செவ்வாய், 3 நவம்பர், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 3 Nov 2020

                        https://cdn.slidesharecdn.com/ss_thumbnails/followinstructions01-130212082514-phpapp02-thumbnail-4.jpg?cb=1360657874 

 

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee

முற்றிலும் பாதுகாக்கும் நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

விலைக் கொடுத்து வாங்கிய புதிய இயந்திரத்தை அல்லது கருவியை முறையாக கையாளாவிடில், நம் தவறான உபயோகம் கருவியையே வீணாக்கிவிடும். அதனுடைய உற்பத்தியாளருக்கு தண்டம் கட்டி சரி செய்த பின்னர், மிக அதிக கவனம் செலுத்தி பத்திரமாக உபயோகபடுத்துவோம் !!

தண்டம் கட்டாமல் இருக்க வேண்டுமெனில், உற்பத்தியாளர் சொன்ன செயல்முறையை உபயோகப்படுத்தும் ”முன்பதாகவே” அந்த கருவியின் கையேட்டின் மூலம் அல்லது மற்றவரிடம் கேட்டு *முறையாக* அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அதுபோல, நமக்கு கிருபையாக / ஈவாக, கொடுக்கப்படும் ஒவ்வொரு புதிய நாளும் சரியாய் இயங்க வேண்டுமெனில் *உலக உற்பத்தியாளரின் கையேடாகிய பரிசுத்த வேதாகமதத்தில் கொடுக்கப்பட்டபடி  செயல் முறையை பின்பற்ற வேண்டும்*.

வாரினாலும் கடிவாளத்தினாலும் கட்டப்படாதபடிக்கு சரியான பாதையில் செல்ல அது வழி வகுக்கும் !!

நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம். சங் 32:8-9

Eddy Joel Silsbee,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : புதிய குழு - https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக