#990 - *வெளிப்படுத்தல் புத்தகத்தில் சொல்லப்படும் 1,44,000 (ஒரு
இலட்சத்து நாற்பத்துநாலாயிரம்) மற்றும் 12,000 பேரை குறித்து
விளக்கவும்*.
*பதில்*
நீங்கள் குறிப்பிடும் வசன பகுதியானது வெளி. 7:4, 14:1 மற்றும் 14:3ம்
வசனங்களில் வருகிறது.
இந்த தலைப்பைக் குறித்து #990ம் கேள்வியில் எழுதுவது
ஆச்சரியத்தை அளிக்கிறது.
வெளிப்படுத்தல் புத்தகத்தில் மிகவும் தவறாக புரிந்து
கொள்ளப்பட்ட அத்தியாயங்களில் இந்த பகுதியும் ஒன்று.
வெளிப்படுத்தல் புத்தகம் குறியீடுகளால் நிறைந்தவை. வேதத்தில்
உள்ள 66 புத்தகங்களில் - 65 புத்தகங்களை காட்டிலும் வெகுவாக குறியீடுகளால் நிறைந்த
புத்தகம் (Signified) இந்த வெளிப்படுத்தல் புத்தகம்.
இதில் சொல்லப்பட்டவைகளை நாம் அப்படியே அர்த்தங்கொள்ள முடியாது.
அந்த குறியீடுகளை வெளிப்படுத்தி தான் அர்த்தங்கொள்ள வேண்டும் – வெளி. 1:1
வார்த்தைகளையும் எண்களையும் அப்படியே எடுத்துக்கொள்ளாமல்
அதில் உள்ள இரகசியமாக அல்லது மறைத்து சொல்லப்பட்ட குறியீட்டை அகற்றி/உடைத்து
அர்த்தம் கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டாக,
7ம் அதிகாரத்தை மேலோட்டமாக ஒருவர் படித்து முடித்தால் - 1,44,000
பேர் தவிர யாரும் பரலோகம் போக முடியாது என்பர் !!
வெளிப்படுத்துதலைப் புரிந்துகொள்ள, பழைய ஏற்பாட்டின் நியாயபிரமாணத்திற்குட்பட்ட
இஸ்ரவேலுக்கும் புதிய ஏற்பாட்டில் உள்ள ஆன்மீக இஸ்ரவேலுக்கும் இடையிலான ஒற்றுமையை வேதத்தில்
காண வேண்டும்.
பழைய ஏற்பாட்டில் உள்ளவற்றில் பெரும்பாலானவை புதிய
ஏற்பாட்டில் முன்வைக்கப்பட்டுள்ள ஆன்மீக சத்தியங்களை முன்னறிவிக்கின்றன அல்லது
அடையாளப்படுத்துகின்றன என்று வேதம் கற்பிக்கிறது. எபி. 10:1.
உதாரணமாக,
பழைய ஏற்பாட்டில் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் இஸ்ரவேலின்
பூமிக்குரிய ராஜ்யத்தில் வாழ்ந்தார்கள். புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்களோ தேவனால்
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாகிய ஆன்மீக அர்த்தத்தில் இஸ்ரவேலர்கள் என்கிறது வேதம். ரோ. 2:28-29; கலா. 6:16;
யோ. 18:36.
இதனாலேயே யாக்கோபு தனது நிருபத்தை “சிதறடிக்கப்பட்ட
பன்னிரண்டு கோத்திரங்களுக்கு” எழுதினார். யாக். 1:1. பழைய ஏற்பாட்டில் கண்ட இஸ்ரவேலின்
பன்னிரண்டு கோத்திரத்தாரை அவர் அர்த்தப்படுத்தவில்லை. ஏனென்றால் இந்த கடிதம்
எழுதிய காலத்தில் பத்து கோத்திரம் ஏற்கனவே இல்லை. புதிய ஏற்பாட்டின் கீழ் “ஆன்மீக
இஸ்ரவேல்” என்ற சக கிறிஸ்தவர்களை உரையாற்றிக் கொண்டிருந்தார். அடுத்த வசனத்தில்
அவர்களை "சகோதரர்கள்" என்று குறிப்பிடுவதை கவனிக்கவும். யாக். 1:2.
வெளிப்படுத்துதலில் 1,44,000 பேர் யார் என்பதைப் புரிந்து கொள்வதற்கு
இது முக்கியமாகும்.
கடவுளிடமிருந்து நியாயத்தீர்ப்பு நாள் வரும்போது உலக
முடிவைக் காட்டிய ஒரு தரிசனத்தைப் பார்த்த உடனேயே (வெளி. 6:12-17), பூமிக்கும்
கடலுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் நான்கு தேவதூதர்களுக்கு அதிகாரம்
வழங்கப்பட்ட மற்றொரு பார்வையை யோவான் காண்கிறார் (வெளி. 7:1-2).
தேவனுடைய முத்திரையைக் கொண்ட இன்னொரு தேவதூதர் “தேவனுடைய
ஊழியக்காரர்களை அவர்களின் நெற்றியில் சீல் வைக்கும் வரை” உலகை அழிப்பதைத்
தடுக்கிறார் (வெளி. 7:2-3).
கடவுளின் இந்த முத்திரையைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 1,44,000 (வெளி. 7:4).
குறிப்பாக இஸ்ரவேல் புத்திரரின் பன்னிரண்டு
கோத்திரங்களில் இருந்து 12,000 (வெளி. 7:5-8).
இந்த எண்களை அப்படியே அர்த்தங்கொள்ளக்கூடாது என்பதற்கு
பல காரணங்கள் உள்ளன.
முதலாவதாக,
கிறிஸ்தவர்கள் கடவுளால் முத்திரையிடப்பட்டவர்கள் என்கிறது வேதம்
(எபே. 1:13; 2கொரி. 1:21-22; 2தீமோ.
2:19).
இரண்டாவதாக,
இஸ்ரவேல் புத்திரர்களின் பெயர்களை 5-8 வசனங்களில் பழைய ஏற்பாட்டுப்
பட்டியலில் சொல்லப்பட்ட 12 கோத்திரங்களின் பெயரோடு (எண். 1:4-15) ஒப்பிட்டுப்
பார்த்தால் பல வேறுபாடுகள் உள்ளன.
*எடுத்துக்காட்டாக:*
யாக்கோபின் மகன் தாண் எண்ணாகமத்தில்
பட்டியலிடப்பட்டுள்ளார்.
ஆனால் வெளிப்படுத்துதலில் இல்லை.
வெளி. 7:5-8ல் லேவி பட்டியலில் உள்ளார், ஆனால் பழைய
ஏற்பாட்டு 12 கோத்திரங்களில் லேவி பட்டியலிடப்படவில்லை, ஏனென்றால்
லேவி மற்றவர்களிடமிருந்து ஒதுக்கப்பட்ட ஒரு ஆசாரிய கோத்திரம்.
வெளி. 7ல் யோசேப்பு பட்டியலிடப்பட்டுள்ளார், ஆனால் யோசேப்பின்
மகன்களான எப்பிராயீம் மற்றும் மனாசே, அவருக்குப் பதிலாக
உண்மையான கோத்திரத்தாராக கொண்டிருந்தனர், ஏனெனில் யாக்கோபு
(இஸ்ரேல்) யோசேப்பின் மகன்களை தனக்குத்தானே ஏற்றுக்கொண்டார் (ஆதி. 48:1-5).
ரூபன் யாக்கோபின் மூத்த மகன், அதன்படி எண்ணாகமத்தில்
உள்ள 12 கோத்திரத்தில் முதலில் பட்டியலிடப்பட்டார். ஆயினும், யூதா வெளிப்படுத்துதலில் ரூபனுக்கு மேலே இருக்கிறார், ஏனென்றால் இயேசு வந்த கோத்திரம் யூதா (எபி. 7:14).
ஆகையால்,
வெளிப்படுத்துதலின் 12 கோத்திரப் பட்டியல் பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலின்
12 கோத்திரம் அல்ல. அவை குறியீடாக பார்க்கப்பட வேண்டும்.
புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்கள் ஆன்மீக இஸ்ரவேலராக
பார்க்கப்படுவதாலும், தேவனால் முத்திரையிடப்பட்டதாகக் கூறப்படுவதாலும் 1,44,000
என்ற எண்கள் கிறிஸ்தவர்களை அடையாளப்படுத்துகிறது.
*ஏன் 1,44,000?*
எண்களின் சேர்க்கைகளுக்கு முக்கியத்துவம் உண்டு.
12 என்பது - இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும்
குறிக்கிறது. மேலும் இது புதிய ஏற்பாட்டின்
பன்னிரண்டு அப்போஸ்தலர்களையும் குறிக்கிறது.
1000 என்பது பெரிய (முழுமையான) எண்ணிக்கையை அல்லது முழுமையான
ஜனக்கூட்டத்தை குறிக்கும் குறியீட்டு எண்.
10 முழுமையைக் குறிக்கிறது.
1000 என்பது 10 x
10 x 10 (தேவத்துவத்தில் முழுமை)
ஆக
1,44,000 என்பது 12 x 12
x 1,000
வேறு வார்த்தைகளில் கூறுவதானால்,
இது
பழைய உடன்படிக்கை (12 கோத்திரத்தார்) மற்றும்
புதிய உடன்படிக்கை (12 அப்போஸ்தலர்கள்) ஆகிய
இருவரிடமிருந்தும் தேவனிடமாய் இரட்சிக்கப்ட்ட மக்களின் முழுமையான ஜனத்தொகையை
குறிப்பதாகும்.
யோ 14:2ல் இயேசு கிறிஸ்து சொன்னது நினைவிருக்கும் என்று
நினைக்கிறேன். என் பிதாவின் வீட்டில் *அநேக வாசஸ்தலங்கள்* உண்டு; *அப்படியில்லாதிருந்தால்,
நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்* என்றார்
!!
ஆகவே பரலோகத்தில் 1,44,000 பேருக்கு தான் இடமுண்டு என்று
வாதாடுபவர்கள் :
இயேசுவின் வார்த்தைக்கு எதிரானவர்கள்..
அல்லது சத்தியத்தை அறியாதவர்கள் / புரியாதவர்கள்...
அல்லது சத்தியத்தை ஏற்றுக்கொள்ள மனதில்லாமல் தங்கள் கொள்கையில்
பிடிப்புள்ளவர்கள்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக