#997 - *10,000 ஆண்டுகள், மில்லியன் ஆண்டுகள் பில்லியன் ஆண்டுகள் பழமையான தடயம் கிடைத்தது என்று அடிக்கடி செய்திகள் வெளியாகிறதே? அப்படியென்றால் வேதாகமத்தின்படி உலகம் உருவாகி எத்தனை காலங்கள் ஆனது? விளக்கவும்*.
*பதில்* : அவசியமான முக்கியமான கேள்வியை கேட்டமைக்கு என் மனமார்ந்த நன்றிகள். நீளமான பதில்.
முதலாவது யோபு 38: 1-11 வசனங்களை கவனிக்கவும்.
யோபு 38:1-11 அப்பொழுது கர்த்தர்: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு உத்தரவாக: அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்?
இப்போதும் புருஷனைப்போல் இடைகட்டிக்கொள்; நான் உன்னைக்கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு.
நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.
அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு.
அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்?
அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.
கர்ப்பத்திலிருந்து உதிக்கிறதுபோல் சமுத்திரம் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்?
மேகத்தை அதற்கு வஸ்திரமாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும்,
நான் அதற்கு எல்லையைக் குறித்து, அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு:
இம்மட்டும் வா, மிஞ்சி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவது என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்?
*ஆச்சரியமானதும் ஆழமாக யோசிக்க வேண்டிய கேள்விகளுமாயிற்றே* !!
நமது உலகம் பில்லியன் கணக்கான ஆண்டுகள் பழமையானது என்ற அனுமானம் நம் கலாச்சாரத்தில் எல்லா இடங்களிலும் தோன்றுகிறது.
ஆனால் கடவுள் யோபுவை சுட்டிக்காட்டியபடி, துவக்கத்தில் நடந்தவைகளை சொல்லும்படியாக மனிதன் அப்போது இல்லை (யோபு 38:2). அறிவியலில் இன்று நம்மிடம் உள்ள அனைத்தும் மனித கணக்குகளினாலும் யூகங்களினாலும் வகுக்கப்பட்ட அடிப்படையைக் கொண்டவை.
“உலக அறிவியல்” தற்போது 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான உலகத்தைக் கொண்டுள்ளது.
"இந்த 4.5 பில்லியன் ஆண்டுகள் என்பது ரேடியோமெட்ரிக் வயது கணக்கின் சான்றுகளின் இந்த வயது பழமையான-அறியப்பட்ட நிலப்பரப்பு மற்றும் சந்திர மாதிரிகளின் வயதுடன் ஒத்துப்போகிறது" [ஆதாரம் விக்கிபீடியா Link 1, refer at the end of this post]
சொல்லப்பட்டதைக் கவனியுங்கள், *பழமையான தேதிகளை எடுத்துக்கொள்வதன் மூலம்* வயது பெறப்படுகிறது.
*வேதத்தின்படி பூமியின் வயது என்ன*?
உலகளாவிய காலண்டர் என்ற எதுவும் பயன்பாட்டில் இல்லாததால் வேதாகமத்தின்படி கால அளவை காண்பது சற்றே கடினம்.
தற்போதைய மன்னர் எவ்வளவு காலம் ஆட்சி செய்தார் என்பது போன்ற உள்ளூர் சரித்திர நிகழ்வுகளுடன் ஒப்பிடும்போது காலம் அளவிடப்பட்டது.
இப்படிப்பட்ட எந்த நிகழ்வுகளும் ஒரு காலண்டர் ஆண்டின் தொடக்கத்தில் தான் ஆரம்பமாகும் என்ற நிலை அரிதாகவே நிகழும் என்பதால் இது கொடுக்கப்படும் காலங்கள் தோராயமாக முழு ஆண்டு என்ற வட்டமிடல் முறையில் எடுக்க (round-off) வழிவகுக்கிறது.
ஆகவே, குறிப்பிடப்படும் வருடங்களை துல்லியமாக கணக்கிடவேண்டுமெனில் சிறிதளவில் கூடுதல் குறைவாக (approximately More or less) ஆகலாம்.
*எ.கா*. : ஐந்து மன்னர்களின் ஆட்சியின் காலத்தைப் பயன்படுத்தி நீங்கள் ஒரு காலஅளவை நிர்ணயிக்க முயன்றால், உண்மையான தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் கணக்கிடமுடியும்.
வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ள கால ஆண்டுகள் இன்னும் சிறப்பாகவே அளிக்கப்பட்டுள்ளது.
1. இஸ்ரவேலர் எகிப்தில் இருந்த காலம் 430 ஆண்டுகள் - யாத்திராகமம் 12: 40-41
2. இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள் துவங்கி முதல் தேவாலயம் கட்ட துவங்கிய காலம் 480 ஆண்டுகள் – 1 இரா. 6:1
இவ்வாறு துல்லியமாக கொடுக்கப்பட்டவைகளின் கால ஆண்டுகளை கணக்கிடுவது சுலபம்.
இவ்வகையில் காணும்போது வேதாகமத்தின் அடிப்படையில் இந்த பூமிக்கு சுமார் 6,000 ஆண்டுகள் என்று சொல்ல முடியும்.
நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வேறுபாடு உள்ளதாக ஒருவர் வாதிட்டாலும் அது சில நூறு ஆண்டுகள் மாறுபடலாமேயன்றி – பில்லியன் மில்லியின் ஆண்டுகள் என்ற அவர்கள் யூகத்தை நிரூபிப்பது கடினம்.
*அறிவியல் பதிவு சீரானதா என்ற இவர்கள் கூற்றை சிறிது ஆராய்வோம்*?
*வானியல் (Astronomy)* :
1-
1979 ஆம் ஆண்டில் வோயேஜர் என்ற விண்கலம், Jupiterன் சந்திரன் என்று அழைக்கப்படும் “அயோ” (IO) வில் உள்ள எரிமலை வெடிப்பதை படம்பிடித்தது.

a. இவர்கள் கணக்குப்படி சூரிய குடும்பம் பில்லியன் கணக்கான ஆண்டுகள் பழமையானதாக இருந்தால், “அயோ” போன்ற சிறிய நிலவுகள் நீண்ட காலத்திற்கு முன்பே குளிர்ந்து, வெடிக்க முடியாமல் போக வேண்டும்.
b. “அயோ” வெடிக்கிறதென்றால் மக்கள் கணக்கிடும் அளவிற்கு சூரிய குடும்பம் (Solar System) அவ்வளவு பழைமையானதாக இல்லாமல் இன்னும் சூடாக இருக்கக்கூடுமல்லவா?
2-
சனி கிரகம் நுண்ணிய துகள்களால் ஆன மோதிரம் போன்ற வளையம் கொண்டுள்ளது.
a. சனியும் அதன் வளையங்களும் பில்லியன் கணக்கான ஆண்டுகளாக இருந்திருந்தால், அந்த துகள்களின் சுற்றுப்பாதை மிகவும் நிலையானதாக இருக்க வேண்டும்
b. சுற்றுப்பாதைகள் மிகவும் நிலையற்றவை என்பதை விண்வெளி ஆய்வுகள் காட்டுகின்றன.
c. எனவே மோதிரங்கள் போன்ற இந்த வடிவம் கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் உருவாகியிருக்க வேண்டும் அல்லது தொடர்ந்து சீர்திருத்தப்பட்டிருக்கும்.

3-
திரவ கோர்களின் (liquid cores) நிமித்தம் கிரகங்களில் காந்தப்புலங்கள் உருவாகின்றன. கிரகங்கள் வயதாகும்போது, மையமானது உறுதிப்படுத்தப்பட்டு காந்தப்புலம் மறைந்துவிடும். இது பெரிய கிரகங்களை விட சிறிய கிரகங்களுக்கு வேகமாக நிகழ்கிறது.
a. 4.5 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு புதனுக்கு காந்தப்புலம் இருக்காது என்று அறிவியல் கருதுகிறது.
b. ஆனால் 1974-1975 ஆம் ஆண்டில் விண்வெளி ஆய்வு மரைனர்-10, புதனைச் சுற்றி இன்னும் ஒரு காந்தப்புலம் இருப்பதைக் காட்டியது.

4-
தொலைதூர நட்சத்திரங்களிலிருந்து நாம் காணும் ஒளியைப் பற்றி என்ன சொல்லலாம், உண்மையில் பழைய பிரபஞ்சத்தைக் காட்டவில்லையா?
a. ஒளியின் வேகம் நிலையானது என்றால் நாம் அதை ஏற்றுக்கொள்ள சிக்கல் உள்ளது. ஏனென்றால், ஒளியின் வேகம் குறைந்து கொண்டிருக்கிறது என்பதற்கான சான்றுகள் பெருகி வருகின்றன !!
b. ஒளி மூலம் பயணிப்பது அதன் வேகத்தை பாதிக்கிறது என்பதை நாம் அறிவோம்.
c. (According to Modern Physics) நவீன இயற்பியலின் படி, எல்லா பொருட்களும் அகற்றப்பட்ட ஒரு வெற்று இடத்திலும் ஆற்றல் (Energy) உள்ளது. வெற்று இடத்தில் உள்ள ஆற்றலின் அளவு ஒளியின் வேகத்தை பாதிக்கிறது.
d. இந்த பரவலான ஆற்றலில் சிலவற்றை மாற்றுவதன் மூலம் கடவுள் ஒரு விஷயத்தை படைத்தால் என்னாவது? ஆற்றல் மாற்றப்படுவதால் ஒளியின் வேகம் டிரில்லியன் கணக்கான மடங்கு வேகமாக இருந்துவிடுமல்லவா?
e. தூரங்கள் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கணக்கிடுகிறோம் என்பதில் பிரச்சினையின் ஒரு பகுதி !! காரணம் அந்த எண்களை சரிபார்க்க எந்த முறையும் கிடையாது. ஏனெனில் யாரும் அங்கு செல்ல முடியாது !!

5-
மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நட்சத்திரங்களைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் தான் நாம் அதிக விவரங்களைக் காண முடியும் என்றாலும், சிரியஸ் (Sirius) போன்ற நட்சத்திரங்களைப் பற்றி கடந்த காலங்களில் இருந்து அவதானித்த பதிவுகள் இன்னும் உள்ளன.
a. சிரியஸ் பி (Sirius B) ஒரு வெள்ளை குள்ள நட்சத்திரம் (white dwarf star). ஆனால் எகிப்திய வானியலாளர்கள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதை ஒரு சிவப்பு நட்சத்திரம் என்று வர்ணிக்கின்றனர். 50கி.முவில் ரோமானிய ஆட்சிசபை உறுப்பினரான சிசரோவும் (Cicero) அவ்வாறே செய்தார். 150 கிபி.யில் புகழ்பெற்ற வானியலாளரான டோலோமி (Ptoloemy), சிரியஸைக் (Sirius) காணக்கூடிய ஆறு சிவப்பு நட்சத்திரங்களில் ஒன்றாக பட்டியலிட்டார்.
b. தற்போதைய கோட்பாட்டின் படி, நட்சத்திரங்கள் பல கட்டங்களை கடந்து செல்கின்றன:

(1) ஈர்ப்பு வாயு மூலக்கூறுகளை ஒன்றாக இழுத்து அவை எப்படியாவது பற்றவைக்கின்றன. (Gravity pulls gas molecules together and they somehow ignite)
(2) நட்சத்திரம் 100 மில்லியன்கணக்கான ஆண்டுகளாக எரிகிறது, இறுதியில் ஒரு சிவப்பு ராட்சதராக வடிவுபெறுகிறது.
(3) பின்னர் இந்த சிவப்பு ராட்சதமானது மெதுவாக ஒரு வெள்ளை குள்ளனாக (white dwarf star) சரிகிறது.

c. ஆனால் சிரியஸ் பி இன் சரிவு மெதுவாக இல்லை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இது நட்சத்திர உருவாக்கம் பற்றிய கோட்பாட்டின் எஞ்சிய பகுதியை கேள்விக்குள்ளாக்குகிறது. பண்டைய வான் ஆராய்சியாளர்கள் தவறிழைத்தார்கள் என்பது வழக்கமான பதில்.
*இயற்பியல் (Physics)* :
1-
கதிர்வீச்சு நைட்ரஜன் அணுக்களைத் தாக்குவதால் கார்பன்-14 மேல் வளிமண்டலத்தில் உருவாக்கப்படுகிறது.
a. உயிரினங்கள் கார்பன்-14 ஐ உறிஞ்சுகின்றன. ஆனால் இறந்த எதுவும் புதிய கார்பன்-14ல் எடுக்காது.
(1) ஒவ்வொரு 5,730 வருடங்களுக்கும் கார்பன்-14 அதன் பாதி அளவு சிதைவடைவதால், மீதமுள்ள தொகையை அளவிடுவதன் மூலம் ஏதேனும் ஒரு பொருள் இறந்துவிட்ட காலம் எவ்வளவு என்பதை மதிப்பிடலாம்.
(2) ஒரு மில்லியன் ஆண்டுகளில், கார்பன்-14 எஞ்சியிருக்காது. அனைத்தும் அழிந்து போகிறது.

b. பிரச்சனை என்னவென்றால், நம்மிடம் உள்ள அனைத்து கரிம பொருட்களிலும் குறைந்தது 0.3% லிருந்து மேலான அளவில் அதனதன் தன்மைக்கேற்ப கார்பன்-14 இடம்பெற்றுள்ளது.
(1) அதில் நிலக்கரி, எண்ணெய் மற்றும் இன்றும் வெளியெடுக்கப்படாத (unfossilized) டைனோசர் எலும்புகளும் அடங்கும்.
(2) இது வாழ்க்கையின் மிகப் பழமையான வயது 46,000 ஆண்டுகள் என்றாகிறது.

காந்தப்புலம் நினைவில் இருக்கிறதா? பூமியின் காந்தப்புலம் பற்றி என்ன?
a. புலம் குறைந்து வருவதை நாங்கள் அறிவோம். இது கடந்த 1,400 ஆண்டுகளில் 50% வலிமையை இழந்துள்ளது.
அந்த விகிதத்தில் கணக்கிட்டால் உயிர்வாழ்வதற்கு மிகவும் அவசியான இருப்பிலிருக்கும் காந்தப்புலமானது 10,000 ஆண்டுகளுக்கு மாத்திரமே போதுமானதாக இருந்திருக்கும்.

கதிரியக்க பொருள் சிதைவடைவதால், இது கிரானைட் கற்களில் காணப்படுவது போன்ற பாறை படிகங்களில் தனித்துவமான ஹாலோஸை (halos) விட்டு செல்கிறது. ஒவ்வொரு வகை கதிரியக்க பொருட்களும் வெவ்வேறு வகையான வளையத்தை/தடயத்தை விட்டு விடுகின்றன.
a. ஒன்று பொலோனியம் (Polonium), இது நொடிகளில் இருந்து மாதங்களுக்குள் சிதைகிறது.
b. ஒரு வளையம் உருவாக, பாறை ஒப்பீட்டளவில் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் (140 டிகிரி செல்சியஸுக்கு கீழ்). அதிக வெப்பநிலை இப்படிப்பட்ட தடயங்களான மோதிரங்களை/வளையத்தை அழிக்கிறது.
c. கிரானைட்டில் பொலோனிய தடயங்கள் உள்ளன.

(1) பொலோனியம் சிதைந்துபோகும்போது வேறு எந்தப் பொருளிலிருந்தும் வந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.
(2) எனவே பொலோனியம் திடப்படுகிறபோது பாறையில் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.
(3) அப்படியென்றால் – பாறையானது முதலில் திடமாக உருவாகியிருக்காவிட்டால், பாறையானது நொடிகளில் துவங்கி மாத காலத்திற்குள் குளிர்ந்திருக்க வேண்டும்.

*உயிரியல் (Biology)* :
1-
ஒரு விலங்கு இறந்தால், அதன் டி.என்.ஏ சிதைவடையத் தொடங்குகிறது. அறியப்பட்ட 4,000 ஆண்டுகள் பழமையான மம்மியின் டி.என்.ஏ மாதிரிகளின் அடிப்படையில், டி.என்.ஏ 10,000 ஆண்டுகளுக்கு மேல் வாழ முடியாது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
a. ஆனால் டி.என்.ஏ 17 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஒரு மாக்னோலியா இலையிலும், 80 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புகளிலும், 200 மில்லியன் ஆண்டுகள் பழமையான மீன்களிலும் கண்டுபிடிக்கப்பட்டது.
2. புரத மூலக்கூறுகள் நீடிக்க முடியாது, ஆனால் அவை 75 முதல் 150 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புகளில் காணப்படுகின்றன !!
*புவியியல் (Geology)* :
1-
பாறை அடுக்குகளில் காணப்படும் அழிந்துபோன விலங்குகளின் புதைபடிவங்களால் தேதியிடப்படுகின்றன.
a. எடுத்துக்காட்டாக, பிலினா மொல்லஸ்க் (Pilina mollusk) 400 மில்லியன் ஆண்டுகளாக அழிந்துவிட்டதாக நம்பப்படுகிறது, எனவே அவற்றில் பிலினாவுடன் கூடிய பாறைகள் 400 மில்லியன் ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்டவை.
b. ஆனால் 1952 ஆம் ஆண்டில், 400 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று கூறப்பட்டவை – 12,000 அடி கீழே, கடலில் பிலினா மொல்லஸ்க்கை மக்கள் கண்டனர். (ஆதாரங்கள் : Link 2 & 3 refer at the end of this post]
c. மற்றொன்று 1938 ஆம் ஆண்டு முதல் இந்தியப் பெருங்கடலில் சிலரைப் பிடிக்கத் தொடங்கும் வரை 60 மில்லியன் ஆண்டுகளாக அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட கூலாக்காந்த் (coelacanth) ஆகும். (ஆதாரம் Link 4 refer at the end of this post]
d. உயிருள்ள புதைபடிவங்கள் பரிணாமவாதிகளால் விளக்க முடியாத ஒரு பிரச்சினையாகும். மேலும் வாழ்க்கை புதைபடிவங்கள் அவற்றின் புவியியல் தேதிகளை அழிக்கின்றன என்ற உண்மையை அவர்கள் புறக்கணிக்கிறார்கள்.

உலகெங்கிலும் உள்ள மேல் மண் சராசரியாக 12 அங்குல ஆழத்திற்கு குறைவாக இருக்கும். ஆறு அங்குல மேல் மண்ணை உற்பத்தி செய்ய 5,000 முதல் 20,000 ஆண்டுகள் வரை ஆகும் என்று கணக்கிடப்படுகிறது.
a. பூமி பல பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்றால், மேற்பரப்பில் அல்லது கடல்களில் கழுவப்பட்ட நூற்றுக்கணக்கான அடி மேல் மண் இருக்க வேண்டும் – அவ்வாறு இல்லை !!
3-
நிலக்கரி தாவர பொருட்களிலிருந்து உருவாகிறது, இது உருவாக மில்லியன் கணக்கான ஆண்டுகள் ஆகும்.
a. ஆனால் ஆர்கோன் தேசிய ஆய்வகத்தின் விஞ்ஞானி நீங்கள் அமில களிமண் மற்றும் தண்ணீருடன் விறகுகளை கலந்து, 300 டிகிரி பாரன்ஹீட்டில் 28 நாட்கள் காற்று இல்லாத சூழலில் சுட்டுக்கொண்டால், உங்களுக்கு உயர் தர கருப்பு நிலக்கரி கிடைக்கும் என்று கண்டறிந்தார்.
4-
உலகெங்கிலும் ஒரு ஆழமான அடுக்கில் உள்ள பாறைப் பொருள் அதன் மேலே உள்ள அடுக்கில் உள்ள விரிசல்கள் வழியாக வெளியேறும் இடங்கள் உள்ளன (கிளாஸ்டிக் டைக்குகள் - clastic dikes).
a. கொலராடோவில் உள்ள Ute Pass fault என்ற இடத்தில் 500 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஒரு அடுக்கு உள்ளது. அதற்கு மேலே 70 மில்லியன் ஆண்டுகள் பழமையான மற்றொரு அடுக்கு உள்ளது.
b. 500 மில்லியன் ஆண்டுகள் பழமையான சில அடுக்குகளில் 70 மில்லியன் ஆண்டுகள் பழமையான அடுக்கில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
c. திடமான பாறை எப்படி கறைய முடியும்? கடந்த 430 மில்லியன் ஆண்டுகளில் திடப்படாதது இப்போது கறைகிறதா?
d. அப்படியென்றால் இரண்டு அடுக்குகளும் ஒன்றுக்கொன்று ஒரு குறுகிய காலத்தில் அமைக்கப்பட்டிருக்கவேண்டும். இரண்டும் கடினப்படுவதற்கு முன்பு மற்றொன்றின் விரிசல்களாக வெளியேற அனுமதிக்கிறது.

புதைபடிவ மரங்கள் பல அடுக்குகள் வழியாகச் சொல்லும் கணக்கிலும் சிக்கல் உள்ளது (polystrata fossils)
6-
அடுக்கு பாறை உருவாக்கம் மில்லியன் கணக்கான ஆண்டுகள் உருவானதன் விளைவாகும் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது.
a. செயின்ட் ஹெலன் மலை வெடித்தபோது, கருத்து தவறு என்று அறிந்தார்கள்.
b. வெடிப்பின் போது மணிநேரங்களில் அடுக்கு வடிவங்கள் உருவாக்கப்பட்டன.
c. மேலே கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில்: மில்லியன் கணக்கான ஆண்டுகளை நினைப்பது எளிதாக இருக்கும். இருப்பினும், 1980 மே 18 அன்று 6 மணி நேரத்தில் கீழ் அடுக்கு உருவாக்கப்பட்டது, 1980 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி நடுத்தர அடுக்கு உருவாக்கப்பட்டது மற்றும் மவுண்ட் செயின்ட் ஹெலன்ஸ் வெடித்ததைத் தொடர்ந்து 1982 மார்ச்சில் மண் ஓட்டத்தால் மேல் அடுக்கு உருவாக்கப்பட்டது.

*பிற உண்மைகள்* :
1. தற்போதைய மக்கள் தொகை அதன் தற்போதைய நிலையை அடைய 4,000 ஆண்டுகள் மட்டுமே தேவை
2. நயாக்ரா நீர்வீழ்ச்சியின் விளிம்பு சுமார் 5,000 ஆண்டுகள் மட்டுமே இருந்ததைக் குறிக்கும் விகிதத்தில் அணிந்திருக்கிறது.
3. மிசிசிப்பி நதி டெல்டா 5,000 ஆண்டுகளுக்குள் உருவாகியிருக்கலாம்.
மேலும் –
இந்த உண்மைகளின் புள்ளி விபரங்கள் பூமி இளம் வயதுள்ளதை நிரூபிக்கிறது என்று சொல்ல முடியாது.
ஆனால் ஒரு மில்லியன் ஆண்டுகள் பழமையான பூமிக்கான சான்றுகள் உறுதியாக நிறுவப்படவில்லை என்பதை இது தெளிவு படுத்துகிறது.
6,000 ஆண்டுகளின் விவிலிய தேதி ஒரு விஞ்ஞான பார்வையில் இருந்து நம்பத்தகுந்ததாக இருப்பதற்கு உண்மையில் போதுமான சான்றுகள் உள்ளன.
ஆரம்ப நிலைமைகள் என்ன என்பதை அறியாமல் இருப்பதால் விஞ்ஞான பார்வையிலிருந்து வரும் கணக்குகள் ஊர்ஜீதப்படுத்தப்படாதவை. அவைகள் யூகங்களே.
எல்லா தேதிகளும் அனுமானங்களைச் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பதில்கள் நீங்கள் செய்யும் அனுமானங்களைப் பொறுத்தது. ஏனென்றால் குறிப்பிட்ட கால ஆண்டுகளை திரும்பிச் சென்று எந்த அனுமானங்கள் சரியானவை என்பதை எவரும் நிரூபிக்க முடியாது.
*முடிவு என்ன - விசுவாசம் / நம்பிக்கை* :
எல்லா உண்மைகளையும் நாம் ஆராய்ந்து பார்த்தாலும், விசுவாசமே நம்மைப் பார்க்க முடியாதவற்றிற்கு அழைத்துச் செல்கிறது - எபிரெயர் 11:1
பரிணாமவாதிக்கு சீரற்ற நிகழ்வு என்ற வாய்ப்பின் மீது நம்பிக்கை உள்ளது. கிறிஸ்தவனுக்கோ ஒரு படைப்பாளி மீது நம்பிக்கை உள்ளது.
கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலிட்டிருக்கும் ஆதாரங்களைக் கொண்டு எது மிகவும் நியாயமானதாக உள்ளது என்பதை நீங்கள் நிதானிக்கவேண்டும்.
[மேலே நான் எழுதிய மற்றும் தமிழாக்கம் செய்தவைகள் *A Closer Look at the Evidence by Richard and Tina Kleiss* என்ற களஞ்சியத்திலிருந்து எடுக்கப்பட்டவை]
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com
----*----*----*----*----*-----

Link 1 : https://en.wikipedia.org/wiki/Age_of_the_Earth
Link 2: http://www.molluscs.at/tryblidia/index.html?/tryblidia/main.html,
Link 3: https://en.wikipedia.org/wiki/Neopilina
Link 4: https://en.wikipedia.org/wiki/Coelacant

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக