*தினசரி
சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee
பாவத்திலிருந்து மீட்டு நித்திய ஜீவனை கொடுக்கும்
இயேசு கிறிஸ்து தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.
கொரிந்து பட்டணத்தாரில் சிலர் - மரித்தபின்
உயிர்தெழுதல் கிடையாது என்றார்கள். (1கொரி
15:12).
சதுசேயரும் உயிர்த்தெழுதல் கிடையாது என்றனர்.
(மத் 22:23)
தனக்கு வேண்டியவர் உயிர்தெழ வேண்டும், மோசமான வாழ்க்கையை வாழ்ந்து மரித்திருந்தாலும், சில கொரிந்து பட்டனத்தினர்
–செத்துப்போனவரின் சரீரத்தை ஞானஸ்நானம் கொடுத்து அடக்கம் செய்தனர். தவறிவிட்டால் மரித்தவர்
சார்பாக வேறொருவர் ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டனர். 1கொரி 15:29
ஒரு சிலரோ, உயிர்தெழுதல் நடந்து முடிந்து
விட்டது என்றனர் (2 தீமோ 2:18)
இந்தியாவில் - ஒரு எலுமிச்சை பழத்தை டயருக்கு
கீழே வைத்து வண்டியை எடுத்தால் எல்லாம் நன்மையாக முடியும் என்று இந்துக்கள் நம்புவது
போல, தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும்
அமைப்பினர் – தன் அப்பா, அம்மா, இயேசு, இரட்சகர், பாவம், மன்னிப்பு என்று எதுவுமே அறியாதிருக்கும்
சிறு குழந்தைக்கு கூட ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள்.
உயிர்தெழுதல் இல்லை என்று ஒரு கூட்டம் சாதித்ததால்
தான் (1கொரி 15:12) அவர்களை பார்த்து பவுல் கேட்ட கேள்வி
தான் இந்த வசனம் - 1கொரி 15:29
பாவம் எது, இரட்சிப்பு எது இரட்சகர்
யார் என்று உணரும் மனநிலையில் இருக்கும் ஒருவர் தான் ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ள தகுதி
பெறுகிறார்... இந்த தகுதியில்லாமல் அல்லது உணர்வு இல்லாமல் எடுத்த எந்த
ஞானஸ்நானமும் வேதத்தின்படி செல்லாது !!
பரிசோதித்து சீர்படுத்திக்கொள்ளவும் !!
சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமாயும்
செய்யப்படக்கடவது..
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches
of Christ
Teacher – World Bible
School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked)
WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/B811iEJfVGh5yRqnJiuTAj

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக