வெள்ளி, 4 டிசம்பர், 2020

#1040 - நியாயத்தீர்ப்பன்று யூதாஸ் ஸ்காரியோத்தும் நியாயம் தீர்க்கவருவாரா?

#1040- *நியாயத்தீர்ப்பன்று யூதாஸ் ஸ்காரியோத்தும் நியாயம் தீர்க்கவருவாரா?*

மத்தேயு 19:28 அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்ற வசனத்தின்படி  ஜனங்களின் நியாயம் தீர்ப்பன்று யூதாஸ் ஸ்காரியோத்தும் நியாயம் தீர்க்கவருவாரா? விளக்கம் வேண்டும் ஐயா.

*பதில் :* 
பன்னிரண்டு சிங்காசனங்களில் வீற்றிருப்பீர்கள் என்ற வார்த்தையானது அடையாளப்பூர்வமானது.

சிங்காசனத்தில் ஒருவர் உட்கார்ந்துகொள்வது அவரது சக்தியையும், அவருக்குள்ள அதிகாரத்தையும், மரியாதையையும் குறிக்கிறது.

சிங்காசனத்தில் உள்ளவர்கள், மற்றவர்களை விட வேறுபடுவார்கள். அதிக மரியாதை மற்றும் வெகுமதி பெறுவார்கள் என்று பொருள்.

குற்றமில்லாத, மாசற்ற, தேவக்குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை, முப்பது வெள்ளிக்காசுக்காகக் காட்டிக்கொடுத்ததுமல்லாமல், நான்றுகொண்டு செத்துப்போனதாலும், அப்போஸ்தல பட்டத்தை யூதாஸ் ஸ்காரியோத்து, தன் பாவச்செயலால் இழந்தான். அப். 1:16-18, மத். 27:3-5

அவருடைய ஸ்தலத்திற்கு மத்தியாஸ் என்பவரை மற்ற பதினொரு அப்போஸ்தலர்களும்,  அப்போஸ்தலபட்டத்திற்கு தகுதிபெறும் நபர்களைப் பிரித்தெடுத்து, சீட்டுப்போட்டதின் நிமித்தம் தேவனால் நியமிக்கப்பட்டார். அப். 1:16-26

நியாயந்தீர்ப்பில், இயேசுவே தீர்ப்பளிப்பார்.
அவர் மட்டுமே அதற்கு தகுதியானவர்.  
பிதாவானவர் சகல நியாயத்தீர்ப்பின் அதிகாரத்தையும் குமாரனுக்குக் கொடுத்திருக்கிறார். மத். 20:23, யோ. 5: 22, 2 கொரி. 5:10, 2தெச. 1:7-10, 2தீமோ. 4:1, 1பேதுரு 4:5, வெளி. 20:11-12

பன்னிரண்டு சிங்காசனங்களில் அமர்ந்திருப்பது என்பது அப்போஸ்தலர்களானவர்களுக்கு கொடுக்கப்படவிருக்கும் சிறந்த கண்ணியத்தின் அல்லது மரியாதையின் நிலையைக் குறிக்கிறது. லூக்கா 22:28-30

சபையின் சட்டங்களை நமக்கு எழுதித்தந்தது அப்போஸ்தலர்கள்.
ஊழியனும், மூப்பனும், சபை அமைப்பும், சபையாரும், சபை நிர்வாகமும், காணிக்கை முறையும், தொழுகை முறையும், பாடல் முறை என்று சபையைக் குறித்த அனைத்தையும் அப்போஸ்தலர்கள் மூலமாகவே கிறிஸ்துவின் கட்டளைபடி நமக்கு பரிசுத்த ஆவியானவர் எழுதிவைத்தார். அப். 1:3, 2தீமோ.3:16, 2பேதுரு 1:20-21

எனவே, இஸ்ரேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்ப்பது என்பது, தேவனுடைய ராஜ்யமாகிய சபையில் அதிகாரம் செலுத்துவதையும், தேவனுடைய  மக்களுக்கு சட்டங்களை வழங்கியதையும் தெரிவிக்கிறது.

இந்த 28ம் வசனத்தின் பின்வரும் வசனங்கள் மேலே குறிப்பிட்டுள்ள பொருளை சரிசெய்வதாகத் தெரிகிறது என்பதால், இந்த விதிமுறைகளின் உரிமையை நான் காணவில்லை என்பது திண்ணம்.

யூதாஸ் ஸ்காரியோத்து அந்த தகுதியை இழந்துவிட்டான்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக