#980 - *பிள்ளை பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள் என்றால் - பிள்ளை பெறாதாவர்களுக்கு இரட்சிப்பு இல்லையா?* அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள். 1 தீமோத்தேயு 2:15 - விளக்கவும்
*பதில்*
ஒரு பெண் தாயாகி குழந்தைகளைப் பெற்றெடுத்தால் பரலோகம் செல்வதற்கு தகுதியாகிவிடுகிறாள் என்று அர்த்தமாகிறதா?
நிச்சயமாக அப்படியில்லை.
வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ள இரட்சிப்பின் படிகளை ஒப்பிட்டு பார்க்கும் போது பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்பட்டாள் என்று சொல்லப்படும் இந்த வாக்கியத்திற்கு வேறு அர்த்தம் உள்ளது என்பதை அறியமுடிகிறது.
1 கொரி. 7:8, 25-40 வசனங்களை கவனிக்கவும். தனிமையாக இருக்கும்போது உள்ள ஆன்மீக நற்பண்புகளைப் பற்றி பேசுகிறது.
அவ்வகையில் ஒரு பெண் தனிமையாக இருக்கும் பட்சத்தில், வேதப்பூர்வமாக சரியான முறையில் அவளுக்கு குழந்தைகள் இருக்க வாய்ப்பில்லை.
திருமணமான ஒரு பெண்ணுக்கு சொந்தமாக குழந்தைகளைப் பெற முடியாவிட்டால் என்ன நடக்கும்? ஒரு சாத்தியமற்ற கட்டளையை தேவன் அளிக்கிறவரா? நிச்சயமாக கிடையாது !
இரண்டு வகையிலே இந்த வாக்கியம் (வசனம்) பொருள்படுகிறது.
*முதலாவதாக* :
"குழந்தை பேற்றினால் இரட்சிக்கப்படுகிறாள்” என்ற வாக்கியம் ஒரு பேச்சின் உருவகம்.
"குழந்தை பெற்றெடுப்பது" மனைவியானவள் தாய்மையின் முழுமையைப் பூர்த்திசெய்யும் பாத்திரத்திற்கான ஒரு பகுதி.
வம்சம் விருத்தியடையவும், பெண்ணை தேவன் உருவாக்கியதன் நோக்கத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்தலும் இதில் வெளிப்படுகிறது. ஆதி 1:28. பிசாசின் சோதனைக்கு உட்படாமல் தன்னைக் காத்துக்கொள்வது அவசியமாக இருக்கிறது. 1 கொரி. 7:2
*இரண்டாவதாக*:
நம்பத்தகுந்த பதில் என்னவென்றால், இந்த வாக்கியமானது - மனிதகுலத்தை காப்பாற்ற பிறந்த குழந்தையான இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது (வெளி 12:5) என்று சொல்லமுடியும்.
ஆச்சரியமாக இருக்கலாம்... இந்த வாக்கியத்தின் மேலே உள்ள 2 வசனங்களை கவனிக்கவும்:
1தீமோ. 2:13-15 என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள். அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்.
அதாவது - ஸ்திரீயானவள் என்பது ஏவாளை குறிக்கிறது என்று அர்த்தங்கொள்ளும் பட்சத்தில் – ஏவாள் வஞ்சிக்கப்பட்டதன் பாவமானது – அவள் பெற்ற பிள்ளையான இயேசுவின் விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால் இரட்சிக்கப்படுவாள் !! என்கிற அர்த்தம் உள்ளது. ஆதி 3:15, ரோமர் 3: 24-26.
எபிரேயர் 9:15 - ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக