#996 - *ஆதியாகமம் 6ம் அதிகாரத்தில் வரும் தேவகுமாரர்கள் மனுஷகுமாரத்திகள் யார்?*
*பதில்*
இந்த கேள்வியைக் குறித்து ஏற்கனவே நான் பதிலளித்த ஞாபகம் இருக்கிறது.
ஆதி. 6:1-4 மனுஷர் பூமியின்மேல் பெருகத்துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது: தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள். அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; …. அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.
தேவனால் படைக்கப்பட்ட மனிதன் தன் பரிசுத்தமானது இழந்து போயிற்று என்பதை உணர்ந்து தேவனைத் தேடாதபடிக்கு – இச்சையிலும் பாவத்திலும் தொடர்ந்து தன் வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான்.
வானத்திலுள்ள தேவதூதர்கள் அழகான மனுஷகுமாரத்திகளோடு திருமணம் செய்து பிள்ளைகளை பெற்றதால் – அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் இராட்சதர்களாக பிறந்து விட்டார்கள் என்று ஆதி. 6:4ம் வசனத்தில் வரும் இராட்சதர் என்ற வார்த்தையை வைத்து அநேகர் புரிந்து கொள்கிறார்கள்.
இந்த கருத்திற்கு எந்த ஆதாரமும் வேதத்தில் இல்லை என்பதை நாம் அறியவேண்டும். மேலும் இந்த கருத்து வேதத்திற்கு முரணானது என்றும் நாம் அறியவேண்டும்.
வசனங்களை கவனியுங்கள்:
மாமிசத்தில் அல்ல - தேவதூதர்கள் ஆவியானவர்கள் (எபி. 1:14).
அவர்களுக்கு மாமிசம் கிடையாது. லூக். 24:39.
மாமிசம் இல்லாத அவர்கள் எவ்வாறு உடல் உறவு கொள்ள முடியும். அதற்கு வாய்ப்பு இல்லை.
மேலும் தேவதூதர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை என்று கிறிஸ்து தெளிவாகக் கூறினார். மத். 22:30; லூக். 20:35.
ஆகவே இராட்சதர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள் உடல் வலிமை மற்றும் பலம் வாய்ந்தவர்களை பற்றியதாகும்.
கானானுக்குள் வேவு பார்க்கும் படி சென்ற இஸ்ரவேல் உளவாளிகள் அங்கு உள்ளவர்கள் இராட்சதர்கள் என்று கூறினர். எண். 13:33
இராட்சதர் என்பதற்கு பெரிய அந்தஸ்துள்ள பலவான்கள் என்று அதற்கு முந்தைய வசனத்திலேயே காணமுடியும். எண். 13:32
அவர்கள் உயரமானவர்களாக இருந்தனர். உபா. 2:20-21, உபா. 3:11, 2சாமு. 21:15-22
ஆகவே ஆதி 6ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட
“தேவ குமாரர் என்பது – தேவ வார்த்தைக்கு கீழ்படிந்து வாழ்ந்து வந்த சேத்தின் வம்சாவளியைச் சேர்ந்த ஜனங்களை குறிக்கிறது.
தேவனுடைய ஜனம் என்றும் தேவனுடைய பிள்ளைகள் என்றும் நம்மை தேவன் அழைக்கிறாரே !! யாத். 4:22-23, சங். 82:6-7, எரே. 3:19
தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாமல் மாம்சமான சுயஇஷ்டமான வாழ்க்கை வாழ்வது – மனுஷீகம். அப்படி வாழ்ந்த குடும்பத்தில் உள்ள பெண்களை மனுஷகுமாரத்திகள் என்று அழைக்கிறது இந்த 6ம் அதிகாரம்.
அதாவது பரிசுத்தவான்களாக வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் – மாமிசத்திலே அழகாக சொந்தரியமாக காணப்பட்ட பெண்கள்; தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாமல் அல்லது தேவனை தொழுது கொள்ளாதவர்களாக இருந்தாலும் பரவாயில்லை என்று புறஇனத்தவரில் தங்களுக்கு துணைவியை தேர்ந்தெடுத்து குடும்ப வாழ்க்கையை துவக்கியதால் – பரிசுத்தமான சந்ததி உருவாகாமல் தேவனுக்கு விரோதமான சந்ததியே அதிகம் பெறுகிற்று.
அதாவது விசுவாசிகள் - அவிசுவாசிகளை திருமணம் செய்தார்கள்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
* கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக