*தினசரி
சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee
எல்லா இடுக்கன்களுக்கும் விளக்கி இரட்சிக்கும்
தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக.
40 வருடங்களாக இஸ்ரவேலை ஆண்டு வெற்றிகளை
குவித்த தாவீது - வாழ்கை முழுவதும் போராட்டங்களை சந்தித்ததாலேயே அது சாத்தியமாயிற்று
!! 1இரா 2:11, 1நாளா 29:27-28, 1நாளா 22:8
போராடாமல் வெற்றி மாத்திரம் வேண்டுமானால்
– அடிப்படை சத்தியம் கூட கற்காமலும் அறியாமலும் BTh, MTh, MBA பட்டங்கள் கிடைப்பது போல சான்றிதழ்களை வாங்கலாம்.
நாட்டுக்கே ராஜா என்றாலும் – திகிலும்,
வனாந்தர வாழ்கையும், போராட்டங்களும், எதிரிகளும், விரோதிகளும், பொய் சாட்சிக்காரர்களும்,
தூஷிக்கிறவர்களும் எப்போதும் அவர் சந்திக்க
வேண்டி இருந்தது. 1நாளா 28:3
ஜெயத்திற்கு அவர் கடைபிடித்த ஒரே ஆயுதம்
– ஜெபம் மற்றும் கர்த்தருடைய ஆலோசனை ! - 1சாமு 22:5, 1இரா 1:32, அப் 13:22
பிரச்சனைகள் கடந்து போகும் மட்டும் தேவனின்
செட்டையின் கீழ் மறைந்து கொண்டார் (சங் 57:1)
ஆபத்து நேரங்களிலும், மற்றவர்கள் எதிர்த்த
போதும் தேவனே அடைக்கலம் என்று அவரை சார்ந்து இருந்தார். (சங் 144:2)
தான் எப்பொழுது கூப்பிட்டாலும் தேவன் செவி கொடுப்பார் என்கிற நம்பிக்கையும், அவர்
செவி கொடுக்க கூடிய அளவில் தாவீதின் வாழ்கையும்
இருந்தது (சங் 18:6)
அப்படி ஒரு அற்பணிப்பு நம்மிடையே காணபடட்டும்.
குதிரைகளும் எருமைகளும் நமக்கு எதிராய்
வந்தாலும் தேவன் நம் பட்சத்த்தில் ஜெயத்தை கட்டளையிடுகிறார். சங் 22:12, நீதி
21:31
பொறுமையாய் அவரை மாத்திரமே
சார்ந்திருப்போம். யாத் 14:14
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches
of Christ
Teacher – World Bible
School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked)
WhatsApp Groupல் இணைய :

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக