திங்கள், 29 ஜூன், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி 29 June 2020

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

எந்த குழந்தையும் சொந்த முயற்சியில் அல்ல தேவனே இந்த உலகத்தில் அனுப்பினார் என்பதை மறந்து போக கூடாது. (சங் 127:3)

அவரிடம் இருந்து பெற்று கொண்ட பிள்ளையை அவர் பாதையிலே நடத்தி அவரிடமே திரும்ப செல்லும்படியான பரிசுத்தமும் வாழ்வையும் கொடுக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு (உபா6:7)

கண்டிப்பான (Strict) பெற்றோராக மாத்திரம் இருந்தால் ஒரு தொழிற்சாலையை போலவும், ஒழுக்கத்தை மாத்திரம் கற்று கொடுத்தால் சிறைச்சாலையாகவும் அந்த வீடு இருக்கும் !!

நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருப்பவரை நேரமாகிவிட்டதென்று கோபத்தோடு காலையில் எழுப்பிவிடுவது – அவர்களின் இருதயத்தை பாதிக்கிறது. நீதி 15:1, 30:33

நீண்ட நேரம் இரவில் விழித்திருப்பது – சரீரத்திற்கு கேடு. யோ 11:12

சுகமான நித்திரையை தேவனே தருகிறார். சங் 127:2, சங் 4:8

போதிய இரவு உறக்கம் இல்லாத பிள்ளைகள் தங்கள் பள்ளி மதிப்பெண்களில் கோட்டை விடுவார்கள் !! நாள்பட்ட இரவு கண்விழிப்பு அனைத்து வியாதியை வரவேற்கும். நேரத்தோடு படுக்கைக்கு செல்வதும் நேரத்தோடு காலையில் எழுவதும் ஆரோக்யம்.

சிட்சிக்க வேண்டியதும் அன்பு செலுத்துவதும் இரண்டுமே அவசியம். முதலாவதை மாத்திரம் பிடித்து கொண்டால் இரண்டாவதிற்கு இடமிருக்காது.

பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு கொண்டுவருவது உபகாரம் அல்ல – அது கடமை.

கொலோ 3:21, எபே 6:4 பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்.

பிள்ளைகள் அல்ல - தகப்பனே பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து கொடுக்க வேண்டும்! 2 கொரி 12:14. அப்படிப்பட்டவர்களை வேதம் நல்லவர்கள் என்கிறது. நீதி 13:22, 19:14.

Eddy Joel Silsbee
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR

** அணைத்து கேள்வி பதில்களையும் காண :  https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக