திங்கள், 24 ஆகஸ்ட், 2020

#1001 - கிறிஸ்தவர்கள் வரதட்சணை வாங்குவது சரியா? பிழையா? வேத ஆதாரத்துடன் விளக்கம் தரவும். நன்றி

#1001 - *கிறிஸ்தவர்கள் வரதட்சணை வாங்குவது சரியா?  பிழையா? வேத ஆதாரத்துடன் விளக்கம் தரவும். நன்றி*

*பதில்* :  வேதாகமத்தின் உதாரணமோ - மாப்பிள்ளை வீட்டாரே பெண் வீட்டாருக்கு கொடுத்திருக்கிறார்கள்.

ஆதி. 34:12 - பரிசமும் வெகுமதியும் நீங்கள் எவ்வளவு கேட்டாலும், உங்கள் சொற்படி தருகிறேன்; அந்தப் பெண்ணைமாத்திரம் எனக்கு மனைவியாகக் கொடுக்கவேண்டும் என்றான்.

யாத். 22:17 - அவள் தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்றானாகில், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் பரிச முறைமையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்கவேண்டும்.

நாம் கண்டுகொண்டிருக்கும் தலைமுறையிலோ, பெண் வீட்டார் - பெண்ணையும் கொடுத்து, பணத்தையும் கொடுத்து, நகையையும் கொடுத்து, வீட்டைவிட்டு வெளியே அனுப்புவது - மாப்பிள்ளைக்கு ஜாக்பாட்.

வேதத்தில் இந்த முறை இல்லை !!

இராஜாவாகிய சவுல், தன் மகளை தாவீதிற்கு மணம் முடிக்க கேட்ட வரதட்சனை பெலிஸ்தியரின் 100 நுனித்தோல்கள் !! 1சாமு. 18:25

யாக்கோபு மனைவியை பெற்றுக்கொள்ள ஏழு வருஷம் வேலை செய்து கடன் அடைக்கவேண்டியிருந்தது. ஆதி. 29:20

விதவையை (கைம்பெண்ணை) திருமணம் செய்வதானாலும் கணவனே தன் மனைவியை விலைகொடுத்து வாங்கினார். ரூத் 4:10

யாக்கோபு சீரியா தேசத்துக்கு போய், ஒரு பெண்ணுக்காக ஆடு மேய்த்தான். ஓசியா 12:12

மகளின் சந்தோஷத்திற்காக, வாழ்க்கைக்காக ஒரு தாதிப்பெண்ணை, பெண்ணின் தகப்பனார் மனமுவந்து கொடுப்பதும் நடந்திருக்கிறது. ஆதி. 29:24,29

மணப்பெண், தன் தகப்பனிடம் உரிமையோடு தன் வாழ்க்கைக்கென்று கேட்டு பெற்றுக்கொண்டதும் வேதத்தில் காணமுடியும். யோசு. 15:17-19

நாங்கள் கேட்டு பழக்கம் இல்லை. எங்கள் முதல் மருமகள் 50பவுன் மற்றும் 25 லட்சம் பணத்துடன் எங்கள் வீட்டில் நுழைந்தாள் என்றோ நாங்கள் எங்கள் மகளுக்கு இவ்வளவு செய்து அனுப்பினோம் மற்றபடி நீங்கள் உங்கள் பெண் பிள்ளைக்கு மனமுவந்து எதை செய்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று சர்வ நடிப்போடு லாவகமாக தங்கள் எதிர்பார்ப்பை சொல்லிவிடும் சாதுர்யம், சகல அங்கீகாரத்துடனும் பரவிக்கிடக்கும் கொள்ளை வியாபாரம்.

மேலும், வரதட்சனை கை மாறும் போது பெண் வீட்டார் தங்கள் ஊழியரை அழைத்து ஆசீர்வதித்து ஜெபிக்க சொல்வது – கடவுளுக்கே லஞ்சம் கொடுக்க முயற்சி செய்கிறவர்கள் !!

இலங்கையில், இஸ்லாமிய தமிழர்கள் பெரும்பாலும் - பெண் வீட்டார் நகை பணம் முதலியனவற்றை மாப்பிள்ளை வீட்டிற்கு கொடுத்து, மணம் முடித்து, மாப்பிள்ளையை தங்கள் வீட்டோடு வைத்துக் கொள்வார்கள் !!

அரேபிய இஸ்லாமியர்கள் இன்றும் - மாப்பிள்ளை வீட்டாரே சகல செலவையும் பெண்ணின் தகப்பனுக்கு கொடுத்து (விலையாக) பெண்ணை விலை கொடுத்து வாங்கி தன் வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பத்தை துவங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் வரதட்சனை என்பது - கொள்ளையோ கொள்ளை. அது சட்டவிரோதம்.

*போதாக்குறைக்கு, மணப்பெண்ணை பேசி முடிப்பதில் ஊழியர்களே ஆர்வத்துடன் இரு குடும்பத்திற்குமிடையே  பணபரிவர்த்தனையிலும் ஈடுபட்டு பேரம் பேசி பெருந் தொகையை நிர்ணயித்து அதில் இருவீட்டாரிடமிருந்தும் (காணிக்கை என்ற பெயரில்) கமிஷனையும் வாங்கும் மிகக் கேவலமான தொழிலில் ஈடுபட்டிருப்பது இக்காலங்களில் என் காதுகளில் விழுந்த மிக துக்ககரமான செய்திகளில் ஒன்று*.

ஆட்சியிலும், அதிகாரத்திலும், வாழ்க்கையிலும், பிரசங்க பீடத்திலும் இருக்கிறவர்கள் இந்த கலாச்சாரத்தை மாற்ற பிரதிக்கினையை எடுக்கவேண்டும்.

மணவாளனாகிய கிறிஸ்து, தானே, தன் சரீரத்தையும் இரத்தத்தையும் உயிரையும் கொடுத்து மணப்பெண்ணாகிய நம்மை இலவசமாக வாங்கியிருக்கிறார்.. எபே. 5:27

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக