புதன், 16 செப்டம்பர், 2020

#1014 - அடக்கம் செய்யப்பட்டால் மட்டுமே பரலோகம் செல்லமுடியும். எரியூட்டப்பட்டால் தேவன் நம்மை நிராகரித்து விடுவார் என்பது உண்மையா?

#1014 - *அடக்கம் செய்யப்பட்டால் மட்டுமே பரலோகம் செல்லமுடியும் என்றும் எரியூட்டப்பட்டால் தேவன் நம்மை நிராகரித்து விடுவார் என்பது உண்மையா?*

இன்றைய சூழலில் அநேக ஜனங்கள் மரித்து சில சடலங்கள் அடக்கம் பண்ணப்படுகிறது. சில சடலங்கள் எரியூட்டப்படுகிறது. "அடக்கம் செய்யப்பட்டால் மட்டுமே பரலோகம் செல்லமுடியும். எரியூட்டப்பட்டால் தேவன் நம்மை நிராகரித்து விடுவார் என்பது உண்மையா? உண்மை என்றால் எரியூட்டப்பட்டவர்களின் நிலை என்ன? வேதாகமத்தின் படி விளக்கவும்.,.

*பதில்*:
நாம் இப்போது கொண்டிருக்கும் சரீரம் மண்ணினால் ஆனது. ஆதி. 3:19, பிர. 3:20, சங். 104:29

பூமியானது கிறிஸ்துவின் வருகையில் அழிக்கப்படும். 2பேதுரு 3:10-12

அழிவுள்ள இந்த சரீரம் அழியாமையாகிய பரலோகத்திற்குள்ளேயோ சாவுக்கேதுவான இந்த சரீரம் சாவாமையுள்ள இடத்திற்கோ நரகத்திற்குள்ளேயோ பிரவேசிக்காது. 1கொரி. 15:50, 53

மரித்தோர் தங்களின் அதே சரீரத்தை பெறுவார்கள் என்று வேதாகமம் சொல்லவில்லை. கிறிஸ்துவின் வருகையில் அனைவருக்கும் புதிய அழிவில்லாத சரீரம் கொடுக்கப்படுகிறது.1கொரி. 15:52, 40.

பூமிக்குரிய இந்த அழிவுள்ள சரீரம் ஆகாரம் இல்லையென்றால் வாடிப்போகும்.

ஆனால், பரலோகத்திலும் நரகத்திலும் எந்த ஆகாரமும் அளிக்கப்படுவதில்லை. ரோ. 14:17

எந்நாளும் எப்போதும் பரலோகத்தில் ஆனந்தமாய் தேவனோடு வாழ்வோம்.

நரகத்தில் உள்ளவர்கள் அவியாத அக்கினியில் எப்போதும் வாதிக்கப்படுகிறார்கள். மாற்கு 9:48

ஆதி காலத்தில் மலைகளில் குடியிருந்த ஜனங்கள் மரித்ததும் கல்லில் ஓர் அறையை ஒதுக்கி அதில் சரீரத்தை விட்டுசெல்வார்கள். அடக்கம் பண்ணப்படுதல் முதல் எபிரேயர்கள் கைக்கொண்ட ஒரு பழக்கம். ஆதி. 23:4.

மரித்த அன்றே அடக்கம் பண்ணப்படவேண்டும் என்பது கட்டளை. உபா. 21:23

எரிந்து போன சரீரமோ, கடலில் விழுந்து மரித்த சரீரமோ, விமானத்தில் வெடித்து சிதறிய சரீரமோ எதுவானாலும் கடைசியில் அது பூமிக்குரிய அழிவே.

உயிர்த்தெழுதலில் சரீரம் அல்ல, ஆத்துமாவே முக்கியம். எப்படி மரித்தாலும் அந்த ஆத்துமா நியாயத்தீர்ப்பிற்கென்று பத்திரமாக காத்திருக்கும். எபி. 9:27

கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் பல இந்து அமைப்புகளும் அடக்கம் செய்வதுண்டு.

எவரும், மரிப்பதற்கு முன்னரோ அல்லது கிறிஸ்துவின் வருகைக்கு முன்னரோ - சத்தியத்தை அறிந்து வேதத்தின்படி வாழ்பவர்கள் நியாத்தீர்ப்பிற்கு பின்னர் பரலோகம் செல்வது உறுதி. 1தெச. 4:17, 2கொரி. 5:10

அதன்படி வாழாதவர்களும் உயிர்த்தெழுவார்கள் ஆனால் நியாயத்தீர்ப்பில் தங்கள் தங்கள் பங்கிற்கேற்ப அனைவரும் தண்டனையைப் பெறுவார்கள். 2தெச. 1:7

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக