*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
பழைய ஆகாரமோ, கொஞ்சம் கெட்டு போனதோ, சரியாய் சமைக்காததோ, சுத்தமற்றதோ – இப்படி எந்த வகையான ஆகாரத்தையும் ஒரு தாயானவள் சிறிய பிள்ளைகளுக்கு கொடுக்க விரும்பவே மாட்டாள்.
ஆகாரம் கொடுக்கும் பத்திரத்தையும்,
உடுத்தும் துணியையும்,
படுக்கை விரிப்பையும், பார்த்துப் பார்த்து, சுடு தண்ணீரில் துவைத்து, மிக கவனமாய் தன் குழந்தைக்கு சேவை செய்வாள்... இதில் கொஞ்சம் மாறுபட்டாலும் குழந்தைக்கு சுக வீனம் வந்துவிடும் என்றும் அது, குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகி விடும் என்பதால்.
அப்போஸ்தலர் பேதுரு நமக்கு கொடுக்கும் ஆலோசனையும் அதை நினைவுப்படுத்துகிறது.
பழையவை (ஏற்பாடு),
பழையதும் புதியதும் (கட்டளைகள்) கலந்தவை,
சொந்த அனுபவம் மற்றும் வரலாறுகள்,
மற்றும் சினிமாவசனங்களையும் அரசியல் மேடை பேச்சுகளையும் மிஞ்சத்தக்க *உணர்ச்சி மிக்க* செய்திகள் என்று பரிமாறப்படும் எதுவும் நம் கிறிஸ்தவ வாழ்க்கையில் வளர்ச்சியை கொடுக்காது என்று நாம் அறிந்து, *களங்கமில்லாத ஞானப்பாலில்* மாத்திரமே வளருவோம். (1பேதுரு 2:2-3)
நம் கிறிஸ்தவ வளர்ச்சிக்கு – வேத வாசிப்பு இன்றியமையாதது.
குறைந்தது 10 நிமிடமாகிலும் வாசிக்க தீர்மானியுங்கள்.
தேவன் உங்களை நடத்துவதை உணருவீர்கள்.
*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : புதிய குழு - https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக