வெள்ளி, 30 அக்டோபர், 2020

#185 கேள்வி: மோசேக்கு எத்தனை மனைவிகள்?

#185 *கேள்வி:*  மோசேக்கு எத்தனை மனைவிகள்? அவனுக்கு இருந்த குமாரர் எத்தனை பேருக்கு அவன் விருத்தசேதனம் பண்ணினான்?

*பதில்:* சிப்போராளை குறித்து வேதம் அதிகம் வெளிபடுத்தவில்லை.

மீதியான் தேசத்திலிருந்த ஒரு ஆசாரியனாகிய எத்திரோ (ரெகுவேல்) என்பவரின் மகள் என்று நாம் அறிந்திருக்கிறோம். யாத். 3: 1;  2:18.

மோசேக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்ததாக வேதத்தில்  வெளிப்படையாக காணமுடியாது.

சில வேத விரிவுரையாளர்கள் - மோசேயின் இரண்டாவது திருமணம் புறஜாதி பெண்ணாக இருந்ததால் புறஜாதியினிடத்திற்கு தேவனுடைய அநுக்கிரகம் நிறைவேறியது என்கின்றனர். (சங். .45: 9, உன்னத. 1: 4)

சரித்திர ரீதியாக பார்க்கும் போது – எகிப்து நாட்டின் எல்லைப்பகுதி போல பல ஆண்டுகளாக மாறி சீனாய் தீபகற்பத்தில் அடங்கினது போல எத்தியோப்பியா, ஒரு காலத்தில் கூஷ் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. (2நாளா. 21:16, ஆபகூக் 3:7).

யாத். 18ம் அதிகாரத்திற்கு பின்னர் சிப்போராளை குறித்த தகவலை நாம் காணமுடியாது. குறிப்பாக தேவ சட்டம் கொடுக்கப்படுவதற்கு முன்னதான செயல்பாடு அது.

எண். 12:1ன் சம்பவத்தின்படி பார்க்கும் போது, சுமார் 40 வருடத்திற்கும் முன்னர் திருமணமான தங்கள் அண்ணி மீது மிரியாமிற்கும் ஆரோனுக்கும் இப்போது கோபம் வருவதற்கான சாத்திய கூறுகள் குறைவே.

சிப்போராள் இந்த சம்பவத்திற்கு முன்னர் இறந்து போயிருக்க வேண்டும் மோசே இன்னொரு திருமணம் செய்தாரோ நாம் அறியோம்.

மறைக்கப்பட்டவைகளை குறித்து நாமும் கவனம் செலுத்தாமல் இருப்பது நல்லது (உபா. 29:29)

யாத். 4: 25ன் படி – ஒரு குமாரனுக்கு விருத்தசேதனம் நடந்தது.
இந்த சம்பவத்தின் மேலும் சில விளக்கங்களை அறிய #154ல் பார்க்கவும்.  


*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/BbygVjLN3mr2yki8IstAsg

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக