
*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
பிரதான ஆசாரியராகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
வலது கை செய்யும் நன்மையை இடது கைக்கு கூட தெரியாமல் செய்யவேண்டும் என்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொன்னார். மத். 6:3.
இயேசு கிறிஸ்துவிடம் அற்புதத்தை பெற்றுக்கொண்ட போது, ஆசாரியன், மோசேயின் பிரமாணப்படி நிறைவேற்ற வேண்டியதை செய்ய வேண்டும் என்பதற்காக. வேறு யாரிடத்துலேயும் சொல்லாமல் ஆசாரியனிடத்தில் போய் காட்ட சொன்னார். மத். 8:3-4, லேவி. 13.
முதல் நூற்றாண்டு பரிசேய ஆசாரியர்களோ, இயேசுவை பார்த்து; அற்புதத்தை விளம்பரப்படுத்தும்படி ஆலோசனை சொன்னார்கள். யோவான் 7:4
ஜனங்களுக்கு செய்த உதவியை, புகைபடம் எடுத்து விளம்பர படுத்துவது பரிசேயத்தனம்… கிறிஸ்தவர்கள் நிச்சயமாய் அதை தவிர்க்க வேண்டும்.
வேறொவர் கொடுத்த பணத்தில் நலஉதவிகள் செய்யும் போது, ஆதாரத்திற்கு அவர்களிடம் காண்பிக்க புகைப்படம் எடுக்கவேண்டியுள்ளது. ஆனால், அதை சுயவிளம்பரமாக்குவது ஆபத்து.
நம்முடைய தாலந்தை, நாம் பிரசித்தம் பண்ணாமல் (நீதி. 20:6) கடமையை மறக்காமலும், மறுக்காமலும் செய்வோம்..
நம் முயற்சிக்கு *நாமே பலன் தேடி கொண்டால் தேவன் அமைதியாய் இருப்பார்*..
செய்த உதவிக்கு நாமே விளம்பரப்படுத்தினால் *பரத்திலிருந்து வரும் பலன் வராமல் போகலம்* மத். 6:18
தன் கையில் உள்ளதை பத்திரப்படுத்தி,
வேறொவரிடம் வாங்கி,
மற்றவர்களுக்கு கொடுத்து உதவுவது அல்ல உதவி !!,
சுய சம்பாத்தியத்திலிருந்து *ஏழைகளுக்கும் தேவைபடுவோருக்கும்* உதவ முன்வருவோம்.
தேவன் நம்மை இன்னும் அதிகமதிகமாய் ஆசீர்வதிப்பார். 2கொரி.8:11-12
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
அனைத்து கேள்வி பதிலும் காண:
https://joelsilsbee.wordpress.com/qa/
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக