பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தமாக்கும் தேவன்
நம்மை இன்னும் அதிகமாய் நெறிப்படுத்துவாராக.
சாதுர்யம் என்று - பல வேலைகளில் ஏமாத்து
வேலையை சொல்லும் அளவிற்கு இரண்டிற்கும் வித்தியாசத்தை அறியாமல் அங்கீகரித்து
விடுவதுண்டு.
வயது மூப்பு உள்ளவர் சொன்னால் அது நிச்சயம்
சரியானதாக தான் இருக்கும் என்றும், இளமையானவர்களின் வாக்கு தவறானது என்றும் கணக்கு
போட்டு விடுகிறோம்.
வெளித்தோற்றம் நம்மை ஏமாற்றி விடும். மத்
23:27
நம்முடைய கற்பனைகளும், மனசாட்சியும் கூட
நம்மை தவறான பாதையில் இழுத்து விட்டுவிடும். 1தீமோ 4:1
தீர ஆலோசிக்காமல் / விசாரிக்காமலே - தன்
எண்ணம் எப்போதும் சரியானது தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டால் – உண்மை நிலைமையை அறியவிடாமல்
/ ஏற்கவிடாமல், கர்த்தர் நமக்கு ஏற்கனவே கொடுத்திருக்கும்
அல்லது கொடுக்கவிருக்கும் ஆசீர்வாதத்தை உதாசீனப்படுத்தி உதறி விட்டு வெளியேறும்படி
பிசாசு நம்மை தூரமாக்கி நாசப்படுத்துவான். நீதி 1:25, 30, 11:14
மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச்
செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச்
செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன். நீதி 12:15
ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள்
சித்தியாமற்போகும்; ஆலோசனைக்காரர் அநேகர்
இருந்தால் அவைகள் உறுதிப்படும். நீதி 15:22
இனி ஆலோசனையைக் கேளாத கிழவனும் மூடனுமாகிய
ராஜாவைப்பார்க்கிலும், ஏழையும் ஞானியுமாகிய இளைஞனே
வாசி. பிர 4:13
வேதம் மாத்திரமே நமக்கு உண்மையை காண்பிக்கும்.
எபி 4:12
யதார்த்தத்திற்கு (சத்தியத்திற்கு) செவிசாய்ப்போம்.
நன்மை வாசற்படியிலேயே இருக்கிறது. 2இரா 12:9, வெளி 3:20,
யாக் 5:9
*Eddy
Joel Silsbee*
Preacher – The Churches
of Christ
Teacher – World Bible
School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked) WhatsApp
Groupல் இணைய :
** அணைத்து கேள்வி பதில்களையும் காண
: https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக