*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee
சகாயராகிய தேவன் நம்மை இன்னும் பெலப்படுத்துவாராக.
போராட்டம் என்பது மூச்சு சரீரத்தில் தங்கும் வரை தான்.
அது போல சமாதானம் என்பது கிறிஸ்துவோடு இருக்கும் வரை தான்.
இந்த உலகத்தில் போராட்டம் உண்டு என்று கிறிஸ்து சொன்னார். யோ 16:33
நேருக்கு நேராக வந்து நம்மை எதிர்ப்பவர்களை விட தன் அதிகாரத்தினாலும் பலத்தினாலும் மறைமுகமாக தாக்குபவர்களையும் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். எபே 6:12
எளிமையான நாம் உலகத்தாரை ஜெயிக்க வேண்டுமெனில் – கிறிஸ்துவுக்குள்ளாக பொதிந்து கொள்ளவேண்டும். கலா 3:27
அவருடைய அரவணைப்பு இல்லாமல் நமக்கு நிம்மதி கிடையாது.
எதிர்ப்பவர்களை வீழ்த்துகிற ஆயுதம் எப்போதும் தயாராக நம் வாயில் இருக்க வேண்டும். எபே 6:17
வேத வசனமே நம்மை ஆறுதல் படுத்தும். அதை தாவீது நன்கு உணர்ந்திருந்தார் (சங் 119:92)
துக்கம் தொண்டையை அடைக்கும் போது, தேவனை நோக்கி நம் முழங்கால் மடங்கினால் கிறிஸ்துவின் அன்பு வெளிப்படும். மத் 28:20 பிற்பகுதி, சங் 91:15
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/GxTQqKPQhuuF4bDycL8S17
வீடியோ செய்திகளுக்கு என்னுடைய YouTubeஐ Subscribe செய்யவும்:
https://www.youtube.com/c/EddyJoels/videos

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக