#1033 - *2இராஜாக்கள் 2:19ல் எரிகோ பட்டணம் குடியிருப்பிற்கு நல்லது தண்ணீரோ கெட்டது நிலமும் பாழ்நிலம் என்ற வசனத்தை விளக்கவும்*.
*பதில்* : ஏழு கொம்பு எக்காளங்களை முழங்கியபோது, எரிகோவின் அரணான சுவரை தகர்த்து, கர்த்தர் இஸ்ரவேலுக்கு அற்புதமாக கிருபை புரிந்தார் என்பது கிறிஸ்தவ வட்டாரங்களில் மிக அதிகமாக பேசப்படும் ஒரு சம்பவம் (யோசு 6: 1-27).
இந்த எரிகோ பட்டணம், எருசலேமில் இருந்து சுமார் 38 கி.மீ தூரத்திலும், யோர்தான் நதியிலிருந்து சுமார் பதினொன்று கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது (யோசு 18: 20-21).
இந்த பட்டணத்தை மோசே பேரீச்சம் மரங்களின் நகரம் என்று அழைத்திருக்கிறார்; மேலும், இந்தப் பட்டணம் சந்தோஷமான, இனிமையான, ஒரு அழகான இடமாக இருந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. (உபா 34:3, 2நாளா 28:15)
ஆனால், எரிகோவின் நகரம் தரிசாக இருப்பதை நாம் 2 இரா2:18-22 காண்கிறோம்.
எரிகோ பட்டணமானது, யோசுவாவால் கர்த்தருக்கு முன்பாக சபிக்கப்பட்டதைப் பற்றி ஓரளவுக்கு நாம் கவனிக்க தவறமுடியாது. யோசு 6:26, 1இரா 16:34.
ஆயினும் ராகாப் (வேசி) இந்த நகரத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். (எபி 11:31, யோசு 2:1-24)
யோசுவாவின் சாபத்திற்கும் இந்த விளக்கத்தைத் தேடும் இடையிலான காலத்தை கணக்கிடுவதானால், பெத்தேல் ஊரானான ஈயேல் என்பவரால் எரிகோவை மீண்டும் கட்டியெழுப்பின காலம் வரைக்கும் ஐநூற்று முப்பத்தேழு ஆண்டுகள் கடந்து போயிருந்த்தது.
எபிரேயர்கள், யோசுவாவின் சாபத்திற்கு மிகுந்த மரியாதை செலுத்தினர். இந்த வெறுப்பை அவர்கள் கவனமாக நினைவில் வைத்தார்கள்; மேலும், ஈயேல் அதை மீறி எரிகோவைக் கட்டத் தொடங்கியபோது, எபிரேயர்களிடையே பக்தியுள்ள விசுவாசிகள் கோபமடைந்தனர். யோசுவாவின் சாபத்தின்படி ஈயேல் தன் இரண்டு மகன்களை இழந்தார்.
2இரா 2:20ம் வசனத்தில் எலிசா தீர்க்கதரிசியின் செயலை நாம் இவ்வாறு ஒப்பிடமுடியும்.
"புதிய தோண்டி" மற்றும் "உப்பு" ஆகியவை சுத்திகரிப்பின் குறியீடாக அறிகிறோம். கெட்டுப்போன நீரோடை பாவத்தை குறிக்கிறது. மேலும் அதை தூய்மைப்படுத்த தீர்க்கதரிசியானவர் தூய்மையின் சின்னங்களை பயன்படுத்துகிறார். எனவே, பயன்படுத்தபடாத சுத்தமான “புதிய” தோண்டியும் மற்றும் உப்புவையும் உபயோகப்படுத்துவது வேதப்பூர்வ அடையாளமாகும். (லேவி 2:13; எசே 43: 24; மத் 5: 13).
புதிய தோண்டியும் உப்பும் அந்த நீரை சுத்தப்படுத்தவில்லை, மாறாக தேவனுடைய அற்புதம் அங்கு நிகழ்ந்தது. ஏனென்றால், ஒருபோதும், அந்த கெட்ட தண்ணீரின் தீங்கு விளைவிக்கும் குணங்களோடுள்ள அந்த நீரோடையை, வெறுமனே ஒரு தோண்டி உப்பைக் கரைத்ததால் சரிசெய்துவிடமுடியாது. கரைத்தது ஓர் இடத்தில் என்றாலும் நீரோடையில் புதியதாக வந்து கொண்டிருக்கும் நீரும் சுத்தமானது என்பதை கவனிக்க வேண்டும் (2இரா 2:21-22).
ஆகவே, உப்பு ஊற்றுவது ஒரு அடையாளச் செயலாகும். அதனுடன் எலிசா கர்த்தருடைய வார்த்தையினால் அற்புதத்தை செய்தார்.
அந்த நீரோடையில் நான் தண்ணீர் பருக 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சியே. அதன் படத்தை இன்னும் பத்திரமாக வைத்துள்ளேன்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
புதன், 11 நவம்பர், 2020
#1033 - எரிகோ பட்டணம் குடியிருப்பிற்கு நல்லது தண்ணீரோ கெட்டது நிலமும் பாழ்நிலம் என்ற வசனத்தை விளக்கவும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக