*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
சத்தியத்தின் தேவன் தாமே மகிமைப்படுவாராக.
எந்த சின்ன விஷயத்திற்கும் “சத்தியமா சொல்றேன்னு” தன்னுடைய வாதத்தை *சத்தியம்* பண்ணி உறுதிப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.
பல வேலைகளை, ஒரே நேரத்தில் ஈடுபடுத்திக்கொள்வதன் விளைவு, ஒருவர் சொல்வதை கவனிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் கவனம் போதுவதில்லை.
“முக்கியமான அறிவிப்பு” என்று சொன்னால் தான் சபைகளில் கூட கவனிக்க துவங்குகிறார்கள் !!
தேவ செய்தியை எவ்வாறு கவனிக்கிறார்களோ?
யார் எதை பேசினாலும் முதலாவது கவனிக்க வேண்டும்,
புரிந்து கொள்ள வேண்டும்,
அதன் உண்மை தன்மையை வேதத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
சத்தியம் செய்து தன் காரியத்தை வலியுறுத்தக் கூடாது என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார் (மத் 5:34).
என்ன விளைவுகள் வந்தாலும் உண்மையை மாத்திரமே எப்போதும் சொல்ல தீர்மானிப்போம்.
சொன்னதை நிறைவேற்ற தவற வேண்டாம்.
சொன்ன வார்த்தையை நிறைவேற்ற தவறினால், தன் ஸ்தானத்தை இழக்கிறான். யாக். 3:2
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
அனைத்து கேள்வி பதிலும் காண:
https://joelsilsbee.wordpress.com/qa/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக