*தினசரி சிந்தனைக்கான வேத
துளி*
By : Eddy Joel Silsbee
மகத்துவமும் உன்னதமுமான தேவனே நம்மை ஆசீர்வதிப்பாராக.
வேதாகமத்தின் எண்களை ஆராய்ந்து வருகிறோம்.
இன்று எண் 40
40 மொத்தமும் உலகத்தன்மை
(Total Worldliness) / இரட்சிப்பிற்கான சோதனைக்காலத்தை குறிக்கிறது.
(உலகம் 4 x முழுமை 10)
பாவ மனிதர்களை நோவாவின் காலத்தில் அழித்த
போது
40 நாள் (4x10) தேவன் மழையை வருஷித்தார். ஆதி
7:17
40 நாட்கள் மோசே சீனாய் மலையில்
தேவனுடைய கட்டளைக்காக உபவாசத்தில் நின்றார். யாத் 24:18; 34:28;
உபா 9:9
கானான் தேசத்தை 40நாள் இஸ்ரவேலின்
ஒற்றர்கள் வேவுபார்த்தார்கள். எண் 13:25
கோலியாத் இஸ்ரேலுக்கு எதிராக 40நாட்கள்
வந்தான். 1சாமு 17:16
மனந்திரும்பும்படி யோனாவின் மூலம் தேவனின்
எச்சரிப்பு நினிவே பட்டணத்திற்கு எதிராக கொடுக்கப்பட்டது 40 நாட்கள். யோனா 3:4
இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்தார். மத் 4:2
இஸ்ரவேல் ஜனம் 40வருஷம் வனாந்திரத்தை சுற்றினார்கள். யாத் 16:35; எண்
14:33; யோசு 5:6; சங் 95:10
இயேசுகிறிஸ்து பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமானார். அப் 1:3
(40ஐ குறித்து இன்னும் ஏராளமான
பதிவுகள் உண்டு..)
நாளையோடு இந்த எண்களின் பயணம் நிறைவு பெறும்!
* *வேதாகமத்தின் எண்களை வைத்து நாம் ஜோதிடம்
பார்க்க கூடாது* அது சாபம். எண்களிகன் புரிதலுக்காவும் அறிவிற்காகவும் ஆராய்ந்து
வருகிறோம்.
வசனமே நமக்கு ஆதாரம்.
கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்திலும்
அன்பிலும் நிலைகொண்டிருப்போம். 2தீமோ 1:13
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக