*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee
உன்னதங்களில் வாசம் செய்யும் நித்திய பிதாவின் கிருபை நம்மை ஆண்டுகொள்வதாக.
பாவம் செய்த போது, ஆதாம், தான் நிர்வாணியாய் இருப்பதை உணர்ந்தார்.
அவமானப்படும்படியாக, பாவம் செய்த இஸ்ரவேலர்களை ஆரோன் நிர்வாணமாக்கினார். (யாத் 32:25)
“பாவமில்லாதபோது” - நிர்வாணம் தவறாக தெரியவில்லை. ஆதி 2:25; யோபு1:21; பிர 5:15; மீகா 1:8; ஆமோஸ் 2:16
பிசாசு பிடித்தவர்களும், பாவத்தால் மேற்கொள்ளப்பட்டவர்களும் - பொது இடங்களில் நிர்வாணமாக நின்றதை நமது வேதாகமத்தில் பார்க்கிறோம் (மாற்கு 5:15)
பொது இடங்களில் நிற்பது – தாழ்மையையோ, உலகத்தை வெறுத்து வாழ்வதையோ காண்பிப்பது அல்ல.
பாவஞ்செய்து, சரீரம் மண்ணுக்கு திரும்பவேண்டும் என்ற கட்டளைப்பெற்ற பின் பிறந்த நாமனைவரும் சரீரத்தை மூடியிருக்க வேண்டும் என்று ஆண்டவர் தாமே தோல் ஆடைகளை ஆதி தம்பதியருக்கு உடுத்துவித்தார். ஆதி 3:21
மரிக்கும் வரை உணர்வுகளும் உறவுகளும் அனைவருக்கும் உண்டு. மிருகங்களுக்கு அந்த அறிவு கொடுக்கப்படவில்லை.
தவறான போதனைக்கும், புரிதலுக்கும், கலாச்சார சீரழிவிற்கும் தப்பி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக நடப்போம். எசே 23:29
நித்திய கட்டளைக்கு உட்படாமல்,
பணம், செழிப்பு, அதிகாரம், பதவி, சம்பாத்தியம், உறவுகள், சொத்துக்கள், குடும்பம் அனைத்தை உதறிவிட்டு சுயம் வெறுத்தவன் என்று துறந்து அலைவதால் – மோட்சத்தை சம்பாதித்து விடலாம் என்றால், உன்னதத்தின் மகிமையான வாசலண்டை கூட போகமுடியாதாம். ரோ 11:6, தீத்து 3:5
வாழ்நாள் சம்பாத்தியம் அனைத்தையும் கொடுத்தாலும் ஒரு சதுரடி நிலத்தை கூட பரலோகத்தில் நமக்கென்று இடஒதுக்கீடோ முன்பதிவோ செய்துக் கொள்ள முடியாது !!
அந்த பாக்கியத்தை நாம் கிருபையால் மாத்திரமே பெற்றுக்கொள்கிறோம். கிரியையினால் அல்ல. யோ 14:3, 1பேது 1:13-16, தீத்து 3:5-6, எபே 2:5
கர்த்தருக்கு கீழ்படிந்து, பயந்து, சத்தியத்தின்படி நடப்போம். அவரே நம்மை உண்டாக்கியவர் !!
*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+968 93215440 / joelsilsbee@gmail.com
* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக