#983 - *கிறிஸ்துவை அறிந்து கொள்ளும் முன்னரே நாங்கள் ஒருவரை ஒருவர் விரும்பினோம்*.
நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டேன். ஆனால் அவர் இன்னும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை.
திருமணம் செய்து கொள்ள விரும்புகிறோம். அவரை அதிகம் விரும்புகிறேன். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத
அவரை நான் திருமணம் செய்யலாமா?
*பதில்*
திருமணம்
ஆகி சுமார் 2 வருடம் கழிந்த பின் - வாழ்க்கை என்பது திருமணத்திற்கு முன்பு கண்ட
கணவு மற்றும் எதிர்பார்த்ததைவிட முற்றிலும் மாறுபட்டதாகவே இருக்கும்.
திருமணத்திற்கு
முன்பு உள்ள ஈர்ப்புகளும் ஆதரவும் அரவணைப்பும் திருமணத்திற்கு பின்பு வேறுபட்டதாகவே
இருக்கும்.
இப்பொழுது
4 மணி நேரம் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பவர்கள் – திருமணத்திற்கு பின்பு 10 நிமிடம்
தொடர்ந்து பேசுவதே அரிது.
இப்பொழுது
வெளியே காட்டப்படும் அன்பு – திருமணத்திற்கு பின்பு பந்தத்தில் மாத்திரமே வெளிப்படும்.
எப்போதும்
சேர்ந்தே இருக்க வேண்டும், அதிக நேரம் செலவிட வேண்டும் என்ற தற்போதைய விருப்பம் – திருமணத்திற்கு
பின் பல அலுவல்களும் கடமைகளும் கூடுவதால் சேர்ந்து செலவிடும் நேரம் வெகு குறைவானதாகவே
இருக்கும்.
இன்னும்
இப்படி அதிக குறிப்புகளை சொல்லமுடியும்.
திருமணத்தைக்
குறித்த தற்போதைய எதிர்பார்ப்பும் அன்பும் நிரந்தரம் இல்லை.
கிறிஸ்துவை
ஏற்றுக்கொள்ளாத ஒருவர் என்று அறிந்தும் திருமணம் செய்து கொள்ள முன்னேறும் போது –
முதல் படியான திருமண நிகழ்வு எவ்வாறு அமையப்போகிறது? ஜெபத்துடனா அல்லது யாகத்துடனா?
அதை
நான் விட்டுக்கொடுக்கிறேன் என்பவர் – திருமணத்திற்கு பின் உனக்காக நான் அதை
விட்டுக்கொடுத்தேன் இதை விட்டுக்கொடுத்தேன் ஆகவே எனக்காக ஒரே ஒரு முறை என்
விருப்பப்படி இந்த நிகழ்வில் நீ பங்கெடுக்க வேண்டும் என்று அவர் தன் வீட்டில்
நடக்கும் ஒரு முக்கிய விழாவில் அழைத்தால் – என்ன செய்வீர்கள்?
நான்
தாய் மாமன் என்ற முறையில் என் பங்கு உள்ளது. நீ வரவிருப்பம் இருந்தால் வரலாம்
என்று கணவன் சொன்னாலும் – அவர் தனியே தன் குடும்பத்திற்கு கடந்து அந்த விழாவில் சென்று
திரும்பி வந்தால் – உங்கள் இருவருக்குமான பின்நாட்களின் உறவு எவ்வாறு இருக்கும்?
உங்கள்
முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அனுசரித்துவந்த வீணான நடத்தையினின்று
அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற
ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே
மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற
இரத்தத்தால் உங்கள் சரீரம் வாங்கப்பட்டுள்ளது. 1பேதுரு 1:18-19, 1கொரி. 6:20
உங்களுக்கு
முன்பாக செய்யப்படும் தேவனுக்கு பிரியமில்லாத முறைமைகளில் யாதொன்றை நீங்கள் செய்து, அவைகளால் உங்களைத்
தீட்டுப்படுத்திக்கொள்ளாதபடிக்கு என் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றாரே.. லேவி. 18:30
உங்கள்
மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி
முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக
ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு
அடிமையாக ஒப்புக்கொடுங்கள். பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாயிருந்த காலத்தில்
நீதிக்கு நீங்கினவர்களாயிருந்தீர்கள். இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற
காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே. இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று
விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ
நித்தியஜீவன். ரோ. 6:19-22
நீங்கள்
அவர்கள் முறைமைகளை கற்றுக்கொள்ளும்படியும் பின்பற்றும்படியும் வலியுறுத்தப்படுவீர்கள்.
உபா. 20:18, உபா. 7:4
தேவனிடத்தில்
நேரடியாக ஆசீர்வாதத்தை பெற்று உலகத்தில் ஞானி என்று அழைக்கப்பட்ட ஒரு தேசத்து
இராஜாவாக இருந்த போதும் கூட அவரால் மறுக்கமுடியாமல் விக்கிரக ஆராதனையில்
விழுந்தார். 1இரா. 11:1-4
திருமணத்தில்
இருவரும் ஓரு சரீரமாக இணைகின்றனர். ஆதி. 2:24
கிறிஸ்துவின்
விலையேறப்பெற்ற சரீரத்தில் இணைக்கப்பட்ட ஒரு அங்கம் தன் திருமணத்தின் நிமித்தமாக கிறிஸ்துவின்
சரீரத்தில் இணைக்கப்பட்ட அந்த பாக்கியத்திற்கு பங்கம் வராமால் தீர்மானம் எடுக்க வேண்டும்.
எபே. 5:30
திருமணம்
ஆனபின் அவரை இரட்சித்து விடலாம் என்று நினைத்தால் – சாலமோனும் சிம்சோனும் நமக்கு பெரிய
பாடத்தை வைத்து சென்றிருக்கிறார்கள்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக