*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
மனம்திரும்பி வருவோரை நித்திய ஜீவனுக்கு அழைத்து செல்லும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
யோர்தானில் *ஏழு முறை மூழ்க யோசித்த நாகமான்* – தேவனின் அற்புதத்தை கண்டபோது தன் *வாழ்நாள் முழுவதையும்* தீர்மானித்து விட்டதை கவனித்து இருக்கிறீர்களா?
1-
இஸ்ரவேலின் தேவனை தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்து கொண்டார் (2 இராஜா 5:15)
2-
விக்கிரகம் உருவாக்க பயன்படுத்தப்படும் *தன் ஊர் மண்னை கூட உபயோகிக்க கூடாது* என்று தேவனுக்கு பலிபீடம் கட்டுவதற்காக, இஸ்ரவேலில் இருந்து மண்ணை கொண்டு சென்றார். (2 இராஜா 5:17)
3-
தன் நாட்டு இராஜாவின் பிரத்யேக காவலாளியாக இவர் இருப்பதால், இராஜா தன் சாமியை வணங்கும்படி விக்கிரக கோவிலுக்குள் சாஷ்டாங்கமாய் தரைமட்டும் விழும்போது, இவர் அவரை *கீழே குனிந்து தூக்க வேண்டி வந்தால்.... தன்னுடைய தலையும் கீழே குனியுமே, முன்னே இருக்கும் விக்கிரகத்திற்கு தன் தலை சாய்வதைக் குறித்து இப்போதே யோசிக்கும் நாகமானின் இரட்சிப்பு எப்பேற்பட்டது ! (2 இராஜா 5:18)
இப்படிப்பட்ட மனம்திரும்புதலை சுகந்த வாசனையாய் முகர்ந்துகொள்ள தேவன் நாகமானுக்கு, அவர் மனம்திரும்பும் முன்னரே சீரியாவிற்கு *நாகமானை கொண்டு இரட்சிப்பை கட்டளையிட்டார்* போலும்! (2 இராஜா 5:1)
இவ்வளவு நாள் நாம் வாழ்வது தேவனுடைய கிருபை.. நாம் மனம்திரும்ப வேண்டிய பகுதி இன்னும் அநேகம் !!
எந்நேரமும் ஜெபம், ஆராதனை, வேத வாசிப்பு என்று *மற்றவர்கள் பார்வைக்கு கிறிஸ்தவர்களாக* வாழ்ந்து அல்லேலூயா, ஸ்தோத்திரம் என்று சதா உச்சரித்து பரிசுத்தவானாக ஊரை ஏமாற்றாமல், சொந்த வாழ்க்கையிலும் அந்த இரட்சிப்பை வெளிபடுத்தி கணவனிடமும், மனைவியினிடமும், பிள்ளைகளிடமும், எஜமானனிடமும், தொழிலாளிகளிடமும், சுற்றத்தாரிடமும் தன் கடமையை உண்மையாக செய்தல் அவசியம்.
கடமையை தவறுகிற எவரும் தேவனுக்கு முன் குற்றவாளிகள் என்பதை மறக்க வேண்டாம்.
தேவன் அனைத்தையும் கணக்கில் வைப்பார் !!
இன்று கர்த்தருடைய நாள். எந்த சாக்கு போக்கும் சொல்லாமல் தேவனுடைய திட்டத்திற்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்து சிலுவையில் பாடுகளை நமக்காய் ஏற்று நம்மை வாழவைத்த கிறிஸ்துவை நினைவுக்கூற வேண்டும்.
தேவனைத் தொழுதுக் கொள்ள மனிதர்களுக்கு எவ்வளவு சாக்கு போக்குகள் !!
*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
ஆங்கில வழியில் வேதாகமத்தைப் பயில : http://kaniyakulamcoc.worldbibleschool.org/
* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : புதிய குழு - https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக