*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
மேன்மேலும் ஆசீர்வதிக்கிற இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
அள்ள அள்ள குறையாது என்பார்கள்.
ஊற்றுத்தண்ணீர் சுத்தமாய் இருக்கும் என்று நாம் அறிந்து இருக்கிறோம்.
சித்திரம் கைப்பழக்கம் என்ற பழமொழியும் உண்டு.
சின்ன வயதில் படித்து மனனம் செய்த வசனங்களோடு காலத்தை ஒட்டிக்கொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள் போதும் என்கிற மனதோடு இந்த விஷயத்தில் இருந்து விட கூடாது !!
அங்கொன்றும் இங்கொன்றும் அவ்வப்போது சிறு பிள்ளையில் படித்த வசனத்தோடு நின்றுவிடாமல் இன்னும் மேலும் வசனங்களை படித்து இருதய ஊற்றை புதுபிப்பது அதிக ஆசீர்வாதம்.
தேவ வசனத்தை இருதயத்தில் அர்த்தமுடன் பொதிந்து வைப்பதன் பலன் – தேவனுக்கு விரோதமான பாதையில் பிரயாணிப்பதை தடுக்கும். சங் 191:11
தேவ வார்த்தைகளை மனனம் செய்தல் சந்தோஷத்தையும் இருதயத்திற்கு மகிழ்ச்சியையும் தரும். எரே 15:16
இருதயத்தில் தக்கவைக்கப்பட்டிருக்கும் வேத வசனங்களினால் – நாம் மனுஷர்களின் நிந்தனைக்கு பயப்படாமலும் தூஷணங்களால் கலங்காமலும் இருக்கலாம். ஏசா 51:7
தேவவசனத்தை இருதயத்தில் வைத்திருக்கும்போது சகல ஞானமும் பரிபூரணமாய் நமக்கு உண்டாகும். கொலோ 3:16
உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். மத் 13:12
Eddy Joel Silsbee,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக