திங்கள், 12 ஆகஸ்ட், 2019

#334 - இயேசு கிறிஸ்து இஸ்ரவேலுக்கு மாத்திரம் வந்தாரா?? மத்தேயு 15:24

#334 - *இயேசு கிறிஸ்து  இஸ்ரவேலுக்கு மாத்திரம் வந்தாரா??   மத்தேயு 15:24*

*பதில்* :பல நூற்றாண்டுகளாக யூதர்கள் எதிர்பார்த்திருந்த மேசியா அவர் (லூக்கா 2:25; 3:15)

அவர் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். ஒரு யூத நகரத்தில் யூத சட்டத்தின்படி வளர்க்கப்பட்டார் (லூக்கா 2:27; கலாத்தியர் 4: 5).

இயேசு யூத சீடர்களைத் தேர்ந்தெடுத்து, யூத ஜெப ஆலயங்களிலும் யூத ஆலயத்திலும் பேசினார், பெரும்பாலும் யூதப் பகுதிகளில் பயணம் செய்தார்.

அவருடைய நோக்கம், யூத மக்களுக்கு இருந்தது. இருப்பினும், இவை எதுவுமே இயேசுவின் ஊழியம் யூதர்களுக்கு மட்டுமே என்று அர்த்தமல்ல.

புறஜாதியார் பகுதியான தீரு மற்றும் சீதோன் பட்டணங்கள் வழியாக இயேசு பயணித்துக் கொண்டிருந்த போது, கானானிய பெண்ணிடம் “காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்லவென்றார். (மத்தேயு 15:24).

ஆயினும், அந்தப் பெண் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருக்க, கடைசியில் இயேசு அவளுடைய “பெரிய விசுவாசத்தை” அடிப்படையாகக் கொண்டு அவளுக்கு இரங்கினார் (வசனம் 23, 28).

அவருடைய ஆதி நோக்கம் யூதர்களிடமிருந்தாலும் புறஜாதியினரை அவர் புறம்பே தள்ளவில்லை

ஒரு ரோமர் படையின் நூற்றுக்கு அதிபதியின் ஊழியரை குணப்படுத்தினார் (லூக்கா 7: 1-10).

கெனசரேத்து வழியாக பயணம் செய்தார் (மாற்கு 5: 1).
சமாரிய நகரத்தில் ஊழியம் செய்தார் (யோவான் 4).

அனைவரையும் இரட்சிக்க இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்தார் (1யோவான் 2: 2).

நம்முடைய எல்லா பாவங்களுக்கும் உரியதை செலுத்தி நம்மை மீட்க இயேசு சிலுவையில் மரித்தார், அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார் (1 கொரிந்தியர் 15: 3-4).

நான் நல்ல மேய்ப்பர் என்று இயேசு சொன்னார்.

இந்த மந்தையில் இல்லாத வேறு அநேக ஆடுகள் உள்ளன. நான் அவர்களையும் கொண்டு வர வேண்டும். அவர்களும் என் சத்தத்தைக் கேட்பார்கள், அங்கே ஒரு மந்தையும் ஒரு மேய்ப்பனும் இருப்பார்கள் என்றார்.”(யோவான் 10:16).

அவர் உயிரோடெழுந்தது பரத்திற்கு ஏறும் போது கொடுத்த கட்டளையை கவனியுங்கள் :

அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதியாரையும்  *தேசத்தாரையும்* சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். (மத். 28:18-20)

புறஜாதியினருக்கும் இரட்சிப்பு கிடைக்கிறது என்பதை ஆரம்பகால சபை அங்கீகரிக்க சிறிது நேரம் பிடித்தது. எருசலேமில் துன்புறுத்தலிலிருந்து தப்பி ஓடிய யூத கிறிஸ்தவர்கள் பெனீக்கோ, சீப்புரு மற்றும் அந்தியோகியா ஆகிய புறஜாதி பகுதிகளுக்குச் சென்றார்கள், ஆனால் அவர்கள் “யூதர்களிடையே மட்டுமே இந்த வார்த்தையை எடுத்து சென்றார்கள்” (அப்போஸ்தலர் 11:19).

ஒரு புறஜாதியார் குடும்பத்திற்கு சுவிசேஷத்தைக் கொண்டு போக பேதுரு தயங்கினார், ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் (புறஜாதியாரும்) கொர்நெலியுவும் உண்டு என்பதை தேவன் தெளிவுபடுத்தினார் (அப்போஸ்தலர் 10).

ரோ. 3:29 தேவன் யூதருக்குமாத்திரமா தேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான்.  

ஏசா. 42:5-7

அப். 2:21 கர்த்தருடைய நாமத்தைத் *தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்* என்று தேவன் உரைத்திருக்கிறார்.


*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :

*Q&A Book ஆர்டர் செய்ய* :

வலைதளம் : 

YouTube “வேதம் அறிவோம்” :

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக