By
: *Eddy Joel Silsbee* - *தினசரி சிந்தனைக்கான வேத துளி*
நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனுடைய
நாமத்திற்கே மகிமையும் கனமும் உண்டாவதாக.
இயேசு கிறிஸ்துவானவர் :
1-வாயின் வார்த்தையால் இறந்தவரின் உயிர்
வந்தது.
2-அதட்டலினால் காற்றும் கடலும் கீழ்படிந்தது,
3-தொட்டதும் சுகம் கிடைத்தது,
4-சாப்பாடும் திராட்சை ரசமும் (உழைக்காமலே)
ஜெபத்தினால் அபிவிருத்தி ஆனது.
இப்படி இன்னும் அடுக்க முடியும்.
சரியான முறையில் அறியாமலேயே கக்கத்தில்
வேதத்தை வைத்துக்கொண்டு சுற்றுயுள்ளோரை ஆட்டுவித்துக்கொண்டு இருப்பவர்கள் - இதில் ஏதாவது
ஒரு சக்தி “கை வசம் இருந்தால்” 2இஞ்சாவது தரைக்கும் காலுக்கும் இடைவெளியை
காணமுடியும் !! (1கொரி 8:2)
இயேசுவோ அதை எந்த ஒரு இடத்திலோ, சூழ்நிலையிலோ தன்னை குறித்து மேன்மையாக சொல்லிக் கொள்ளவில்லை.
அப்படி சொன்னவர்களையும் வேண்டாம் என்றார். (பிலி 2:6-8,
லூக் 4:41)
இருப்பது அனைத்துமே – சொந்தமானது
அல்ல...கடனாக பெற்றுக்கொண்டது தான் என்பதை நினைவில் வைத்து.. எப்போதும் தாழ்மையாய்
இருக்க மறந்துவிடக்கூடாது. 1கொரி 4:7
பாராட்டுக்கள் மாத்திரம் அல்ல, வெறுப்புகளும், அவமானங்களும் சில வேளைகளில் – “தான்
யார்” என்பதை *நிரூபிக்க தோன்றும்*. 1பேது
2:23
இயேசு கிறிஸ்துவோ சிலுவையின் மரண தருவாயில்
கூட தன்னை தாழ்த்தி நமக்கு கற்று கொடுத்து இருக்கிறார்...
நீ....டி....ய... பொறுமை அவசியம்.
சோதனைகளும், நெருக்கங்களும் நம்மை மேற்கொள்ள
அனுமதிக்காதீர்கள்.
*Eddy
Joel Silsbee*
Preacher
– The Churches of Christ
Teacher
– World Bible School
WhatsApp
# +91 8144 77 6229
Bible
Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக