*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
பூமியை மழையினால் வருஷிக்கும் மகத்துவமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
ஆட்டுக்கும் கழுதைக்கும் நீங்களே திருமணம் செய்து வைத்தாலும், நாய்க்கும் நரிக்கும் முடிச்சி போட்டாலும்,
உடல் எல்லாம் கீறிக்கொண்டு தரையில் உருண்டு கதறி அழுதாலும்,
தவளையையும், தேரையையும் பிடித்து திருமணம் செய்து வைத்தாலும், ஒருவனாலும் மழையை பூமிக்கு கொண்டு வர முடியாது.
வானத்தின் மதகுகளை அடைப்பதும், திறப்பதும் தேவனின் கையில் உள்ளது. (சங் 78:23)
விளைச்சலை கொடுக்கும்படி வானத்தின் தண்ணீரை அளவோடும், அதிகமாகவும், தருவதும், அடைப்பதும் அவரே. உபா 11:13-15
பூமியை அழிக்கத்தக்கதாக நோவாவின் காலத்தில் மழையை அனுப்பினதோடு, தண்ணீரினால் உலகத்தை இனி அழிப்பதில்லை என்று ஆணையிட்டதுமல்லாமல் மனிதர்கள் எப்போதும் தன் செயலையும் ஆணையையும் நினைக்கும்படி அடையாளமாக வானவில்லையும் நமக்கு கொடுத்து இருக்கிறார். ஆதி 9:8-17
இத்தனை மகத்துவமான தேவனை நாம் தொழுது கொள்கிறபடியால் எப்பேர்பட்ட கவலையானாலும், அதை நாம் சுமக்காமல் அவரிடத்தில் விட்டு விடுங்கள். பிலி 4:6, 1பேது 5:7
நம் விண்ணப்பத்தைக் கேட்கிறவரும்,
நம் கஷ்டங்களைக் காண்கிறவரும்,
நம் துக்கங்களை உணர்கிறவருமான வல்லமையுள்ள ஜீவனுள்ள தேவனை நாம் தொழுது கொள்கிறோம் !!
சந்தேகத்துடன் அல்ல, முழு நம்பிக்கையுடன் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிந்து நடக்கும்போது - சகலத்தையும் அவரே முன்னின்று நடத்துவார். ஏசா 45:2
இந்த வசனத்தை வாசிக்கும் போதெல்லாம் என் உடல் சிலிர்க்கும் !!
”யோபு 37:11-13 அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, மின்னலினால் மேகத்தைச் சிதறப்பண்ணுகிறார். அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும், அவைகள் பூச்சக்கரத்தில் நடப்பிக்கும்படி, அவர் அவைகளைத் தம்முடைய ஞான ஆலோசனைகளின்படியே சுற்றித் திரியப்பண்ணுகிறார். ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும், ஒன்றில் கிருபையாகவும், அவைகளை வரப்பண்ணுகிறார்.
உலகத்தையும் வானங்களையும் சர்வ சிருஷ்டிப்பையும் உருவாக்கின இப்பேர்பட்ட தேவனுடைய பிள்ளைகள் நாம் !! பாக்கியமுள்ள ஜனம்.
*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : புதிய குழு - https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக