:5

புருஷனுக்கு கீழ்படிதல் ஒரு மனைவிக்கு அலங்காரம். 1பேதுரு 3:5
புருஷனுக்கு கீழ்படியாமலிருப்பது அவனுக்கு அலாரம் !

கற்புள்ள என்றால் : அடக்கமான, அப்பாவி, குற்றமற்ற, தூய்மையானவர் என்பது.

கிறிஸ்தவர்களாகிய நாமனைவருமே, கிறிஸ்துவிற்கு மனைவி. 2கொரி. 11:2

அவரது போதனையை, அப்படியே அமைதலோடு எந்த மாற்றுக்கருத்தும் இல்லாமல், ஏற்றுக்கொண்டு, கீழ்படிந்து, அதன் படியே நடக்கவேண்டும்.

ஆவியில் உற்சாகம் என்று, கத்துவதற்கும், குதிப்பதற்கும், ஆக்ரோஷமாக பேசுவதற்கும் (ஜெபம்) கிறிஸ்தவ மதத்தினர் தங்களது கூட்டத்தில் பயிற்சியளிப்பது, வீட்டிலும் கடைபிடிக்கிறார்கள் என்று தோன்றுகிறது !!

இரண்டுமே வேதத்தின்படி தவறு.

*மனைவியானவள்*:
-தன் கணவன் தேவனுடைய வார்த்தையை மீறாமல் இருக்கும்பொருட்டு அவனுக்குத் துணையாக இருக்க வேண்டும் – ஆதி. 2:17-18

-ஆசை முழுவதும் தன் கணவன் மீதே இருக்க வேண்டும் – ஆதி. 3:16

-எப்போதும் அவனுக்கு துணையாக இருக்க வேண்டும் – ஆதி. 2:18

-தன் அம்மா அப்பா சகோதர சகோதரிகள் தன் வீட்டாரை விட, தன் கணவனுக்கே சகலமுமாக சகலவற்றாகவும் இருக்க வேண்டும் – ஆதி. 2:23-24

-தன் கணவனின் எந்த துக்கத்தையும் போக்கக்கூடியவள் மணைவி -ஆதி. 24:67

-கணவனின் வேலைப்பழுவைக்கூட மறக்கவைக்க கூடிய திராணி மனைவிக்கு உண்டு -ஆதி. 29:30

-தேவனின் திட்டத்திற்கு எதிராக நில்லாமல் தன் கணவனிடம் வாழ்ந்து செழிக்கும் எப்படிப்பட்ட மனைவியையும் கணவன் நேசித்து விடுவான் -ஆதி. 29:31-33, 1:28, 1தீமோ. 5:14, 1தீமோ. 2:15

-தன் முகஅழகில் ஒரு நாளும் கர்வம் கொண்டுவிடக்கூடாது. தன் தகுதியையே இழக்க நேரிடும் – எஸ்தர் 1:10-22

-தன் கணவனின் மூடத்தனத்தை அறிந்தவள், தன் வீட்டை பாதுகாக்கிறாள் -1சாமு. 25:3

-சாமர்த்தியமான, அறிவுள்ள மனைவி, சிறிய வீட்டையும் மாளிகையாக மாற்றக்கூடியவள் -நீதி. 31:13-27

-நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கவேண்டும். 1தீமோ. 3:11

-உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; உங்கள் போதனை அல்ல, சகலத்திலும் கீழ்படிதலே அவருடைய மூர்க்கத்தை மாற்றி கிறிஸ்துவிற்குள் கொண்டுவந்து விடும். 1பேதுரு 3:1-2

-குய்யோ முய்யோ என்று சண்டை எதற்கெடுத்தாலும் போடாமல் சாந்தமும் அமைதலுமாய் எப்போதும் தங்களை அலங்காரித்துக்கொள்ளுங்கள் – 1பேதுரு 3:4

-கிறிஸ்தவள் என்று சொல்லிக்கொண்டு எப்போதும் வேதமும் ஜெபமுமாக வாழ விரும்புவது எப்படியோ, அதற்கு கொஞ்சமும் குறையாமல் 100 சதவீதம் இணையாக சொந்தப் புருஷருக்குக்கீழ்ப்படியவேண்டும். எபே. 5:22

*தேவனுக்கு கீழ்படிதலும், கணவனுக்கு கீழ்படிதலும் ஒப்பிடப்பட்டிருப்பதை கவனியுங்கள்*.

கணவனுக்கு கீழ்படியவில்லை என்றால், ஜெபிப்பதும், வேதம் வாசிப்பதும் வீணாகிவிடும் !!  எபே. 5:24

-கணவனுக்காகவே நீங்கள் சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். 1கொரி. 11:9

-தன் கணவனிடத்தில் அன்பும் பண்பும் காண்பித்து பயபக்தியாக இருக்கவேண்டும். எபே. 5:33

*பழங்காலங்களில்* மற்றவர் மத்தியில்,
தன் கணவனுக்கு சமமாக அவனருகில் உட்காருவதை தவிர்த்து அவரது காலடியில் உட்காரும் கலாச்சாரம் நம்முடையது.

தற்போது தன் கணவரது அப்பாவானாலும் (மாமனார்) அவருக்கு முன்பாகவே கால் மேல் கால் போட்டுக்கொண்டு ”ஹாயாக” உட்காரும் அளவிற்கு கலாச்சாரம் சீர் கெட்டுப்போனது வேதனையே.

கணவன், மனைவிக்கு தலை.
மனைவி, கணவனது சரீரம்.
தலை சொல்லுவதற்கு, சரீரம் கீழ்படிய வேண்டும் -எபே. 5:23

தலையே வேண்டாம் என்ற காரணத்தினாலேயோ என்னவோ 
பலர் திருமணம் செய்ய மறுக்கிறார்கள்.
அது தேவனுடைய திட்டத்திற்கும், சித்தத்திற்கும் எதிரானது -1தீமோ. 2:15

சரீரமானது, தலைக்கு பிரசங்கம் செய்ய மேடையேறுவது, வேதத்திற்கு முரணானது. 1கொரி. 14:35

கிறிஸ்து, நமக்கு ஆண்டவர் என்பது உண்மையானால்,
மனைவிக்கு கணவன் ஆண்டவர் என்று அறிந்து
கணவருக்கு கீழ்படியவேண்டும். எபே. 5:22.

போதனையல்ல, கற்புள்ள நடவடிக்கையே அவனைத் திருத்தும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
+91 8144 77 6229

*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எங்களது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக