*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
சர்வ சிரிஷ்டிக்கும் அநுதின போஜனத்தை அளிக்கும் தேவன் தாமே நம்மை நினைத்தருள்வாராக.
ஊழியமோ, வேத வாசிப்போ, ஆத்தும ஆதாயமோ, ஜெபமோ, தொழுகையோ, காணிக்கை கொடுக்கும் பழக்கமோ பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் கிடையாது. வாய்ப்பும் இல்லை.
காலையில் எழுந்ததும் பறந்தும் அலைந்தும் திரிகிறது. பல இடங்களுக்கு சென்று மீண்டும் தன் இடத்திற்கு மாலையில் திரும்பிவிடுகிறது. எந்த பறவையோ மிருகமோ பசி என்று இரவில் வயிற்றை பிசைந்து கொண்டு கதறுவதில்லை. சகலத்திற்கும் அதினதின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
அன்றாட தேவைகளை ஆண்டவர் அவைகளுக்கு கொடுக்கிறேன் என்று சொல்கிறார். மத் 6:25-32
ஆனால், ஊழியத்தையும், தொழுகையையும், ஜெபம் என்று எப்போதும் தேவனை நோக்கிக்கொண்டிருக்கும் நம்மை அவர் கவனிக்காமல் இருப்பதெப்படி என்று நம்மிடம் கேட்கிறார்? மத் 6:32
ஆகவே அன்றாட தேவைகளைக் குறித்த பயமின்றி அந்தந்த நாள் நம்முடையதை நமக்கு வழங்கும் என்பதை மனதில் வைத்து கவலையற்றிருப்போம். அனைத்தும் திருப்தியாய் நிறைவேறும். மத் 6:34
நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதுமில்லை என்ற வசனத்தை மாத்திரம் படித்து திருப்திகொள்ளாதிருங்கள்... இந்த வசனத்தை முழுமையாய் வேதத்தில் வாசித்து முன்வரிசையில் உள்ளவற்றை கடைபிடிக்கும் போது தான் தேவன் நம்மை கைவிடுவதில்லை !! எபி 13:5
*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக