#1044 - *இயேசு பிறந்தது உண்மையென்றால் அவர் பிறந்த தேதி, மாதம், வருடம் என்ன? அவர் இறந்தது உண்மையென்றால் அவரைக் கொன்ற தேதி, மாதம், வருடம் என்ன*? இதற்கு பதில் கிடைக்குமா ஐயா?
*பதில்* : கி.பி., கி.மு. என்று காலங்கள் பிரிக்கப்பட்டதே கிறிஸ்துவின் பிறப்பைக்கொண்டு தான்.
அவர் பிறந்த தேதியும் சிலுவையில் மரித்த தேதியும் குறிக்கப்படவில்லை என்றால், பிறக்கவும் சிலுவையில் மரிக்கவும் இல்லை என்றாகிவிடாது.
மாவீரன் அலெக்சாண்டர், ஞானி சாக்ரடீஸ் போன்றோரின் பிறந்த தேதி கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் அவர்கள் பிறக்கவே இல்லை என்றாகி விடுமோ?
கிறிஸ்து பிறந்த காலத்தில் யார் அரசாண்டார்கள் என்பதும்;
அவர் சிலுவையில் மரித்த காலத்தில் யார் அரசாண்டர்கள் என்பதும்;
அவர் பிறக்கும்போது நடந்த உலகம் முழுவதும் நடந்த வரலாற்று நிகழ்வு என்ன என்பதும்; (லூக்கா 2:1)
அவர் பிறக்கும் போதும், சிலுவையில் மரிக்கும் போதும் குளிர் காலமாக இருந்ததா, வெயில் காலமாக இருந்ததா போன்ற கால சூழ்நிலைகளை துல்லியமாக வேதாகமத்தில் காணமுடிகிறது. (லூக்கா 2:8, யோவான் 18:18)
டிசம்பர் மாதம் 25ந் தேதி கிறிஸ்து பிறந்த நாள் அல்ல.
அந்த தேதிக்கும் கிறிஸ்துவிற்கும் வேதத்தின்படி எந்த சம்பந்தமும் கிடையாது.
வேதத்தின் கால நிகழ்வுகளின் அடிப்படையில் காணும் போது, அவர் பிறந்தது குளிர் காலத்தில் இல்லை என்பதும், சிலுவையில் மரித்த போது குளிர் காலமாக இருந்தது என்பதும் திண்ணம். (யோவான் 18:18)
அதனடிப்படையில் காணும் போது, பிறந்தது வெயில் காலத்திலும், சிலுவையில் மரித்தது குளிர் காலத்திலும் இருக்க வேண்டியது.
எப்படியாயினும், பிறந்த நாளை கொண்டாடும்படி கிறிஸ்தவர்களுக்கு கட்டளையில்லை. அவர் சிலுவையில் மரித்ததை வாரத்தின் முதல் நாளில் (ஞாயிற்றுக்கிழமைகளில்) நினைவுக்கூறவேண்டும் (அப். 20:7) என்பது வேதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்து பிறந்ததும், சிலுவையில் மரித்ததும், மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த பின்னர்,
நாற்பது நாள் இப்பூமியில் இருந்ததையும், (அப்.1:3)
ஐந்நூறு பேருக்கும் அதிகமானோர் (1கொரி. 15:6) தங்கள் சொந்த மாமிச கண்களினால் கண்டதும்,
பின்னர் அநேகருடைய கண்கள் காணும் போதே பரலோகம் ஏறிச் சென்றதும் (அப். 1:9-10) வரலாற்று நிகழ்வுகள் !!
வரலாற்றை யாரும் மாற்ற முடியாது.
ஆகவே, கற்பனைக்கதைகளை விட்டு சத்தியத்தை மாத்திரம் பற்றிக்கொள்ள வேண்டும்.
அதே இயேசு கிறிஸ்து மீண்டும் வருகிறார்.
அவரை சந்திக்க தைரியம் கொள்வோம்.
தயாராக இருப்போம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக