#972 - *கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றால் என்ன?*
*பதில்*
கேட்கிறதற்குக் காதுள்ளவன்
கேட்கக்கடவன் என்ற இந்த வாக்கியம் புதிய
ஏற்பாட்டில் 13 வசனங்களில் வருகிறது.
கீழ்வரும்
குறிப்புகளில் காணலாம் :
மத்.
11:15, மத்.
13:9, மத். 13:43, மாற்கு 4:9, லூக்கா 8:8, லூக்கா 14:35, வௌி.
2:7, வௌி. 2:11, வௌி. 2:17, வௌி. 2:29, வௌி. 3:6, வௌி. 3:13,
வௌி. 3:22
அத்தனை
பேருக்கும் காது உள்ளது.
சாலையில்
நடந்து போகும் போது எத்தனையோ சம்பவங்களை வாகனங்களை கட்டிடங்களை ஆட்களை கண்
காண்கிறது.
ஆனால்
வீடு வந்து சேர்ந்ததும் – எத்தனை கட்டிடங்களை, வாகனங்களை, ஆட்களை
நாம் பட்டியலிட்டு சொல்லமுடியும்?
கண்கள்
கண்டது உண்மை – ஆனால் கவனித்து உற்றுப் பார்த்தது ஒன்றோ இரண்டோ இருக்கலாம். அவைகள்
மாத்திரமே நினைவில் இருக்கும்.
பல
வசனங்கள் மனப்பாடமாக சொல்பவர்கள் என்றாவது அந்த வசனத்திற்கு அர்த்தம்
புரிந்திருப்பார்களா என்றால் மிக சவாலான எண்ணிக்கையிலேயே இருப்பார்கள்.
யோ.
3:16ஐ உறக்கத்தில் கேட்டாலும் சொல்லக்கூடியவர்களிடத்தில் தேவத்துவத்தைக் கேட்டால்
திரித்துவம் என்பார்கள் !!
கேட்பதற்கு
காது இருந்தும் அதை கேளாமற் போனவர்கள்.
அதாவது
வசனத்தைக்
கவனிப்பது இல்லை
வசனத்திற்குக்
கீழ்படிவது இல்லை
வசனத்தை
ஏற்றுக்கொள்வது இல்லை
வசனத்தைப்
புரிந்துக் கொள்வதற்கு மனம் இல்லை.
இயேசு
கிறிஸ்து சொல்லவேண்டிய உன்னதமான காரியங்களை சொல்லியபின்பு இந்த வாக்கியத்தை சொன்னார்
– கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன் !!
இவர்கள்
கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து
குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும்
இருக்கும்படிக்கு, இந்த ஜனத்தின் இருதயம் கொழுத்திருக்கிறது;
காதுகளினால் மந்தமாய்க் கேட்டுத் தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள். அப்.
28:27
சத்தியத்தை
தெளிவாக எடுத்து சொன்னாலும்,
அதைக் கேட்கவும் உணரவும், கீழ்படியும், தன்னை மாற்றிக்கொள்ளவும் விரும்பாதவர்கள் – ஆக்கினையை அடையும்படிக்கு நியமிக்கப்படுகிறார்கள்
!!
...
சத்தியத்தை விசுவாசியாமல் *அநீதியில் பிரியப்படுகிற யாவரும்
ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு*,
அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன்
அவர்களுக்கு அனுப்புவார். 2தெச. 2:11-12
முக்கியமாக
இந்த காலங்களில் – வசனம் அனைவரின் விரல் நுனிகளில் உள்ளது. ஆனால் இருதயமோ கீழ்படியாமையிலும்
தங்கள் சொந்த கொள்கையிலும் தாங்கள் சார்ந்திருக்கும் பலகைகளின் கோட்பாடுகளிலும் தீவிரமான
பற்றுதலை வைத்துக்கொண்டு – வேதத்திற்கு செவி சாய்க்க மனம் இருண்டு கிடக்கிறது.
கிறிஸ்துவை
உற்று நோக்கி - கேட்கிறதற்கு காதுள்ளவன் கூர்ந்து கவனிக்கக்கடவன்.
..
பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம்
அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக்
*கவனித்துப்பாருங்கள்*. எபி. 3:1
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப் குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக