By
: *Eddy Joel Silsbee* - *தினசரி சிந்தனைக்கான வேத துளி*
சர்வலோகத்தின் தேவனே நம்மை
வழிநடத்துவாராக.
ஸ்தேவான் ஜனங்களிடத்தில் வல்லமையோடும் ஆதாரதோடும்
அதிகாரத்தோடும் பிரசங்கித்தான்.
கேட்டவர்களோ உணர்வடைவதற்கு பதிலாக மூர்க்கமடைந்தார்கள்,
முடிவில் அவனைக் கல்லெறிந்து கொன்றும் போட்டார்கள் (அப் 7:50-60)
இப்பேற்பட்ட துரோகங்களும், எதிர்ப்புகளும்,
அவமானங்களும், பற்கடிப்பும், முறுமுறுப்பும், தவறான எண்ணங்களும், திரித்துக்கூறும் கதைகளும்,
ஜோடித்து குற்றப்படுத்தும் சம்பவங்களும் உண்மையான எந்த ஒரு ஊழியகாரனுக்கு
எதிராக வராமல் போகாது.
ஒரு துளி தவறும் செய்யாத கிறிஸ்துவிற்கு
சிலுவை கிடைத்ததென்றால் – பல நாள் தெருவிலும் வெயிலிலும் கிடந்து ஜன்னலும் கதவும் பொம்மைகளும்
செய்யப்படுவதற்கு நீங்களும் நானும் காய்ந்து பதமாயிருக்கிற பக்குவமான மரமே !! லூக்கா
23:31
சத்தியத்தின்படி உத்தமமாய் நடந்து நெருக்கடி
வந்தால் அது இந்த சமுதாயம் நமக்கு கொடுக்கும் கேடயம் !! 2தீமோ 3:12
கல்லெறிந்த வேளையில் வானத்தை நோக்கின
ஸ்தேவான் – உட்காரந்து இல்லாமல் இயேசு கிறிஸ்து எழுந்து நின்றதை கண்டவருக்கு
எவ்வளவு உற்சாகம் இருந்திருக்கும் !! அப் 7:56
உற்சாகத்தோடு ஊழியத்தை கொண்டு செல்வோம்.
இன்று கர்த்தருடைய நாள் !!
*Eddy
Joel Silsbee*
Preacher
– The Churches of Christ
Teacher
– World Bible School
WhatsApp
# +91 8144 77 6229
Bible
Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/LDFydae8QOL2ItKGgYSYXq

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக