திங்கள், 26 அக்டோபர், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 26 Oct 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee

இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

தன் வலிமையையும் வளர்ச்சியையும் அறியும்படி தாவீது, இஸ்ரவேல் ஜனங்களை எண்ணிக்கை பார்க்க சொன்னார். 2 சாமு 24

தன் வளர்ச்சியை அறிய முயன்ற அந்த முயற்சி அவருக்கு கர்த்தருடைய பார்வையில் தீமையாய் முடிந்தது.

எங்கள் சபையில் எத்தனை பேர் வருகிறார்கள்,
உங்கள் சபையில் எத்தனை பேர் வருகிறார்கள் என்பதை ஒருபோதும் தங்கள் பெலமாகவோ பெலவீனமாகவோ நினைத்தும் விட கூடாது...!

சொந்தமாக, சொந்த பெயரில், சொந்த முயற்சியில், சுய சட்டங்களோடு, சொந்த இலாபத்திற்காக, குடும்ப வளர்ச்சிக்காக துவங்கிய,  உங்கள் நிறுவன சபைகள் எவ்வளவு பெரிதானது என்பதை பறைசாற்றிக்கொள்ளலாம்.

ஆனால், வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள சபையானது - தேவனுடையது !! அதற்கு கிறிஸ்துவே நிறுவனர், தலைவர், ஸ்தாபகர். எபே 5:23, அப் 20:28, எபே 1:22-23, 4:15, கொலோ 1:18

கிறிஸ்தவர்கள், அந்த கிறிஸ்துவினுடைய சபையில் உறுப்பினராக அல்லது அங்கத்தினராகிறார்கள். அப் 2:42, 5:14, 11:24.

3 பேர் ஆனாலும் 3,000 பேர் ஆனாலும், விளைச்சலை கொடுப்பது தேவன், அறுவடையை கொடுப்பது தேவன்.

நாம் அற்பமானவர்கள், விதைப்பதும், நீர் (வார்த்தைகளை) பாய்ச்சுவதுமே நம் கடமை. எந்த ஒரு விஞ்ஞானியும், அற்புத அடையாள வித்தைக்காரனும், விதையை திறந்து பயிரை வெளியே இழுத்துவிட முடியாது !! 1கொரி 3:6.

ஆட்கள் சபையில் இருக்கிறார்கள் என்றால், அது ஊழியக்காரனாலேயோ ஊழியத்தினாலேயோ, நிர்வாகத்தினாலேயோ, திறமையினாலேயோ வந்தது என்று மெச்சிக்கொள்ள எவருக்குமே வேதம் அதிகாரம் கொடுக்கவில்லை. அப்பிரயோஜனமானவர்கள் என்றே வேதம் சொல்கிறது.  (லூக் 17:10)

ஜெபத்தினாலும், தேவ கிருபையினாலும் மாத்திரமே ஆத்துமாக்கள் சபையில் சேர்க்கப்படுகிறார்கள். (அப் 2:47) அவர்களை தமது சபையில் சேர்ப்பது கர்த்தர் !!

பொழுது கடந்த கடைசி மணி நேரத்தில் இருக்கிறோம். சரியான வேலையாட்கள் மிகுதியாய் இன்னும் தேவை. மத் 20:6

களைகளை பிடுங்கிக் கொண்டு நேரத்தை வீணடிக்கவேண்டாம். அது நம்முடைய வேலையில்லை !! மத் 13:28-29, 39-40

உத்தமமாய் செய்து, நம் கிரியைகளின் பூரண பலனை தேவனிடமிருந்து பெற்றுக்கொள்வோம்.

*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக