வியாழன், 18 ஜூன், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி - 18 June 2020

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

அனுதினமும் கூடினார்கள் என்று அப் 2:46 இருக்கும் போது வாரத்தின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை தேவனை தொழுது கொள்ள ஏன் கூடி வரவேண்டும்?

அந்த அப் 2:46 வசனத்தில் இரண்டு இடங்கள் குறிப்பதை கவனிக்க வேண்டும்.

ஒன்று - தேவாலயம், இரண்டு – வீடுகள்தோறும் !!

இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவ யூதர்கள் தங்கள் வழக்கப்படி அநுதின தியான வேளையில் எருசலேம் தேவாலயத்தில் போய் கூடினார்கள்.  இருந்தபோதும் தங்கள் தங்கள் வீடுகளிலும் ஒன்று சேர்ந்து அநுதின உணவை தங்களுக்குள் பகிர்ந்தார்கள். உபா 12:7, 12, 16:11.

அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் *அப்பம்பிட்டு ஆராதித்தார்கள் என்று வசனம் சொல்லவில்லை* !!

மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் *போஜனம்பண்ணி*, என்றே வேதத்தில் உள்ளது.

தேவனைத் தொழுது கொள்ளும்படி பிரத்யேகமாக ஓய்வு நாளான சனிக்கிழமையில் அல்ல மறு நாளான ஞாயிறு அன்று கூடினார்கள்.

ஏன் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவர்களுக்கு முக்கியமாயிற்று?

1-இயேசு கிறிஸ்து  உயிர்தெழுந்த நாள் மாற்கு 16:9

2-உயிர்தெழுந்த பின் பரமேறும் முன்னர் 6 முறை தரிசனமான நாட்கள். மாற்கு16:9; மத்தேயு 28:5-9; லூக் 24:34; 24:13-15; 33,36, யோ 20:19; 26

3-இயேசுவின் மரணத்துக்கும் பரமேறும் நாளுக்கும் இடைப்பட்ட காலங்களில் சீஷர்கள் கூடினது. யோ 20:19, 26, அப் 2:1

4- சபை ஸ்தாபிக்கப்பட்டது அப் 2:1

5- பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலருக்கு பிரத்யேகமாக கொடுக்கப்பட்ட நாள் அப் 20:1-4

6-அப்பம் பிட்கும்படி கூடின நாள் அப் 20:7

7- காணிக்கை சேர்க்கும்படி கூடின நாள். 1கொரி16:1-3

** 7ம் நாள் ஓய்வு நாள் என்று இஸ்ரவேலர்களுக்கு மோசேயின் நியாயபிரமாணம் மூலம் கட்டளையாய் கொடுக்கப்பட்டதை கிறிஸ்து சிலுவையில் முடித்து விட்டதால் – புதிய பிரமாணம் துவங்கியது. ரோ 10:4, 1கொரி 11:25

** மற்ற நாட்களில் ஐக்கியத்தை வெளிப்படுத்தும்படி தேவனை துதித்து தியானித்தாலும் - கிறிஸ்தவர்கள், அப்போஸ்தலருடைய உபதேசத்தின் படி வாரத்தின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவனை ஆராதிக்க கூடி வர வேண்டும்.

Eddy Joel Silsbee
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :  https://chat.whatsapp.com/LDFydae8QOL2ItKGgYSYXq

வேத வகுப்பு மற்றும் தேவ செய்திகள் கேட்க:
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக