#35 - *இரட்சிக்கப்படுவதற்கு பாவ அறிக்கை அவசியமா?*
இந்த வார வேத பாட வகுப்பில் நீங்கள் சொன்ன ஒரு சம்பவம் இரட்சிக்கப்படுபவருக்கு பாவ அறிக்கை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அதற்கு வேதத்தில் ஆதாரம் இல்லை எனவே விசுவாச அறிக்கை மட்டும் செய்தால் போதும் என்று சொன்னீர்கள்.
ஆதாம் தேவனின் வார்த்தையை மீறி பாவம் செய்த போது அது தேவனுக்கு தெரியும் என்றாலும் தான் செய்த தவறை ஒப்புக்கொள்ள வேண்டுமென்பதற்காக ஆதாமே நீ எங்கே இருக்கிறாய் என்று தேவன் ஆதாமோடு கேட்கிறார். ஆதாம் இருக்குமிடம் தேவனுக்கு தெரியாததல்ல இங்கே ஒரு பாவ அறிக்கை நடைபெற்றது என்பது எனது கருத்து.
அடுத்தது யாக்கோபு வெறுங்கையோடு போனவர் பரிவாரங்களுடன் திரும்பி வருகிறார் ஆனால் இது ஒரு ஆசீர்வாதமல்ல என உணர்ந்து தேவனே என்னை ஆசீர்வதியும் என்று கேட்கிறார் ஆனால் தேவ ஆசீர்வாதம் வேண்டுமானால் அங்கே ஒரு பாவ மன்னிப்பு தேவை எனவே தான் அவரின் பெயர் யாக்கோபு(எத்தன்) என்பதை தேவன் அறிந்திருந்தும் அவர் வாயினாலே அறிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக உன் பெயர் என்ன என்று தேவன் கேட்டிருக்கலாம் என கருதுகிறேன்.
லூக்கா 15ல் இளைய குமாரன் மனந்திரும்பி தகப்பனிடம் வந்த உடன் தன் தவறை அறிக்கை செய்வதை பார்க்கிறோம் அது போல சகேயு.
நீதி. 28:13 மற்றும் 1யோ. 1:5 நான் மிகவும் உங்கள் மீது அன்பு வைத்துள்ளேன் எனவே சபையில் கேட்பது அநாகரிகம் என்று எண்ணி நேரிடையாக தாங்களிடம் எனது கருத்தை பதிவு செய்கிறேன் தயவு செய்து உங்களை குறை சொல்வதாக நினைக்கக்கூடாது
*பதில் :*
பாவத்தை அறிக்கையிட வேண்டியது எந்த மனுஷனுக்கும் நிச்சயம் அவசியம்.
நீங்கள் சொஸ்தமடையும்படி உங்கள் குற்றங்களை ஒருவருக்கு ஒருவர் அறிக்கையிடுங்கள் என்று வேதம் சொல்கிறதே !!
அதில் எந்த மாற்றுக்கருத்தும் யாருமே சொல்வதற்கு இல்லை.
ஞானஸ்நானம் கொடுப்பதற்கு முன்னர் தாங்கள் செய்த எல்லா பாவத்தையும் எழுதியோ அல்லது அறிக்கையாகவோ சொல்லவேண்டும் என்றும் 3 அல்லது 7 பேர் அவர்களை குறித்து சாட்சி கொடுக்க வேண்டும் என்றும் மூன்று மாதம் சபைக்கு தொடர்ந்து வரவேண்டும் என்றும், இப்படி பல காரணங்களை வற்புறுத்துகிறார்கள்.
ஞானஸ்நானம் எடுப்பதற்கு உள்ள படிகளில் வரும் அறிக்கை என்பது *“பாவ அறிக்கை” அல்ல – “விசுவாச அறிக்கை”*.
இரட்சிப்பிற்கு 5 படிகளை நாம் புதிய ஏற்பாட்டில் பார்க்க முடிகிறது.
*1 - “வசனத்தை கேட்க வேண்டும்”*
a. ரோமர் 10:17, விசுவாசம் கேள்வினால் வரும்). விசுவாசம் பாரம்பரியமாய் வருவதில்லை..
b. பாவம் செய்கிற ஆத்துமாவே சாகிறது (எசே. 18:20)
c. கிறிஸ்தவமானது – போதிக்கப்படவேண்டிய ஒரு மார்க்கம் (மத். 28:18-20)
d. சுவிசேஷத்தை ஜனங்கள் கேட்க வேண்டும் (1கொரி. 15:1-4)
*2 - “கேட்ட வசனத்தை விசுவாசிக்க வேண்டும் ”*
a. மத்தேயு 16:16 (கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்க வேண்டும்)
b. யோவான் 8:24 (விசுவாசிக்காவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்)
c. அப். 16:30-31 (அவரை விசுவாசியுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்)
d. மாற்கு 16:16 விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெறுகிறவன் இரட்சிக்கப்படுவான்)
e. ரோமர் 10:17(விசுவாசம் கேள்வியினாலே வரும்)
*3- “மனம்திரும்ப வேண்டும்”*
a. அப். 17:30-31(மனம்திரும்பி இரட்சிக்கப்படவேண்டும்)
b. லூக்கா 24:47 (மனம்திரும்புதலும் பாவமன்னிப்பும் பிரசங்கிக்கபடவேண்டும்)
c. 2கொரி. 7:10 (வருந்தும்போது இரட்சிப்பு வருகிறது)
d. அப். 2:37 (மனதில் குத்தப்பட்டார்கள்)
e. 1தெச. 1:9 (மனம்திரும்பும்போது பாவத்தை விட்டு வெளிவருகிறான்)
*4- “அறிக்கையிடவேண்டும்”*
a. சபை ஸ்தாபிக்கப்பட அடிப்படையாக “கிறிஸ்து தேவனுடைய குமாரன்” என்று அறிக்கையிட்ட போது நடந்தது – மத். 16:16, 18, அப். 4:11-12, 1கொரி. 3:11
b. தான் பிதாவின் முன்பு அறிக்கையிடவேண்டும் என்றால் தன்னை மற்றவர் முன்பு அறிக்கையிடவேண்டும் என்று கிறிஸ்து கூறினார் - மத். 10:32-33
c. கர்த்தராகிய இயேசுவை வாயினாலே அறிக்கையிட்டால் இரட்சிப்பு வரும் (ரோமர் 10:8-10)
d. இயேசு தேவனுடைய குமாரன் என்று ஞானஸ்நானத்திற்கு முன்னர் அறிக்கையிட்டதை பார்க்கிறோம் (அப். 8:37-38)
*5- “பாவ மன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டும்”*
a. ஞானஸ்நானம் எடுக்கிறவர் இரட்சிக்கப்படுவார் – மாற்கு 16:16, அப். 2:38,
b. ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும் போது பாவம் மன்னிக்கப்படுகிறது (அப். 22:16)
ஞானஸ்நானத்திற்கு முன்னர் பாவத்தை அறிக்கைசெய்வதென்றால் – எத்தனை பாவத்தை அவர் பட்டியலிடமுடியும்? *ஞானஸ்நானம் எடுத்தபின் சில பாவங்கள் ஞாபகத்திற்கு வந்தால் அவர் என்ன செய்வது?*
ஞானஸ்நானத்திற்கு பாவ அறிக்கை சொல்லப்படவில்லை. விசுவாச அறிக்கையே செய்யப்படவேண்டும்.
ஞானஸ்நானத்திற்கு முன்பு – தன் பாவ காரியங்களை அறிந்து மனஸ்தாபப்பட்டு மனந்திரும்புவது அங்கு சொல்லப்பட்டுள்ளது.
ஞானஸ்நானத்திற்கு பின்னர் செய்யும் பாவங்களை நிச்சயம் அறிக்கை செய்ய வேண்டியது அவசியம். 1யோ. 1:8-10, யாக். 5:16
அந்த பாவங்களை தேவனிடத்தில் மாத்திரம் இல்லாமல் யாருக்கு விரோதமாய் செய்தோமோ அவர்களிடத்திலும் நாம் ஒப்புரவாகவேண்டியது அவசியமாயிருக்கிறது. ரோ. 12:17, 2கொரி. 8:21, எபி. 13:18
கிறிஸ்தவ அன்பு அதில் வெளிப்பட்டு இருவருக்குமிடையில் நிலை நாட்டப்படுகிறது.
ஆகவே ஞானஸ்நானத்திற்கு முன்பு - பாவத்தையல்ல விசுவாசத்தையே அறிக்கையிடவேண்டும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/BbygVjLN3mr2yki8IstAsg
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
----*----*----*----*----*-----

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக