#974 - *பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே வாழ்த்துகிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துகிறோம். இதில் எப்படி வாழ்த்து/வணக்கம் சொல்வது சரியானது*
*பதில்*
இது ஒரு சிக்கலான கேள்வி என்று சொல்வதைவிட மிகக் கவனமாக
கையாளவேண்டிய அல்லது காதுள்ளவன் கேட்கக்கூடிய ஒரு கேள்வியாக உள்ளது. பதிலளிக்க
காலதாமதத்திற்கு மன்னிக்கவும்.
திரித்துவம் என்பது – ஒருவர் மூவராக பாவிப்பதைக் குறித்து
சொல்லப்படும் வார்த்தை.
தேவத்துவம் என்பது – மூவர் ஒன்றாய் இருப்பதை
வெளிப்படுத்தும் வார்த்தை.
தேவத்துவம் / திரித்துவத்தைக் குறித்து விஸ்தாரமாக நாம் #431ல்
பார்த்திருக்கிறோம். அதை படிக்க விரும்புகிறவர்கள் இந்த பதிவின் கடைசியில் #431ற்கான லிங்க்கை பயன்படுத்தவும்.
நாமம் என்பது வடமொழிச் சொல்.
மேலும் நாமம் என்பது வேதாகமத்தில் பொதுவாக பெயரைக்
குறிப்பிடவில்லை.
நாமம் என்று உபயோகப்படுத்தப்பட்ட இடங்களில்;
ஒனாமா என்ற கிரேக்க வார்த்தை 229 இடங்களில் புதிய
ஏற்பாட்டிலும்;
ஷேம் என்ற எபிரேய வார்த்தை 865 இடங்களில் பழைய ஏற்பாட்டிலும்
பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இரண்டு வார்த்தைகளுக்குமே தமிழ் அர்த்தம் “*அதிகாரம்*”
என்பது.
கேள்விக்கு பதிலளிக்கும்படியாக :
தமிழ் வேதாகமத்தில் நாமத்தினாலே என்று தேடிய பொழுது :
பழைய ஏற்பாட்டில் - 12 வசனங்களிலும்
புதிய ஏற்பாட்டில் - 49 வசனங்களிலும் காணப்படுகிறது.
*முதவாவதாக*:
இதில்
உபா. 18:19,
20, 22,
1சாமு. 17:45,
25:9,
2சாமு. 3:12,
6:18,
சங். 118:26,
எரே. 11:21
எசே. 3:17,
33:7,
தானி. 9:6 வசனங்களில் வரும் *கர்த்தரின் நாமத்தினாலே*
எனப்படுவது குறிப்பாக இஸ்ரவேலின் தேவன் என்ற அர்த்தஞ்கொள்ளும் யெகோவா என்று
சொல்லப்படுகிறது.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால் யாத். 3:14ன்படி ஏலோஹிம்
என்ற பன்மையான வார்த்தையே மையமாக உபயோகப்படுத்தப்படுகிறது.
யாத். 3:14 அதற்குத் *தேவன்*: இருக்கிறவராக இருக்கிறேன்
என்று மோசேயுடனே சொல்லி,
*இருக்கிறேன் என்பவர்* என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று
இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.
மேலும் வெவ்வேறு மொழிபெயர்ப்புகளை கவனிக்கவும்:
தமிழ் : யாத். 6:2 மேலும், தேவன் மோசேயை நோக்கி: *நான் யேகோவா*,
ஆங்கிலம்:
(ASV)
And God spake unto Moses, and said unto him, *I am Jehovah*:
(BBE)
And God said to Moses, *I am Yahweh*:
(Darby)
And God spoke to Moses, and said to him, *I am Jehovah*.
(DRB)
And the Lord spoke to Moses, saying: *I am the Lord*
(ESV)
God spoke to Moses and said to him, "*I am the LORD*.
(Geneva)
Moreouer God spake vnto Moses, and sayd vnto him, *I am
the Lord*,
(GNB)
God spoke to Moses and said, "*I am the LORD*.
(HRB)
And Elohim spoke to Moses and said to him, *I am YAHWEH*.
(Hebrew-English
Bible) vay·dab·Ber spake E·lo·Him And God 'el- about mo·Sheh;
unto Moses vai·Yo·mer and said 'e·Lav about 'a·Ni I am *Yah·weh*. unto him *I [am] the LORD*
(JPS)
And God spoke unto Moses, and said unto him: '*I am the
LORD*;
(KJV)
And God spake unto Moses, and said unto him, *I am the LORD*:
(KJV+)
And God spake unto Moses, and said unto him, *I am the
LORD*:
(KJV-1611) And God spake vnto Moses, and said vnto him, *I am
the Lord*.
*இரண்டாவதாக*:
புதிய ஏற்பாட்டிற்கு வரும்போது:
மத்தேயு துவங்கி யோவான் 17:12 வரைக்கும் 27 வசனங்களில் சொல்லப்பட்ட *கர்த்தருடைய நாமத்தினாலே* என்பது
பிதாவை குறிக்கிறது.
கிறிஸ்துவின் சிலுவைமரணத்திற்கு பின்பு :
பிதாவானவர் இயேசுவைக் கர்த்தர் என்றும் கிறிஸ்து என்றும்
அழைக்கிறதைப் பார்க்கிறோம்.
ஆகையினால்,
நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று
இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான். அப் 2:36
அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக்
கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி,
அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர்
மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை
உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின்
கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய
தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும்,
எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். பிலிப்
2:6-11
*மூன்றாவதாக* :
யோவான் 20:31ல் துவங்கி யாக்கோபு 5:14 முடிய “22 வசனங்களில்”
நாமத்தினாலே என்பது – *தெளிவாக இயேசு கிறிஸ்துவைக்* குறிக்கிறது.
அப்போஸ்தலர்களும் ஆதி கிறிஸ்தவர்களையும் இயேசு
கிறிஸ்துவின் நாமத்தினாலே ஒருவரை ஒருவர் வாழ்த்தினார்கள். பிதாவனாவர் இயேசு
கிறிஸ்துவிற்கு கொடுத்த அதிகாரத்தின்படி வாழ்த்துதலும் கட்டளைகளும் கொடுக்கபட்டுகிறது.
சில வசனங்களைக் கீழே குறிப்பிடுகிறேன் :
அப் 2:38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும்
பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம்
பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப்
பெறுவீர்கள்.
அப் 4:30 *உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின்
நாமத்தினாலே* அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக்
குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய
ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும்
என்றார்கள்.
பிதா குமாரன் ஆவியானவர் – மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்.
1யோ. 5:7
பிதாவின் *அதிகாரத்தில்* கிறிஸ்துவானவர் செயல்பட்டார். யோ.
16:15
*நான்காவதாக*:
வாழ்த்துதல் என்று வரும்போது – புதிய ஏற்பாட்டில் கர்த்தரின்
நாமத்தில் வாழ்த்துதலை தெரிவித்ததாக வேதத்தில் காணமுடியவில்லை.
வாழ்த்துதல் *பரிமாறிக்கொள்ளப்படுகிறது*. கட்டளை அல்ல !!
கிறிஸ்தவர்கள் நாம் அனைவரும் கிறிஸ்துவை தலையாக கொண்டு சரீரமாக
இருப்பதால் *கர்த்தருக்குள்* உங்களை வாழ்த்துகிறேன் என்று எழுதுகிறார். ரோ. 16:22
மேலும் 1கொரி. 16:19ல் ஆசியா நாட்டிலுள்ள சபையார் *உங்களை
வாழ்த்துகிறார்கள்*. ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் தங்கள் வீட்டிலே கூடுகிற
சபையோடுங்கூடக் *கர்த்தருக்குள் உங்களை மிகவும் வாழ்த்துகிறார்கள்* என்று பார்க்கிறோம்.
எந்த ஒரு செயலும் - கர்த்தரின் நாமத்தில்
(அதிகாரத்தின்படி) செயல்படுத்தப்படுகிறது.
வாழ்த்துதலோ *கர்த்தருக்குள் பரிமாறிக்கொள்ளப்படுகிறது*.
ஒனாமா என்ற அர்த்தஞ்கொள்ளும் அதிகாரத்தோடு இல்லாமல் வெறும்
பெயரளவில் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் *பெயராலே* வாழ்த்துதல் சொல்வது தவறு
என்று சொல்வதைக் காட்டிலும் அறியாமை எனலாம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக