வெள்ளி, 29 மே, 2020

#975 - எத்திரோவைக் குறித்து விளக்கவும்

#975 - *எத்திரோவைக் குறித்து விளக்கவும்*

*பதில்*
எத்திரோ என்ற எபிரேய வார்த்தைக்கு – ஆங்கிலத்தில் His Excellency என்று சொல்லப்படும் பெறு மதிப்பிற்குரியவர் என்ற பட்டம். யாத். 3:1

அவர் உண்மையான பெயர் – ரெகுவேல். யாத். 2:18, யாத். 3:1, ஆதி. 36:4, 10, எண். 10:29.

மீதியான் ஊரின் ஆசாரியர்.

இவரின் மகளை மோசே மணந்தார். யாத். 2:21

இஸ்ரவேலர் சீனாயில் முகாமிட்டிருந்தபோது, அமலேக்கை வென்றவுடன், மோசேயைச் சந்திக்கும்படி எத்திரோ தன் மகளும் மோசேயின் மனைவியுமான சிப்போராளையும் அவர்களுடைய இரண்டு மகன்களையும் அழைத்து வந்தார். யாத். 18:6

மறுநாளிலே, மோசே இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரித்துக் கொண்டிருந்ததையும் காலை முதல் மாலை வரை நேரம் செலவிடப்பட்டதையும் பார்த்த மாமன் – நிர்வாகத்தின் மூல ஆலோசனையை தன் மருமகனுக்கு கொடுக்கிறார். யாத். 18:13-24

இந்த ஆலோசனையை இன்றும் Jethro’s Advice என்று பெரிய அளவில் நிர்வாகத்தின் சிறந்த ஆலோசனையாக பாடமாக எடுக்கப்படுகிறது.

ஒரு நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும், எப்படி நிர்வகிக்க வேண்டும் என்ற ஒரு அடிப்படையான நேர்த்தியான ஆலோசனையாக இது இன்றளவும் கருதப்படுகிறது.

வசனங்களைப் படிக்கவும்:

மறுநாள் மோசே ஜனங்களை நியாயம் விசாரிக்க உட்கார்ந்தான்; ஜனங்கள் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் மோசேக்கு முன்பாக நின்றார்கள். ஜனங்களுக்கு அவன் செய்த யாவையும் மோசேயின் மாமன் கண்டு: நீர் ஜனங்களுக்குச் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீர் ஒன்றியாய் உட்கார்ந்திருக்கவும், ஜனங்கள் எல்லாரும் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் உமக்கு முன்பாக நிற்கவும் வேண்டியது என்ன என்றான். அப்பொழுது மோசே தன் மாமனை நோக்கி: தேவனிடத்தில் விசாரிக்கும்படி ஜனங்கள் என்னிடத்தில் வருகிறார்கள். அவர்களுக்கு யாதொரு காரியம் உண்டானால், என்னிடத்தில் வருகிறார்கள்; நான் அவர்களுக்குள்ள வழக்கைத் தீர்த்து, தேவகட்டளைகளையும் அவருடைய பிரமாணங்களையும் தெரிவிக்கிறேன் என்றான். அதற்கு மோசேயின் மாமன்: நீர் செய்கிற காரியம் நல்லதல்ல; நீரும் உம்மோடே இருக்கிற ஜனங்களும் தொய்ந்துபோவீர்கள்; இது உமக்கு மிகவும் பாரமான காரியம்; நீர் ஒருவராய் அதைச் செய்ய உம்மாலே கூடாது. இப்பொழுது என் சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன்; தேவனும் உம்மோடுகூட இருப்பார், நீர் தேவசந்நிதியிலே ஜனங்களுக்காக இரும்; விசேஷித்தவைகளைத் தேவனிடத்தில் கொண்டுபோய்; கட்டளைகளையும் பிரமாணங்களையும் அவர்களுக்கு வெளிப்படுத்தி; அவர்கள் நடக்கவேண்டிய வழியையும், அவர்கள் செய்யவேண்டிய காரியத்தையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தும். ஜனங்கள் எல்லாருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஏற்படுத்தும். அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம் விசாரித்து, பெரிய காரியங்கள் யாவையும் உம்மிடத்தில் கொண்டுவரட்டும், சிறிய காரியங்கள் யாவையும் தாங்களே தீர்க்கட்டும்; இப்படி அவர்கள் உம்மோடேகூட இந்தப் பாரத்தைச் சுமந்தால், உமக்கு இலகுவாயிருக்கும். இந்தப்பிரகாரம் நீர் செய்வதும், இப்படித் தேவன் உமக்குக் கட்டளையிடுவதும் உண்டானால், உம்மாலே தாங்கக்கூடும்; இந்த ஜனங்கள் எல்லாரும் தாங்கள் போகும் இடத்துக்குச் சுகமாய்ப் போய்ச் சேரலாம் என்றான். மோசே தன் மாமன் சொல்கேட்டு, அவன் சொன்னபடியெல்லாம் செய்தான். யாத். 18:13-24

தகுதியான சகோதரர்கள் இருந்தும் - தன் பதவியையும் கனத்தையும் மரியாதையையும் மதிப்பையும் காப்பாற்றிக்கொள்ளும்படியாக அனைத்து வேலையையும், தொழுகையின் ஆரம்ப ஜெபத்திலிருந்து கடைசி ஆமேன் வரைக்கும் தானே செய்து முடித்துக் கொண்டிருக்கும் ஊழியர்களுக்கும் இது பெரிய பாடம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக