ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 02 Aug 2020


*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee

தம்முடைய வார்த்தைக்கு கீழ்ப்படிகிறவர்களை ஆசீர்வதிக்கும் தேவ குமாரனின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

நேர்மையாய் வாழ்கிறேன் என்று நினைத்து கொண்டு எல்லாரிடமும் அவர்கள் செய்யும் தவறையே சுட்டிக்காட்டி கொண்டு இருந்தால், விரோதிகளை மாத்திரமே வாழ்நாளில் சம்பாதிப்போம் (நீதி 17:9, 16:28)

நம்மை சுற்றி நல்லவர்கள் இருப்பதை விட (மனித) நரிகள் கூட்டம் தான் மிஞ்சி இருக்கும்.

மீறுதல்களை சுட்டிகாட்டுவது அவசியம், நன்மையானதை பாராட்டுவதையும் விட்டுவிடக்கூடாது. 1பேது 4:8

வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு யாக் 3:16

அன்புகூறவேண்டும் என்பதை பல கிறிஸ்தவர்கள் வார்த்தை பிழையில்லாமல் கடைபிடிக்கிறார்கள் !!

ஆம்... அன்பு கூறவேண்டும் என்பதை சரியாக உணர்ந்து அன்பை *கூறிக்* கொண்டு தான் இருக்கிறார்கள்.

எத்தனை வேறுபாடுகள் கசப்புகள் இருந்தாலும், எந்த ஒரு கிறிஸ்தவனின் இருதயமும் ஒருபோதும் மற்றவர்களிடத்தில் அன்பை  கூறிக்கொண்டு இருப்பதையும் கடந்து அன்பு செலுத்த வேண்டும்.

அன்பு செலுத்தவேண்டும் என்பது இராஜாதி இராஜாவின் பிரதான இராஜரீக கட்டளை !! யாக் 2:8

திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.  யாக் 1:27

இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான். நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்துகொள்ளுகிறோம். 1யோ 5:1-2

தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டும்.... 1யோ 4:21

பிரசங்கத்திலும் மேடைகளிலும் அன்பை கூறுவதோடு நிற்காமல் அந்த அன்பை செயல்படுத்தவேண்டும். (1யோ 3:18)

*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/B811iEJfVGh5yRqnJiuTAj
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக