வெள்ளி, 5 ஜூன், 2020

#982 - எதற்கு ஆண்டவருக்கு பட்டயம் தேவைப்பட்டது?

#982 - *எதற்கு ஆண்டவருக்கு பட்டயம் தேவைப்பட்டது?*
 
லூக்கா 22:36ல் பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன் என்றும்

லூக்கா 22:38ல் அதற்கு அவர்கள் ஆண்டவரே இதோ இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள் அவர் போதும் என்றார்

எதற்கு ஆண்டவருக்கு பட்டயம் தேவைப்பட்டது?

*பதில்*
பிரதான ஆசாரியரின் வேலைக்காரனின் காதை பட்டயத்தால் வெட்டினார் பேதுரு. யோ. 18:10

இந்த சம்பவத்தில் நாம் கண்டு கொண்டதைவிட உணரவேண்டிய ஒன்று உள்ளது.

ஒரு பட்டயத்தை எடுத்துக்கொள்ளுமாறு சொன்னது இயேசு கிறிஸ்துவே. லூக்கா 22:36

ஏசா. 53:12ல் சொல்லப்பட்டவை இதில் அடங்கினாலும், கிறிஸ்துவானவர் ஒரு முக்கியமான பொறுமையின் பாடத்தை இந்த சூழு்நிலையில் தன் சீஷருக்கு கற்றுக்கொடுக்கிறார்.

ஒருவரது சூழ்நிலை மோசமாகும் போதும் வாழ்க்கையானது கொடிய கஷ்டத்திலும் வேதனையிலும் நிந்தையிலும் நெருக்கப்படும் போதும் – வாய்ப்புகள் இருந்தாலும் தேவ கட்டளையை மீறக்கூடாது என்கிற பாடம் இதில் உள்ளது.

ஆகவே ஒரு பட்டயம் அந்த சூழ்நிலைக்கு தேவைப்பட்டது. ஆனால் அதை பயன்படுத்தியதற்காக இயேசு பேதுருவை திட்டினார்.

இது பேதுருவுக்கு வைத்த ஒரு பரிட்சை என்றே நான் சிந்திக்கிறேன்.

ஆரோனின் கோலை கையில் பிடித்துக் கொண்டு கன்மலையைப் பார்த்து பேசும்படி மோசேயிடம் தேவன் கட்டளையிட்டார். கையில் கோல் இருந்தால் அடிக்க வேண்டும் என்பதல்ல பொருள் !! எண். 20:8

தேவ வார்த்தையை கவனிக்காமல் மோசேயின் அந்த நேரத்தின் சூழ்நிலையின் மனநிலமை அவரை மேற்கொண்டதால் தேவ வார்த்தையை மீறினார். தேவ வார்த்தைக்கு சொல்லப்பட்டபடியே அப்படியே செவி சாய்க்காமல் தனக்கு இருந்த பெலத்தை உபயோகப்படுத்திவிட்டார் –  !! எண். 20:11

பேதுரு - எப்போதும் உற்சாகமாக வேகமாக செயல்படும் மனநிலைமையுள்ளவர். நடுக்கடலாக இருந்தாலும் படகிலிருந்து குதித்து நீந்தி கரைக்கு ஓடிவருவார், உயிருக்கு பயந்து சாபமும் இடுவார், இரவு முழுதும் ஆனாலும் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் முயற்சி செய்வார்..

இந்த உலகத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு பேதுருவிற்க்குக் கீழ்ப்படிதல் பற்றி இன்னொரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தார் போலும் இயேசு கிறிஸ்து.

இயேசுவைக் கைது செய்யும் போது சீஷர்கள் கேட்கவும் செய்கின்றனர் !! லூக்கா 22:49

பதிலுக்கு காத்திருக்கவில்லை – பட்டயத்தை எடுத்து வெட்டிவிட்டார் பேதுரு !!

பல நேரங்களில் இந்த சூழ்நிலை நமக்கு அநேக பாடங்களை கற்பிக்கிறது.

நான் மாத்திரம் பழைய ஆளா இருந்தா – இப்ப உன்ன என்ன பண்ணிருப்பேன் தெரியுமா என்று கேட்பார்கள்... அப்படி கேட்பதே – பழைய ஆள் இன்னமும் உள்ளே இருப்பதைக் காண்பிக்கறது !!

நமக்கு எதிராக எந்த சூழ்நிலை ஏற்பட்டாலும் – வசதியையும் வாய்ப்பையும் தேவ கட்டளைக்கு கீழ்படிவதில் பயன்படுத்தக்கூடாது !!

அது வெறும் விளக்கு பத்தவைப்பதற்கான அக்கினியாக இருந்தாலும் சரி மலையைப் பார்த்து பேச வேண்டிய சாதாரண கட்டளையாக இருந்தாலும் சரி – சொல்லப்பட்ட அதே விதத்தை கடைப்பிடிக்க வேண்டியது தேவ வார்த்தைக்கு கீழ்படிதல் !!

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக