செவ்வாய், 14 மே, 2019

#154 - யாத்திராகம் 4 :24 வழியிலே தங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு, அவனைக் கொல்லப்பார்த்தார்.

#154 - *கர்த்தர் ஏன் மோசேயைக் கொல்லப்பார்த்தார்?* யாத். 4:24 வழியிலே தங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு, அவனைக் கொல்லப்பார்த்தார். இந்த வசனத்தின் பகுதி எனக்கு கேள்வியாக இருக்கிறது நம் தேவன் இதை செய்யமாட்டார் என்று 100 சதவிதம் நம்புகிறேன் இப்படி எழுதப்பட்ட அர்த்தம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்

*பதில்*:
ஆபிரகாமினிடத்தில் தேவன் விருத்தசேதனம் என்னும் உடன்படிக்கையை ஏற்படுத்தினார் (ஆதி. 17:10-14).

பிறந்த 8ம் நாளில் செய்யப்படவேண்டும் என்றார் (ஆதி. 17:12)

மீதியானில் ஆசாரியனான எத்திரோவின் குமாரத்தி தான் சிப்போராள் என்கிற மோசேயின் மனைவி (யாத். 18:2, 2:21, 4:25 )

கேத்தூராள் என்ற மறுமனையாட்டியின் மூலம் மீதியானியர்கள் ஆபிரகாம் சந்ததியில் வந்தவர்கள் (ஆதி. 25:1; 25:2; 1நாளா. 1:32)

வடக்கு அரேபியாவில் குடியேறி இஸ்மவேலர்களோடு சம்மந்தம் கலந்து தேவனுடைய கட்டளைக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்கள். இவர்கள் தான் யோசேப்பை எகிப்தில் பார்வோனுக்கு விற்றவர்கள் (ஆதி. 37:28) !!

அப்படிபட்ட சூழ்நிலையிலிருந்து தான் மோசே தனக்கு ஒரு மனைவியை தேர்ந்தெடுத்தார்.  ஒரு யூதனாக மோசே தேவனுடைய கட்டளையை தவறாமல் சரியாய் கடைபிடிக்கும்படிக்கு ஒரு கணவனாக தன் குடும்பத்தை சமாதானமாக நடத்தும்படிக்கு அவர் எவ்வளவு போராடியிருக்கவேண்டும் என்பதை யூகிக்க வேண்டும்.

நாம் இக்காலத்தில் இருப்பது போல எந்த மருத்துவ வசதியும் இல்லாத ஆதிகாலம் அது. 
 
ஆண்குறியின் நுனி தோலை
சரியாக வெட்டாத பட்சத்தில் அது *சேதம்* ஆகலாம்..
சரியாக பராமரிக்கவில்லையென்றால் *செப்டிக்* ஆகலாம்..
சுகாதாரம் இல்லாமல் செய்யும் பட்சத்தில் *வீக்கம் கண்டு இன்னும் மோசமாகலாம்*..

இந்த காரியத்தில் (விருத்தசேதனத்தால்) குழந்தைகள் மரித்திருக்கலாம்...

பிறந்த பச்சிளம் குழந்தையை 8ம் நாளில் ஆண்குறியின் நுனித்தோலை வெட்ட அனுமதிப்பது என்பது *விசுவாசமில்லாத* மீதியான் தேசத்து தாயின் இருதயத்திலிருந்து எதிர்பார்க்க முடியாது !!

மோசே பல முறை போராடியிருக்கலாம்..

ஆனால், இப்போது தேவனுடைய வேலையை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் (யாத். 3:10)

அவர் தன் வீட்டிற்கு போய் மாமனாரிடம் அனுமதி கேட்டு மனைவியையும் பிள்ளையையும் கூட்டிக்கொண்டு வருகிறார் (யாத். 4:18-20)

இவ்வளவு நடந்தும் தேவனுடைய கட்டளைக்கு கீழ்படியாமல் தன் குழந்தையின் மீது பாசம் வைத்து விருத்தசேதனத்தை நிறைவேற்றாமல் விட்டதன் விளைவு “தேவன் மோசேயை தண்டிக்க முற்படும் போது”  சிப்போராள் உடனடியாக தன் மகனுக்கு விருத்தசேதனம் செய்ய சம்மதித்து *தானே அதை கடுங்கோபத்துடன் செய்து முடிக்கிறாள்* (யாத். 4:25)

அவள் கூறும் வார்த்தையை கவனிக்கவும் :
நீ எனக்கு *இரத்த சம்பந்தமான புருஷன்* என்கிறாள்.... அதாவது என் குழந்தைக்கும் எனக்கும் இடையே *நீ இரத்தம் படிந்த கணவன் என்றாள்*.. ஆங்கிலத்தில் இது தெளிவாக புரியும் – *Bloody husband* !!

புதிய ஏற்பாட்டில் விருத்தசேதனம் இல்லை.
அதற்கு மாறாக ஞானஸ்நானம் ஒப்பிடப்பட்டிருக்கிறது (கொலோ. 2:11-12)

ஆனால் ஞானஸ்நானமே எடுக்காமல் ஊழியம் செய்யும் நபர்களின் நிலைமை என்னவாய் முடியுமோ !!!

பல சபைகள் இன்று ஞானஸ்நானத்தை ஒரு சடங்காக பார்க்கிறார்கள்.
சிலர் ஏதோ முழுகினால் போதும் என்கிறார்கள்.
சிலர் வணக்கம் சொன்னால் போதும் என்கிறார்கள்.
சிலர் இஷ்டம்னா எடுங்க இல்லனா மெதுவா எடுத்துக்கலாம் என்கிறார்கள்.
சிலர் அவசியமில்லை என்கிறார்கள் !!

வேதத்திற்கு கீழ்படிவோம்.

கிருபையின் காலம் என்பதால் துணிகரம் கூடிவிட்டது...

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக