பிதாவாகிய தேவன் தாமே
நமக்கு சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தருவாராக.
நேற்று காலை மனைவியின்
பங்கை பார்த்தோம்.
இன்று கணவன் பங்கு.
ஆண் என்கிற எண்ணத்தில்
மேற்போக்கான சிந்தனையோடு சில கணவர்கள் இருந்து விடுகிறார்கள்.
உயர்வாகவும் தாழ்வாகவும்
இல்லாதபடிக்கு கணவனுக்கு *ஏற்ற துணையை* நடுப்பகுதியான விலாவிலிருந்து எலும்பை எடுத்து
மனுஷியை உண்டு பண்ணினார்.
தாயும் தகப்பனும் இல்லாதிருந்த
காலத்திலேயே – தேவன் சொன்ன கட்டளை – “பெற்றோரை” விட்டு *மனைவியோடு ஒன்றாய்* இருக்க
வேண்டும் என்று. இந்த வலியுறுத்தலை நான்கு முறை வேதாகமத்தில் பார்க்க முடியும். (மத்
19:4-6, எபே 5:31, மாற்கு 10:7, ஆதி 2:24)
பெற்றோரை வெளியே விரட்டிவிட
சொல்லவில்லை – திருமணம் ஆகும் வரை இருந்த முன்னுரிமை இனிமேல் மனைவிக்கு என்ற அர்த்தம்
அது.
கணவனும் மனைவியும் ஒரே
சரீரம் என்பதால் – பெற்றோராக இருந்தாலும் – மனைவியை (அல்லது கணவனை) தவிர மற்ற அனைவருமே
இரண்டாம் உரிமையே !!!
மனைவியானவள் ஒரு அடிமையோ,
வேலைக்காரியோ, பொம்மையோ, வீட்டு வேலை செய்யும் ஓர் எந்திரமோ கிடையாது.
ஆண்களை போல அல்லது ஆண்களை
காட்டிலும் மன வலிமையும் ஆற்றலும் உள்ளவர்கள். நீதி 31:17
கணவனுக்கு மரியாதை மனைவியினிடத்தினின்று
பெறவேண்டும் என்றால் கணவன் அதை முதலில் கொடுக்க வேண்டும். அன்பை கொடுத்து மரியாதையை
சம்பாதிக்க வேண்டும். (எபே 5:33)
வெறுப்போடும் உதாசீனத்தோடும்
மனைவியை “வல் வல்” என்று எப்போதும் எரிந்து விழுந்தால் வீட்டில் சண்டை தான் நிலைத்து
நிற்கும்.
திருமணத்திற்கு பின்
– மனைவியின் அழகையும் நிறத்தையும் சரீரத்தையும் மற்றவரோடு ஒப்பிட்டு பேசுவது வேசித்தனம்.
1கொரி 7:2, 6:18
மனைவிக்கு தலையாக கணவன்
இருக்கிறான். ஆகவே தேவையான அனைத்து ஆலோசனைகளையும் கொடுக்க கணவன் தவறக்கூடாது. (எபே
5:23)
நாம் பாவிகளாகவும் (ரோ
5:8) சத்துருக்களாகவும் (ரோ 5:10) பெலனற்றவர்களாகவும் (ரோ 5:6) விரோதிகளாகவும் அக்கிரமக்காரராகவும்
((ரோ 5:6) இருந்த போதும் நம்மை நேசித்து தன்னையே ஒப்புக்கொடுத்தார் நம் கணவனாகிய இயேசு
கிறிஸ்து. (எபே 5:26-27, வெளி 21:2)
வீட்டில் – ஒரு கணவனாக
இருக்க வேண்டுமேயன்றி
பாஸ்டராகவோ, முதலாளியாகவோ,
பள்ளிகூட வாத்தியாராகவோ, மேனேஜராகவோ - கம்பெனியில் வேலை செய்வது போல வீட்டில் இருத்தல்
கூடாது.
வெறுக்கப்பட்டாலும் மனைவிக்கு
செலுத்த வேண்டிய அன்பை நிச்சயம் கணவன் செலுத்த வேண்டும். எபே 5:28
கணவனுக்காக *படைக்கப்பட்டவள்*
மனைவி. (1 கொரி 11:9) அவளுக்கு எல்லா பெலமும்
கணவர் தான்.
அவர்களும் பரலோகத்தில்
வருகிறவர்களாகையால் சரி சமமான மதிப்பை எந்த கணவனும் கொடுக்க வேண்டும். 1பேது 3:7
கணவனும் மனைவியும் (இருவரும்)
சம்மதித்திாலன்றி ஒருவரை விட்டு ஒருவர் (தாம்பத்தியத்தில்) பிரிந்திருக்ககூடாது. 1கொரி
7:5. மீறினால் ஜெபவாழ்க்கையே தடைபடும் எச்சரிக்கை !!
எந்த இடத்திலும் மனைவிக்கு
உரிய மரியாதையை செலுத்த வேண்டும். 1பேது 3:7, 1கொரி 12:22
கூடவே இருக்கும் மனைவியிடமும்
கணவனிடமும் அன்பு செலுத்த முடியாமல் வஞ்சம் வைத்துக்கொண்டு – வருபவரிடமும் காண்பவரிடமும்
உருகி உருகி சிஸ்டர் பிரதர் என்று பேசுவதும், ஜெபிப்பதும் முழுமையான வேஷம் !!
கவுரவத்தை பாராமல் கணவனும்
மனைவியும் ஒருவரை ஒருவர் வேறுபாடுகளை களைந்து, புரிந்துகொண்டு, விட்டுக்கொடுத்து, தேவன்
கொடுத்திருக்கும், அனுமதித்திருக்கும் இந்த
மிக சொற்ப கொஞ்ச காலத்தில் சந்தோஷமாக வாழ வேண்டும்.
இருவர் மனமும் பிரிந்திருக்க
இடம் கொடுக்க கூடாது.
சூரியன் அஸ்தமிக்கும்
முன்பே தணியாத எந்த ஜெபமும் வீட்டுக்குறையை தாண்டாது !!
பிரிவுகளையும் கசப்பையும்
களைந்து அன்போடு அனைத்து குடும்பமும் கட்டபடட்டும்...
தேவன் தாமே பொறுமையையும்
சமாதானத்தையும் அருளுவாராக.
*Eddy Joel Silsbee*
Preacher – The
Churches of Christ
Teacher – World
Bible School
WhatsApp # +968
93215440
Bible Q&A
(Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR
** அணைத்து கேள்வி பதில்களையும் காண :
https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக