வெள்ளி, 5 ஜூன், 2020

#981 - கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு முன் திருமணம் நடந்தது. மனைவி மாத்திரமே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். இந்த சூழ்நிலையில் வாழ்க்கையானது எப்படி? விளக்கவும்.

#981 - *கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு முன் திருமணம் நடந்தது.
மனைவி மாத்திரமே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். இந்த சூழ்நிலையில் வாழ்க்கையானது எப்படி?* விளக்கவும்.

*பதில்*
இதே போன்றதொரு கேள்வியை அப்.பவுலிடம் கொரிந்து சபையில் இருந்து ஒருவர் கேட்டிருக்க (1கொரி. 7:1) – அதற்கு பவுல் எழுதின பதிலை முதல் நிருபம் 7ம் அதிகாரத்தில் நாம் காணமுடிகிறது.

அந்த வசனங்களை அப்படியே பதிவிடுகிறேன் :

விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப்பிரிந்து போகக்கூடாது.

பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது.

மற்றவர்களைக்குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன்.

அப்படியே ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள்.

என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன. 1கொரி 7:10-14

மனைவியானவளே, நீ உன் புருஷனை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? புருஷனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? 1கொரி. 7:16

தேவன் அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கக்கடவன். 1கொரி. 7:17

அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன். 1கொரி. 7:20, 24

உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.  1தீமோ. 4:16

சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால், தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன். யாக். 5:19-20

திருவசனத்திற்குக் கீழ்ப்படியாத கணவனிடத்தில் – மனைவி வசனத்தை எடுத்து சொல்ல முயற்சி செய்யக்கூடாது. மாறாக – அவரிடம் அதிக அன்பு செலுத்தி, அவருக்கு உத்தமமாகவும் பிரியமுள்ள மனைவியாகவும் வாழுந்து கீழ்ப்படிந்திருக்க வேண்டும். அப்பொழுது பயபக்தியோடுகூடிய மனைவியின் கற்புள்ள நடக்கையை பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள். 1பேதுரு 3:1-2

இரட்சிக்கப்பட்ட கணவனுக்கு கிறிஸ்துவை ஏற்காத மனைவி இருந்தால் :  நாம் அக்கிரமக்காரராகவும், பெலனற்றவர்களாகவும், பாவிகளாகவும், தேவனுடைய சத்துருக்களாகவும் கறைதிரையோடும், அழுக்கும் பரிசுத்தமின்மையாயும் இருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்து நம்மை மீட்டது போல – மனைவியானவள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் படி பொறுமையாக இருந்து கிறிஸ்து நம்மில் அன்பு கூர்ந்து தன் உயிரையே கொடுத்தது போல கணவனும் இரட்சிக்கப்படாத மனைவியின் மீது அன்பு வைக்க வேண்டியது. ரோ. 5:6, 8, 10, எபே. 5:25-27

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக